- Wednesday
- January 22nd, 2025
அடுத்து வரப்போகும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் ஈபிடிபி கட்சி இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. தற்போதைய சிறீலங்காவின் அதிபரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவருமான மைத்திரிபாலசிறிசேனவின் ஆலோசனைக்கமைய, கட்சியின் பொதுச் செயலர் மகிந்த அமரவீர நட்புக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையிலீடுபட்டுள்ளார். முதற்கட்டமாக, எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன்...
இலங்கையர்கள் 46 பேர் பணப் பதுக்கல் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளமை குறித்து பனாமா பேப்பர்ஸ் மூலம் தெரியவந்துள்ளது. இவர்களில் இலங்கையின் பெரும் வர்த்தகர்களான போரா சமூக முஸ்லிம்கள் 13 பேர் மற்றும் ஐந்து தமிழர்களும் இடம்பெற்றுள்ளனர். சிங்களவர்கள் 25 பேரில் லக்பிம பத்திரிகை மற்றும் சுமதி குரூப் நிறுவனங்களின் தலைவரும், அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவருமான...
2017ம் ஆண்டில் நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தேவையான மருந்துகளை பிரச்சினையின்றி வழங்க புதிய வேலைத் திட்டம் ஒன்றை செயற்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ் வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் பல்வேறு காரணங்களுக்காக சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என,...
தொடர் எதிர்ப்புகள் காரணமாக, இலங்கையில் நடைபெறவிருந்த தன்னுடைய இசை நிகழ்ச்சியை ஏ.ஆர்.ரகுமான் ரத்து செய்திருக்கிறார். நெஞ்சே எழு என்கிற பெயரில் இசை நிகழ்ச்சிகளை ஏ.ஆர்.ரகுமான் நடத்தி வருகிறார். தமிழ்நாட்டைத் தொடர்ந்து வருகின்ற 23ம் தேதி இலங்கையில் இவரது இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. இலங்கையில் முதன்முறையாக ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் என இதற்காக விளம்பரங்களும் செய்யப்பட்டன....
அண்மைக்காலமாக நாட்டில் காணப்படும் தொடர் வரட்சியால் மலையகத்தில் நீர்தேக்கங்கள் வற்றி வருகின்றன. இந்த நிலையில் மலையகத்தில் உள்ள மஸ்கெலியா, மவுசாகலை நீர்த்தேக்கமும் தற்போது முற்றாக வற்றியுள்ளது. இந்த நீர்தேக்கம் அமைக்கும் போது நீருக்குள் சங்கமமான பழைய மஸ்கெலியா நகரத்தின் பாகங்கள், வரலாற்றுமிக்க கோயில், விகாரை, பாலங்கள், முஸ்லிம்பள்ளி வாசல், பிள்ளையார் கோவில், கிருஸ்தவ தேவாலயம் உட்பட...
சாவகச்சேரியில் மீட்கப்பட்ட வெடிபொருட்களில் உள்ளடங்கியிருந்த சி-4 பிளாஸ்டிக் வெடிமருந்து, மிகவும் பழைமையானது என்றும், அது வெடிக்கும் திறனை இழந்து விட்டதாகவும், காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர, சாவகச்சேரி- மறவன்புலவில் உள்ளிட்ட வீட்டில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்களில், மூன்று பொதிகளில் 10 கிலோ சி-4 பிளாஸ்டிக் வெடிமருந்தும் காணப்பட்டது....
புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட புலிகளின் சீருடைத் தொப்பி ஒன்று கொழும்பு நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் விரைவு அஞ்சல் நிலையம் (கூரியர்) ஒன்றிலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது. இந்த பொதியில் இருந்து ரின் மீன், ஆடைகள் மற்றும் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பொதி வவுனியாவில் இருந்து மோதறைக்கு வந்திருந்த அந்தப் பொதியில் எந்தவிதமான பதிவு இலக்கங்களும்...
மட்டக்களப்பில் 13 வயது சிறுமியையும் 19 வயது யுவதியையும் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என இரு முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் வக்கிர சம்பவம் மட்டக்களப்பு கிரான் தெற்கு வாகனேரி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமியையும் யுவதியையும் கடத்திச சென்ற முஸ்லிம் இளைஞர்கள் இருவரையும் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் மறுநாள்...
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கும், விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கும் பங்களிப்புச் செய்யும் எல்லா அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி விருதுகள் வழங்கும் ஒரு நிகழ்ச்சித்திட்டத்தை இவ்வருடம் முதல் நடைமுறைப்படுத்தவுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மேலும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்குப் பங்களிப்புகளை வழங்கும் அதிகாரிகளின் பதவி உயர்வு தொடர்பில் முன்னுரிமை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும்...
காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பதினைந்து வயது நிரம்பிய மாணவி, இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தமது கணவருடன் ஊவா – பரணகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளர். இச்சம்பவம் ஊவா – பரணகமையில் 05.04.2016 அன்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவி பாடசாலை சென்று வீடு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் ஊவா – பரணகமைப்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் விவசாயிகளுக்கான உற்சவத்திற்காக மூன்று கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்வுக்கான உணவு, அலங்காரம், பஸ்களில் ஆட்களை அழைத்து வருதல் மற்றும் பரிசுப் பொருட்களுக்காக இந்த பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும், இதற்கான விலைப் பட்டியல் தன்வசம் உள்ளதாகவும் அவர்...
இலங்கையில் வைபை வசதியை மேலும் விரிவுபடுத்துவதற்காக கூகுள் பலூன் வேலைத் திட்டத்தை அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கும் அமெரிக்காவின் Social Capital நிறுவனத்தின் நிறுவுனரான ஷமத் பலிஹபிட்டிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் வைபை வசதியை மேலும் வலுப்படுத்தும் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக கடந்த வருடம் ஜூன் 28ம் திகதி கூகுள் மற்றும்...
'இஸ்லாமிய அடிப்படை' வாதம் மற்றும் முஸ்லிம் பயங்கரவாதம் செயற்படுகின்ற வெளிநாடுகளில் இருந்து வெளிநாட்டுக் கல்வி பயின்று, தொழில் புரிந்து அல்லது வேறு பணிகளுக்காகச் சென்று திரும்பி வருகின்ற முஸ்லிம் இனத்தவர்கள் மற்றும் இந்நாட்டிலுள்ள இனங்காணப்பட்டுள்ள கடும்போக்காளர்கள் ஆகியோரின் குடிவரவு மற்றும் குடியகல்வுச் செயற்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன' என்று சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல...
விடுமுறைக்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக அதிபரின் அறைக்கு சென்ற ஆசிரியையைத் தும்புத்தடியால் தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட களுத்துறை மஹாநாம வித்தியாலயத்தின் அதிபர் யமுனா நயனா காந்தி, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர், களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில், நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் செல்வதற்கு, நீதவான் சந்திம...
தமிழ்-சிங்கள புத்தாண்டு சேவையில் 3,000 பஸ்களை ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாகவும் அந்த பஸ்கள் யாவும், 8ஆம் திகதிமுதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் இலங்கை போக்குவரத்து சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது. 25ஆம் திகதி வரையிலும் ஈடுபடுத்தப்படும் இந்த விசேட பஸ் சேவையின் போது, பயணிகளிடமிருந்து அறவிடும் பஸ் கட்டணத்தை ஒன்றரை மடங்காக அதிகரித்து அறவிடுவதற்கு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இந்த...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை, முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் உள்ள பிரதமர் காரியாலத்திலேயே இச்சந்திப்பு, சுமார் 20 நிமிடங்கள் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு, அதற்குப்...
மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட 69 ஆயிரத்து 992 ஏக்கர் நிலப் பரப்பில், மைத்திரி அரசு 2 ஆயிரத்து 565.5 ஏக்கரை மாத்திரமே விடுவித்துள்ளது. இது அபகரிக்கப்பட்ட நிலப் பரப்பின் 3.6 சதவீதமாகும் என்று பிரிட்டன் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. "இலங்கை அரசின் மீது மேற்கொள்ளப்பட்ட சர்வதேச சமூகத்தின் அழுத்தம்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ அதிகாரிகள் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தகவலை மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவிலுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்படி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருக்கும் இராணுவத்தினரில் 50 பேர் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக கடமையிலிருந்து நீங்கும்படி இராணுவத் தலைமையகம்...
பாடசாலையிலிருந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்த மாணவி கடத்தப்பட்டு, பாலியல் வல்லுறவிற்கு உற்படுத்தப்பட்டமை குறித்து, 34வயதுடைய திருமணமான நபர் ஒருவர் 04.04.2016 அன்று இரவு எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தெமோதரை தமிழ் வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்று வந்த 9வயது நிரம்பிய மாணவியே இவ்வாறு பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டவராவார். அம்மாணவி, ஆபத்தான நிலையில்...
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்குடன் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக உருவாக்கியதன் பின்னர், இன்று முதல் முறையாக கூடியுள்ள அச் சபையில் ஏழு உப தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, அரசியலமைப்பு சபையின் தலைவராக சபாநாயகர் கரு ஜெயசூரிய செயற்படுவதோடு, செல்வம் அடைக்கலநாதன், திலங்க சுமதிபால, கபீர் கசீம், சுதர்ஷனி பிரணாந்து பிள்ளை, திலக் மாரப்பன, மஹிந்த யாப்பா...
Loading posts...
All posts loaded
No more posts