- Wednesday
- January 22nd, 2025
"சிங்கள மாநிலம், தமிழ் மாநிலம் என இலங்கையை இரண்டாகப் பிளவுபடுத்த முயற்சிக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உடன் கைதுசெய்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள்."- இவ்வாறு அரசை வலியுறுத்தியுள்ளது கடும் போக்கு இனவாத அமைப்பான சிங்கள ராவய. அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அப்பதவியிலிருந்து விலகி சிங்களவர் ஒருவருக்கு இடமளிக்க வேண்டும் என்றும்...
பொதுமக்களுக்கு சுமை அதிகரிக்காத வகையில் வற் வரியை அமுல்படுத்துவது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அமைச்சரவைப் பத்திரங்கள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றுக்கு அனுமதி வழங்கிய பின்னர், வற் வரி (பெறுமதிசேர் வரி) விவகாரம் பற்றி வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போதே...
ஓரினச் சேர்க்கை மூலமே அதிகளவு எயிட்ஸ் நோய் பரவுவதாக, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ் வருடம் அடையாளம் காணப்பட்டுள்ள எயிட்ஸ் நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களே என, பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இவ் வருடத்தின் கடந்த 3 மாதங்களுக்குள் 70 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம்...
தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், ஆயுதங்களுடன் காலியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் எந்தவொரு வரி யோசனையையும் செயற்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொருளாதார நிபுணர்கள் என்ன கூறினாலும், மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த முடியாது என, அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் பற்றி சிந்திக்காத பொருளாதார நிபுணர்கள் இருப்பின் அவர்கள் பணியை விட்டு நீங்கிச் செல்ல முடியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்....
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உடல் நிலை மகிழ்ச்சியளிக்கும் மட்டத்தில் இல்லை என அவரது குடும்ப மருத்துவர் கூறியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மதுபானம் அருந்துவதை குறைத்து கொள்ளுமாறும் இல்லையென்றால், கல்லீரலுக்கு மேலும் பாதிப்பு ஏற்படலாம் எனவும் மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனால், குறைந்தது மூன்று மாதங்களுக்காவது மதுபானத்தை மட்டுப்படுத்துமாறும் மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக...
எதிர்வரும் மே மாதம் இரண்டாம் திகதி முதல், பெறுமதி சேர் வரி (வட் வரி), 15 சதவீதம் வரையில் அதிகரிக்கப்படும் என்றும் இதனால் நுகர்வோர் மாத்திரமன்றி,சிறு மற்றும் மத்தியதர வியாபாரிகளும் பாதிக்கப்படுவர் என்று, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது. சுகாதாரச் சேவைகள், மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனைகள் போன்று தகவல் தொடர்புப்...
தேசிய அரசாங்கம் அப்பாவி மக்களின் வயிற்றில் அடித்துவிட்டது. வற் வரி 15 வீதமாக அதிகரிக்கப்படுவதன் காரணமாக தொலைபேசி கட்டணங்களும் தனியார் மருத்துவ ஆலோசனை சேவை கட்டணங்களும் பாரியளவில் அதிகரிக்கப்படவுள்ளன. இதன்மூலம் சாதாரண மக்களே பாரியளவில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சருக்குமிடையில் இன்று இடம்பெற இருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சுகவீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண நிலமைகள் தொடர்பிலும், காணி அபகரிப்புத் தொடர்பிலும், 65,000 வீட்டுத்திட்டம் தொடர்பிலுமே இந்தக் கலந்துரையாடல்...
இந்த முறை புத்தாண்டிற்கான சுப நேரம் கணிக்கப்பட்டது அரசாங்கத்தின் தேவைக்கு ஏற்பவே என்று ஜோதிடர்கள் தன்னிடம் தெரிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். கண்டி மல்வத்து அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷவிடம், புத்தாண்டு சுப நேரம் குறித்து ஊடகவியலாளர்கள் கருத்து கேட்ட போது மஹிந்த ராஜபக்ஷ...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படலாம் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பணச்சலவை குற்றச்சாட்டு சம்பந்தமாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு நாமல் ராஜபக்சவுக்கு எதிராக விசாரணைகளை நடத்தி வருவதுடன் பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் மரணம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்தி வருகிறது. இந்த...
மாகாணங்களின் தேவைக்கேற்ப மாநிலங்களை உருவாக்க முடியாது என வடக்கு மாகாண சபையின் தீர்வுத் திட்டத்துக்குத் தனது எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறார் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ. வடக்கு, தெற்கு என இரு மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என வட மாகாண சபை தனது அரசமைப்புத் தீர்வை முன்வைத்தது. இந்நிலையில் தங்காலை கால்டன் இல்லத்தில் நேற்று...
மாத்தளை லக்கல காவல்துறை நிலையத்தில் பாதுகாப்புப் பெட்டி ஒன்றில் பாதுகாப்பாக பூட்டிவைக்கப்பட்டிருந்த ஒரு ரி-56 துப்பாக்கியும், 5 கைத்துப்பாக்கிகளும் களவாடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இன்று அதிகாலை சாரம் மற்றும் சேட் அணிந்த ஒருவரால் பாதுகாப்புப் பெட்டியில் பூட்டிவைக்கப்பட்டிருந்த ரி-56துப்பாக்கி ஒன்றும், ஐந்து கைத்துப்பாகிகளும் களவாடப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபர் லக்கல உப பாதுகாப்பு...
தமிழ் - சிங்கள சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில், மது போதையில் வாகனம் செலுத்துத்துவோரின் வாகன அனுமதிப்பத்திரத்தை மீண்டும் கையளிக்கப்போவதில்லை என்றும், நேற்று திங்கட்கிழமை முதல் இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்தார். 'இதற்கு முன்னரும், மது போதையில் வாகனம் செலுத்தியவர்களின்...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வீதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. நாமல் ராஜபக்ச நடனமாடும் போது, அவரை சுற்றி, சிறுவர்களும் சிறுமிகளும் துணை நடனமாடுகின்றனர். தனது மகன் நடனமாடுவதை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வேடிக்கை பார்த்தவாறும் கைகளையும் தட்டுகிறார். இந்த காணொளியை அருகில் இருந்த ஒருவர் படமாக்கி இணையத்தளத்தில்...
புதுவருட தினத்தையொட்டில், ஏப்ரல் 13 மற்றும் 14ஆம் திகதிகளில், நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானசாலைகள் அனைத்தும் மூடப்படும் என்று மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொள்வனவு செய்த பெறுமதிமிக்க மலர்வலயங்கள் தொடர்பிலான நிதி முறைகேடு குறித்த விசாரணைகளை சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் தடுத்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச, பொதுமக்களின் வரிப்பணங்களின் மூலம் பெறுமதி மிக்க மலர்வலயங்களை கொள்வனவு செய்துள்ளார். இதன்போது அவர் மலர்வலயங்களின் பெறுமதியை காட்டிலும் அதிக விற்பனை விலைகளிலேயே அதற்கான ரசீதுகளை பெற்றுள்ளார்....
வட மாகாண சபையினால் முன்மொழியப்பட்டுள்ள அரசியல் தீர்வு யோசனை தெற்கில் இனவாதத்தைத் தூண்டிவிடும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். “யுத்தம் நிறைவுக்கு வந்து நாட்டில் நல்லிணக்கம் உருவாகி வரும் நிலையில் வட மாகாண சபை முன்மொழிந்துள்ள யோசனை காலத்துக்கு பொருத்தமற்றது.” என்றும் அவர்...
சித்திரைப் புத்தாண்டு சமயத்தில் பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கைகளின் பயன்பாட்டின் போது கவனமாக செயல்படுமாறு இலங்கை கண் அறுவை சிகிச்சை விஷேட வைத்தியர் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தீப்பொறி பரவல் காரணமாக சிறுவர்களுக்கு அதிக பாதிப்புக்கள் ஏற்படலாம் என்று அந்த சங்கம் கூறுகின்றது. அதன்காரணமாக பிள்ளைகளின் கண்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு விஷேட வைத்தியர் தர்மா இருகல்பண்டார...
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று (08) முதல் விஷேட பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை கூறியுள்ளது. பயணிகள் தமது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக இந்த சேவை இடம்பெறவுள்ளதாக அந்த சபையின் பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக கூறினார். அத்துடன், புத்தாண்டின் பின்னர் வெளிப்பிரதேசங்களிலிருந்து விஷேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும்...
Loading posts...
All posts loaded
No more posts