- Wednesday
- January 22nd, 2025
இலங்கை அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் கருத்துச் சொல்ல விரும்புவர்களுக்கு, அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை கேட்டறியும் குழு சந்தர்ப்பமளித்துள்ளது. சட்டத்தரணி லால் விஜேநாயக்க தலைமையிலான 20 பேரடங்கிய குழுவே இவ்வாறு சந்தர்ப்பமளித்துள்ளது. www.yourconstitution.lk என்ற இணைத்தளத்தின் குறிப்பிடப்பட்டுள்ள கருப்பொருட்களுக்கு அமைவாக, தங்களுடைய யோசனைகளை தனியாகவோ அல்லது குழுவாகவோ முன்வைக்கலாம் என்றும் அக்குழு அறிவித்துள்ளது. குழுவின்...
இலங்கையிலுள்ள பெண்கள் மற்றும் பிள்ளைகளுக்காக மிகவும் பாதுகாப்பான மற்றும் துன்புறுத்தல்கள் அற்ற சூழலை உருவாக்குவதற்கான சட்டக்கொள்கையை தயாரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய இந்த திட்டங்களை மிகவும் செயற்றிறனுடன் முன்னெடுப்பதற்கான அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றினூடாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பெண்கள் மற்றும் பிள்ளைகளுக்காக மிகவும் பாதுகாப்பான மற்றும் துன்புறுத்தல்கள் அற்ற சூழலை உருவாக்கும்...
பிரபாகரனால் துப்பாக்கியால் செய்ய முடியாது போனதை சம்பந்தன் அரசியலால் செய்ய முற்படுவதாக, பிவிதுரு ஹெல உருமய தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கை இணைத்து சுயாதீன அரசாங்கமாக்குவது தமிழீழம் மேலும் தலைதூக்குவதற்கான நடவடிக்கை என அவர் கூறியுள்ளார்....
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் சந்தேகநபர்களை தொடர்ந்தும் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி, சட்டமா அதிபர் முன்வைத்துள்ள வேண்டுகோள் குறித்து எழுத்துமூல வாதங்களை முன்வைக்குமாறு, கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் தற்போது சுமார் ஒரு வருட காலமாக காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு...
புனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய, தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதியான ராம் என்பவர், பயங்கரவாதப் புலனாய்வுப்பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது கணவன், திருக்கோவில் - தம்பிலுவில் பிரதேசத்திலுள்ள தமது வீட்டிலிருந்து, இனந்தெரியாதோரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) கடத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்நிலையிலேயே பொலிஸாரினால் இந்தத்...
மாகாண சபை ஒன்றில் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் பிரேரணைகளை நிறைவேற்றுவதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது. இதனைத் தெரிந்தும் வடமாகாணசபையை ஆளும் அரசியல்வாதிகள் இவ்வாறு பிரேரணைகணை நிறைவேற்றுவது வியப்பளிக்கிறது என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களை அமைக்கவேண்டுமென வட மாகாணசபையின் பிரேரணைகளை நிறைவேற்றும் போது நாட்டு...
மத்துகம, ஓவிட்டிகல, பட்டமுல்லகந்த பௌத்த மத்திய நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட அவுக்கன சிலையினை ஒத்த தெற்காசியாவின் மிகஉயரமான நிமிர்ந்து நிற்கும் புத்தர் சிலையினை திறந்து வைக்கும் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் முற்பகல் இடம்பெற்றது. 135 அடி உயரம் கொண்ட இந்த புத்தர் சிலையானது மாகாண சபை உறுப்பினர் ஜகத் பின்னகொட அவர்களின்...
இலங்கையின் தமிழ் பேஸ்புக் பயனர்கள் முதன்முறையாக ஒழுங்கமைக்கும் ஒன்றுகூடல் நிகழ்வொன்று எதிர்வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பான ஊடக அறிக்கை வருமாறு: Facebook தமிழா-2016 ஒன்றுகூடல் நிகழ்வு ஊடக அறிக்கை திகதி: 24/04/2016 இடம்: AVS மண்டபம், #8, லோறன்ஸ் வீதி, பம்பலப்பிட்டி நேரம்- முப 10.00 – பிப 2.00 வரை இலங்கை சமூக...
நாட்டில் பிரிவினையினை தூண்டுவதாகவும் புலிகளை நியாயப்படுத்தி ஆயுதப்போராட்டத்தை மீண்டும் தோற்றுவிக்கும் வகையிலும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் ஆகியோர் செயற்படுவதாகக் கூறியும் உடனடியாக இவர்கள் இருவரையும் கைதுசெய்து விசாரிக்குமாறு வலியுறுத்தியும் பொதுபல சேனா, சிங்கள ராவய , ராவணா பலய ஆகிய அமைப்புகள் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளன. பொலிஸார் விசாரிக்க...
"ஒற்றையாட்சி முறைமை, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை மற்றும் நாடாளுமன்றத்துக்கு உச்ச அதிகாரம் போன்றவை நீக்கப்பட்டு முழுமையான சமஷ்டி முறைமையின் கீழ் வழங்கப்படும் அதிகாரப் பகிர்வுதான் அர்த்தமுள்ள தீர்வாக அமையும். தற்போதைய அரசமைப்பைக் கொண்டு இதைச் செய்ய முடியாது. ஆகவே, புதிய அரசமைப்புத் தேவைப்படுகின்றது." என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி...
"புதிய அரசமைப்பையும் அதனூடாக வரப்போகும் அதிகாரப் பகிர்வையும் அர்த்தமுடையதாக - அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக ஆக்குவதற்கு அரசமைப்பு உருவாக்கத்தின் முயற்சிக்கு தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு முழுமையான ஆதரவை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம்." இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். புதிய அரசமைப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு...
பொலிஸ் திணைக்களம், இனிமேல் இலங்கை பொலிஸ் என அழைக்கப்படும் என்று புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று பூஜித்த ஜயசுந்தர பொலிஸ்மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து இடம்பெற்ற முதலாவது ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறினார். கடந்த காலங்களில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் நீண்ட இடைவௌி இருந்ததாகவும் இதன்...
பாடசாலை மாணவர்களின் சீருடைத் துணியைக் கொள்வனவு செய்வதற்காக கொண்டுவரப்பட்டுள்ள வவுச்சர் வழங்கும் முறையை ரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 2017ஆம் ஆண்டில், இந்த வவுச்சர் முறையை ரத்து செய்து, இதுவரை காலமும் இருந்துவந்தது போல், பாடசாலை ரீதியில் சீருடைக்கானத் துணிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கடிதம்...
ஜெனிவாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான குழுவை பங்கேற்கவைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவமிக்கதாக கருதப்படுவதால் அரசாங்கம் உயர்மட்டக்குழுவை...
கன்னியா வெந்நீரூற்று திட்டமிட்ட ரீதியில் சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இராவணன் தனது தாய்க்கு இறுதிக்கிரியைகள் செய்வதற்காக தனது உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்தியதாக வரலாறுச் சான்றுகள், ஐதீக, புராணக் கதைகள் மற்றும் செவி வழிக்கதைகளும் உள்ளன. கன்னியா வெந்நீரூற்றுககு அருகில் ஒரு பிள்ளையார் கோவிலும் சிவன் கோவிலும் காணப்பட்டன. தற்போது...
புதிய பொலிஸ்மா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பூஜித் ஜயசுந்தரவுக்கு பல்வேறு தரப்புக்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. நாட்டில் பெரும்பான்மை மக்களின் நல்ல அபிப்பிராயம் பெற்ற ஒருவர் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை காரணமாக பொதுமக்களின் சிவில் அமைப்புகள் பலவும் புதிய பொலிஸ்மா அதிபருக்கான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளன. அத்துடன் இலங்கை வரலாற்றில் வடக்கிலும், கிழக்கிலும் பணியாற்றி...
மஹரகம பிரதேசத்தில் நேற்று பெய்த கடும் மழையின் போது ஆமைக் குஞ்சுகள் மேலிருந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மஹரகம வத்தேகெதர கெமுனு வீதி இலக்கம் 227/25 என்ற முகவரியைக் கொண்ட வீட்டின் மீது நேற்று மாலை 4.30 மணியளவில் இவ்வாறு ஆமைக் குஞ்சுகள் விழுந்துள்ளன. கடும் காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்த வேளையில் வானிலிருந்து கூரை மீத...
36 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக தமிழ் அமைச்சர் ஒருவரின் கையில் தற்காலிகமாக காவல்துறை நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு சட்டம், ஒழுங்கு பதில் அமைச்சராக டி.எம். சுவாமிநாதன் அதிபர் மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தற்காலிகமாக காவல்துறைத் திணைக்களம் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டு சிறீலங்கா அதிபராக ஜே.ஆர்.ஜெயவர்த்தன பதவிவகித்தபோது, அப்போது உள்நாட்டு...
அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்க முற்பட்ட சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் ஒன்பது பேர் நீர்கொழும்பு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஐந்து ஆண்களும், பெண் ஒருவரும், இரண்டு சிறுவர்களும் சிறுமி ஒருவரும் அடங்கியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. ஆழ்கடல் கப்பல் ஒன்றின் மூலம் நீர்கொழும்பு துறைமுகத்தில் இருந்து குறித்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புலனாய்வு பிரிவினர் வழங்கிய...
இலத்திரனியல் ஊடகங்களை கட்டுப்படுத்த சுயாதீன அதிகார சபையொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது. பிரித்தானியாவில் செயற்படுத்தப்படும் முறைமையை போன்றே, இவற்றை செய்வதற்கு அரசாங்கம் ஆலோசித்துள்ளது. இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த தீர்மானத்தை அரசாங்கம் எட்டியுள்ளதாக அறியமுடிகின்றது.
Loading posts...
All posts loaded
No more posts