மைத்திரி, விக்கி சந்திப்பு திகதி குறிக்கப்படாமல் ஒத்திவைப்பு!

வடக்கு மாகாண காணி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அரச அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற இருந்த சந்திப்பு திகதி குறிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண காணி விவகாரம் தொடர்பில் நேற்றைய தினம் சந்திப்பு இடம்பெற இருந்தது. கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில்...

மஹிந்த விசுவாசிகளின் பதவி பறிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவதற்கும் அதன் கீழ்மட்ட அரசியல் கட்டமைப்பை தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருப்பதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிரமாக முயற்சித்து வருகின்றார். இதன் ஓர் அங்கமாக கட்சியை விமர்சிப்பவர்களிடமிருந்து தொகுதி, மாவட்ட அமைப்பாளர் பதவியைப் பறித்து அதை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கி வருகின்றார். அந்தவகையில் சு.கவில் இருந்துகொண்டு மஹிந்த ஆதரவு அணியுடன் இணைந்து அரசியலை...
Ad Widget

சம்பள அதிகரிப்பு: தனியார்துறைக்கு அரசு எச்சரிக்கை!!!

தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்தை 2,500 ரூபாவால் அதிகரிக்குமாறு நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தை செயற்படுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், "தனியார்துறையினரின் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் சட்டம்...

இலங்கை விமானப் படை ஹெலிக்கொப்டர் விபத்து

ஹிங்குராக்கொட விமானப்படை முகாமுக்கு சொந்தமான ஹெலிக்கொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளை, குறித்த ஹெலிக்கொப்டரை அவசரமாக தரையிறக்க முற்பட்ட போதே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் ஹெலிக்கொப்டர் சிறிதளவு சேதம் அடைந்துள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் இந்த விபத்தினால் எவருக்கும் காயமோ அல்லது உயிரிழப்புக்களே ஏற்படவில்லை என, விமானப் படை ஊடகப் பிரிவு...

வடக்கில் விக்னேஸ்வரனும் தெற்கில் மஹிந்தவும் இனவாதத்தை விதைக்கின்றனர்!

வடக்கில் விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினரும் தெற்கில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினரும் இனவாதத்தை விதைப்பதாக, மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இனவாத அரசியல்வாதிகள் நாட்டில் மீண்டும் இனவாதத்தை எழுப்ப முயற்சிப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வட மாகாணத்தில் முதல்வர்...

முன்னாள் போராளிகள் கைது: நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி!

வடக்கு, கிழக்கில் முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவது தொடர்பாக அறிந்து, நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார். அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் தலைவர்கள், பிரதம ஆசிரியர்களுடன் ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்திற்கு அமைவாக, விசாரணைகள் நடத்துவதற்குரிய கலந்துரையாடல்கள் இடம்பெறுகிறது. போர்க்குற்ற...

மைத்திரியின் பக்கம் மாறினார் டக்ளஸ்!

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு அளித்து வந்த முன்னாள் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் மலையகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலரும் அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து தமது ஆதரவை பகிரங்கமாகத் தெரியப்படுத்தியுள்ளனர். பதினான்கு சிறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நேற்று மாலை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில்...

முன்னறிவிப்பின் பின்னரே சம்பந்தன் இராணுவ முகாமுக்குள் சென்றார்!

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முன்னறிவிப்புச் செய்துவிட்டே பரவிபாஞ்சான் இராணுவ முகாமுக்குள் சென்றார் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடந்த புதன் கிழமை அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சரியான நெறிமுறைகளைக் கடைப்பிடித்தே பரவிபாஞ்சான் இராணுவ முகாமுக்குள் சென்றார். இது தொடர்பில் சிறீலங்கா இராணுவத்தினரால் எந்தவொரு காவல்நிலையத்திலும்...

ஜனாதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் விட்டவர் கைது

ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவுக்கு கொலை அச்சுறுத்தல் விட்டதாகக் கூறப்படும் ஒருவர், நேற்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். இணையத்தளத்தின் ஊடாக அந்நபர், இவ்வாறு கொலை அச்சுறுத்தல் விட்டுள்ளார். மலேசியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பிய போதே, இரகசிய பொலிஸாரினால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ரணில்- சம்பந்தன் அவசர சந்திப்பு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையில் அலரிமாளிகையில் நேற்று புதன்கிழமை முக்கிய சந்திப்பு நடைபெற்றது. பரவிப்பாஞ்சானிலுள்ள இராணுவ முகாமுக்குள் எதிர்க்கட்சித் தலைவர் அத்துமீறி நுழைந்தார் எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருகின்ற நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மேற்படி சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. "பரவிப்பாஞ்சான்...

எதிர்க்கட்சி தலைவர் அத்துமீறவில்லை; இராணுவமே அத்துமீறியுள்ளது

கிளிநொச்சி பரவிபாஞ்சான் பிரதேசத்தில் இராணுவ முகாமிற்குள் எதிர்க்கட்சித் தலைவர் சட்டவிரோதமாக அத்துமீறி நுழையவில்லை என்றும் இராணுவமே அத்துமீறியுள்ளது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் கூறியதாவது, "கடந்த சில நாட்களாக, எதிர்க்கட்சித்...

சம்பந்தனின் அலுவலகம் முன் கட்சித் தலைவர்கள் சத்தியாக்கிரகம்

இரா.சம்பந்தன் உடனடியாக எதிர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டும் என முக்கியமான ஏழு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள். இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தின் முன்பு இன்று (27) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், “சம்பந்தன் எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு தகுதியானவர்...

இலங்கையில் சூறாவளிக்கு வாய்ப்பு! -வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை

இலங்கையில் சூறாவளி ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது நிலவி வரும் காலநிலையின் அடிப்படையில் இவ்வாறு பலத்த காற்று வீசக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது. நேற்று மாலை கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கடும் காற்று வீசியது. இதனால் இங்கு பல மரங்கள் முறிந்து...

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனி அரசை அமைக்க முயற்சி!! உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்!

சிறீலங்காவில் தனியரசொன்றை உருவாக்குவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கை தமிழரசுக் கட்சியும் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவாளர் அனுர லக்சிறியினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணையை தொடருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனுவின் பிரதிவாதிகளாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா,...

களனி பல்கலை மாணவர்கள் 80 பேர் வைத்தியசாலையில்!

களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் சுகயீனம் காரணமாக, களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைத் தவிர்ந்த அனைத்துப் பீடங்களும் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பிரதான வைத்திய அதிகாரிகள் மற்றும் களனி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அறிவுரைப்படியே பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் அறிவித்துள்ளார். குறித்த பல்கலைக்கழக விடுதியில் ஒருவகை நோய்...

இராணுவத்துக்கும் ரூ.10,000 சம்பள அதிகரிப்பு! ஜனாதிபதி பரிந்துரை!!

கடந்த இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டது. இந்த பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு முப்படையினருக்கும் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரை செய்துள்ளார். நேற்றைய தினம் அமைச்சரவையில் ஜனாதிபதி அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்து இந்த யோசனையை முன்வைத்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தினால் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கிய...

மரணதண்டனையிலிருந்து தப்பினர் 83 கைதிகள்!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 83 கைதிகளுக்கு அதனை ஆயுள் தண்டனையாக மாற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளித்துள்ளார். நீதி அமைச்சால் நியமிக்கப்பட்ட விசேட குழுவால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய இந்த அனுமதி கிடைத்துள்ளது என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். இதன்படி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 450 இற்கும் அதிகமான கைதிகள் தொடர்பில்...

மே தின பேரணிக்கு அரச சொத்துக்களை பயன்படுத்த வேண்டாம்

மே தின பேரணிக்கு அரச சொத்துக்களை பயன்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார் என்று வௌிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். போக்குவரத்துக்களுக்காக அரச பஸ்களை பயன்படுத்துவதாயின் அதற்கான பணத்தை...

ஶ்ரீ லங்கன் எயார் லைன்சை முன்னேற்ற தனியாருடன் கைகோர்க்க முடிவு

ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக முன்னோக்கி கொண்டு செல்ல பங்குதார நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயற்பட, அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் பிரபல வர்த்தகர் அல்லது நிறுவனத்துடன் இணைக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

வரிதிருத்தம்: வாகனங்களின் விலை பாரியளவு அதிகரிக்கும்!!

மே மாதம் 2 ஆம் திகதி முதல் இடம்பெறும் வரித்திருத்ததுடன் வாகனங்களின் விலை பாரியளவு அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.எவ்வாறு திருத்தப்படும் என குறிப்பாக கூறமுடியாது என அதன் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.எனினும் நுகர்வோர் இந்த காலகட்டத்தில் சந்தையில் காணப்படும் வாகனங்களை கொள்வனவு செய்தால் பொருத்தமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.இன்றை...
Loading posts...

All posts loaded

No more posts