- Wednesday
- January 22nd, 2025
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிராந்தியமாகவும், ஏனைய மாகாணங்கள் ஏழையும் இணைத்து சிங்கள மொழியை அடிப்படையாகக் கொண்ட வேறு பிராந்தியமாகவும் நிர்வகிக்கவேண்டும் என்று வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் தீர்மானத்தை, மேல் மாகாண சபை ஏகமனதாக நிராகரித்துள்ளது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 15 பேர் ஒன்றிணைந்து,...
சிலர் காயம்: ஒருவர் வைத்தியசாலையில் 1 1/2 மணிநேரம் அவை ஒத்திவைப்பு ஜே.வி.பி, கூட்டமைப்பு எம்.பி.க்கள் குசும்பு மக்கள் கலரியிலிருந்தோர் வெளியேற்றம் விசாரிப்பதற்கு விசேட குழு நியமனம் அரசாங்கத் தரப்பினருக்கும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் சபையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கைகலப்பாக மாறியதில், சபையே பெரும் அல்லோலகல்லோலப்பட்டது. இரு தரப்பைச் சேர்ந்த பின்வரிசை...
தகவல் அறியும் உரிமைக்கான சட்ட மூலத்தின் ஐந்து வசனங்கள் அரசியலமைப்பை மீறுவதாக காணப்படுவதால் அதனை திருத்தங்களின்றி நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு அவசியமென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைக்கான சட்ட மூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை தொடர்பான மனுக்கள் குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ள தீர்மானத்திலேயே உயர்...
இந்த ஆண்டின் இறுதியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், எல்லை நிர்ணய சபையின் அறிக்கையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் நிறுவப்பட்ட குழு,...
பிரபாகரனின் ஆவி கிளம்பியுள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்டிருந்த விசேட இராணுவப் பாதுகாப்பை விலக்குவது எந்தவகையில் நியாயமானது?' என, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். 'வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு, கிழக்குக்கு சமஷ்டியைப் பெற்றுத் தருமாறு கேட்கின்றார். வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு, தமிழ் அரசுக்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த 102 இராணுவத்தினரும் இன்று திங்கட்கிழமை (02) முதல் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பெறுமதி சேர்த்துக்கொள்ளப்பட்ட வரிக்கமைய நூற்றுக்கு 11 வீதமான வரியானது 15 வீதமாக இன்று முதல் அதிகரிக்கும் என்று தேசிய வருமான வரி திணைக்களம் அறிவித்துள்ளது. நிதியமைச்சின் முன்மொழிவுக்கமைய இவ் வற் வரி மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 11 வீதமாக இருந்த வரியானது இன்று நள்ளிரவுக்கு முதல் மாற்றப்படாவிட்டால் நாளை(03) தொடக்கம் மாற்றமடையும். எவ்வாறிருப்பினும் இதுவரை...
வர்த்தக வங்கிகளிலுள்ள ஏ.ரி.எம் இயந்திரங்களில் தேவையற்ற இலத்திரனியல் பாகங்களை வடிவமைத்து,பொருத்தி உரிமையாளர்களின் தகவல்களை திருடிய சீன பிரஜைகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பணம் மீளப்பெறும் அட்டையை உரிமையாளர்கள், இயந்திரத்தில் செலுத்தும்போது, சந்தேகநபர்களால் பொருத்தப்பட்ட பாகத்தினூடாக தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இவ்வாறு கணக்கு உரிமையாளர்கள் விவரங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த வங்கி நிர்வாகம், பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 26ஆம்...
முச்சக்கர வண்டிகளுக்கு ஆசணப்பட்டி அணிவதை பரிந்துரை செய்வதற்கு வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை தீர்மானித்துள்ளது. முச்சக்கர வண்டி விபத்துக்களால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்கள் குறித்து அவதானம் செலுத்திய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் டாக்டர் சிசிர கோந்தகொட கூறினார். முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட்ட போது மேலும் பல...
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாய்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச, சர்ச்சைக்குரிய முன்னாள் தூதுவர் ஒருவரை சந்தித்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரேனில் செயற்படும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் விற்பனை செய்தமை மற்றும் பணியில் இருந்த ஊழியர் ஒருவரை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டுக்களுடன், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க...
சிறீலங்காவின் முன்னணி நடிகரும் அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்க சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்தைச் சந்தித்துள்ளார். தென்னிந்தியாவிலுள்ள ரஜனிகாந்தின் இல்லத்திற்கு விஜயம் செய்த ரஞ்சன்ராமநாயக்க அவருடன் படங்களும் எடுத்துக்கொண்டார். தென்னிந்திய சுப்பர்ஸ்டார் ரஜனிகாந்தைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் தராகி சிவராமின் கொலைக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமும் இராணுவத்தினருமே ஏற்கவேண்டும் என மனித உரிமைச் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார். சிவராம் கொலைசெய்யப்பட்டு நேற்றுடன் 11 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரது கொலைக்கு நீதி வேண்டி நேற்று கொழும்பு கோட்டை புகையிரதநிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்....
உலக தொழிலாளர் தினமான மே தினத்துக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பிவைத்துள்ளனர். அர்ப்பணிப்பதே குறிக்கோள்: ஜனாதிபதி '2015இல், நாம் அடைந்த புதிய ஜனநாயக சுதந்திரப் பிரவேசத்தினூடே, புதிய பொருளாதார, அரசியல் அவகாசத்துக்குள் காலடி வைத்துள்ள தற்போதைய சூழலில் மலர்ந்துள்ள இந்த மே...
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்படவுள்ளதாக உத்தியோகபற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தேசிய அமைப்பாளராக தற்போது செயற்படுகின்ற மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும, நாடாளுமன்றத்துக்குள் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் செயற்பாடுகளை வழிநடத்தும் முழுப்பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது. கிருலப்பனையில் இடம்பெறும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மேதினக்...
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டால் தனி மாநிலம் எனக்கூறி தமிழ் - சிங்கள மக்களிடையே மீண்டும் ஒரு பிரிவினையை அரசியல்வாதிகள் ஏற்படுத்தக்கூடாது என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் கேட்டுள்ளார். அத்துடன் கடந்த கால சம்பவங்களை மறந்து சிங்கள மொழியைக் கற்றுக்கொண்டு அனைவருடனும் இணைந்து வாழக்கற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் போராளிகளுக்கு அமைச்சர் கூறியுள்ளார்....
வட மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து மாகாண பாடசாலைகளையும் நண்பகல் 12 மணியுடன் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மாகாண முதலமைச்சர் சேஷல ஜயரட்ன தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக இவ்வாறு பாடசாலைகள் முன்கூட்டியே மூடப்படவுள்ளதாக முதலமைச்சர் சேஷல ஜயரட்ண தெரிவித்துள்ளார். வட மத்திய மாகாணத்தில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை நிலவுவதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்...
இலங்கையின் வடக்கே, போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் சிறார்கள் இருவர், புத்தளம் மாவட்டம் கற்பிட்டியில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் பௌத்த பிக்குகளாக துறவறம் பூண்டுள்ளனர். கண்டக்குளி சமுத்ராசன்ன விகாரையின் தலைமை பிக்குவான பெந்திவெவ தியசேன தேரரின் வழிநடத்தலில் இந்தச் சிறார்கள், ஓராண்டுக்கு முன்னர் பௌத்த பிக்குகளாக மாறினார்கள். துறவிகளாகி ஓராண்டுக்குள் சிங்கள...
ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதிகோரியும், ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் புறக்கோட்டை மத்திய புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் 11 மணியளவில் நடைபெற்றது. சிரேஷ்ட ஊடகவியலாளர் எ.எம்.சிவராமின் படுகொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கோரியும் ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு பொறுப்பானர்கள் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்த...
திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலுள்ள படுகாடு பகுதியில் பல வருடங்களுக்கு பின்னர் நெல் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ள தமிழ் விவசாயிகளுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நெல் வேளாண்மைக்குரிய காணி உரிமை தொடர்பாக தமிழ் விவசாயிகளுக்கும் சிங்கள விவசாயிகளுக்குமிடையில் காணப்பட்ட அமைதியற்ற நிலை காரணமாகவே காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. காலை 6.00...
வவுனியாவில் அமைந்துள்ள தாண்டிக்குள விவசாயப் பண்ணைக்குரிய நிலத்தில் பொருளாதார அபிவிருத்தி மையம் அமைப்பதற்காக றிசாட்பதியுதீன் அவர்களின் அமைச்சுக்கு வன்னி மாவட்ட சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கத்தினால் ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி 2016ஆம் ஆண்டு ஒலிபரப்பாகிய மின்னல் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தாண்டிக்குள விவசாயப் பண்ணை அமைந்துள்ள நிலம் 1989ஆம் ஆண்டு மத்திய...
Loading posts...
All posts loaded
No more posts