- Tuesday
- January 21st, 2025
இலங்கைத் தீவில் பாரிய நில நடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் நிபுணர் சீ.பி.திஸாநாயக்க எச்சரித்துள்ளார். இந்துமா சமுத்திரம் – அவுஸ்திரேலிய பூமித் தட்டுக்களில் உருவாகியுள்ள மாற்றம் காரணமாக எதிர்காலத்தில் இலங்கைத் தீவில் பாரிய நில நடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு 500 முதல் 700 கிலோ மீற்றர் தொலைவில் இந்த...
இலங்கையில் நிலவி வரும் மோசமான காலநிலையால், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள், தண்ணீர் சுத்திகரிப்பு வில்லைகள், படகுகள் போன்ற அவசர உதவிகள் தேவைப்படுவதாக இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பல இடங்களிலிருந்து மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்தும் மக்கள் வெளியேறவில்லை எனவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை...
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை இலங்கை கிரிக்கட் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதற்காக உதவிப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கை நேற்று முதல் கொழும்பு 07ல் உள்ள கிரிக்கட் நிறுவன காரியாலயத்தில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக 011 2 68 16 01 என்ற தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு...
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கே முதலிடம் வழங்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை அலரி மாளிகையில் வைத்து விஷேட உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார். இதன்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கொழும்பு மற்றும் அண்டிய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள...
களனி ஆற்றின் நீர்மட்டம் இன்னும் ஒரு அடி உயர்ந்தாலும் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது. களனி ஆற்றின் நீர்மட்டமானது இன்று காலை ஒரு அங்குலத்தினால் உயர்ந்துள்ளது. இதேவேளை நீர் குழாய்களில் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்கு விஷேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் தற்காலிக...
மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை மகிழ்ச்சியைத் தந்தாலும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் கவலையளிக்கின்றன. பத்தரமுல்லையில் நாடாளுமன்ற மைதானத்தில் அமைந்துள்ள படைவீரர்களின் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு உரையாற்றுகையில், மூன்று தசாப்த காலமாக தொடர்ந்த போர் முடிவுக்குக் கொண்டுவந்தமை மகிழ்ச்சியைத் தருகின்றது. ஆனால் இந்தப் போரில் கொல்லப்பட்ட...
இலங்கையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், களனிகங்கையின் நீர்மட்டம் 7 மீற்றர்வரை உயர்ந்து பெருக்கெடுத்துப் பாய்வதால் கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் களனி கங்கையின் கரையோரமாக உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதேவேளை, களனி கங்கையில் பெருக்கெடுத்த வெள்ளத்தினால், கொழும்பு நகரின் பகுதிகளான, வெல்லம்பிட்டிய, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் வீடுகள்,...
மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள அரநாயக்க, எலங்கபிட்டிய பிரதேசத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்கானிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். மண்சரிவால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்ட பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதிக்கப்பட்ட மக்களிடம் நலம் விசாரித்தார். மீட்புப் பணிகளை விரைவுபடுத்துமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் தொடர்பில் நேரில் கண்டறிவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்பகுதிக்குச் சென்றுள்ளார். நாட்டில் ஏற்ப்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் மாவனல்ல, அரநாயக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களது 14 சடலங்களும் புலத்கொஹுபிட்டிய மண்சரிவில் சிக்குண்டவர்களில் மூவரது சடலங்களும், இன்று புதன்கிழமை (18) காலை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ள மக்கள் எவராயினும் 1919 என்ற இலக்கத்திற்கு அழைப்பினையேற்படுத்தி தகவல் அறிவிக்கலாம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அனர்த்தங்கள் தொடர்பில் அறிவித்தும் அனர்த்தம் இடம்பெற்றுள்ள பகுதிகளுக்கு இதுவரையும் அரச அதிகாரிகள் எவரும் விஜயம் செய்யவில்லை எனில் அல்லது அரச அதிகாரிகள் எவரதும் உதவிகள் இன்னமும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் “ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள்”...
நேற்று பாராளுமன்றில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் முன்னாள் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் அவர்கள் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் தனியார் காணிகளின் விடுவிப்பு, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற...
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 'இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவின் கோரிக்கைக்கு அமைய, அந்த அமைச்சால் பெற்றுக்கொடுக்கப்படும் தகவல்களை கொண்டு, முற்றாக சேதமடைந்த வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்படும்' என சஜீத் பிரேமதாஸ...
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எமது உறவுகளுக்கு இந்த உயரிய சபையில், அனைவரின் சார்பாகவும் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்' என்று நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு...
நிதி அமைச்சின் குறைநிரப்பு பிரேரணையை அங்கீகரிப்பதற்கான வாக்கெடுப்பு உரிய வகையில் இடம்பெறவில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேற்படி வாக்கெடுப்பின்போது குளறுபடி இடம்பெற்றது என எதிரணியால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. தலைமையில் நால்வரடங்கிய குழுவை சபாநாயகர் அமைத்தார். இந்நிலையில் விசாரணைக்குழுவின் அறிக்கை நேற்று சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது இதையடுத்து கட்சித் தலைவர்கள் கூட்டம்...
யுத்த வெற்றி விழா கடந்த காலங்களில் இடம்பெற்றது போன்று இனிமேல் கொண்டாடப்பட மாட்டாது அதற்கு பதிலாக படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு மற்றும் கலாச்சார வைபவம் மாத்திரமே இடம்பெறும் என்று பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். யுத்தத்திற்கு பின்னர் நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நல்லிணக்கத்தை கருத்திற் கொண்டே தற்போதைய அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டு...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் உதவிகளைப் பெற பொலிஸார் விஷேட இலங்கங்களை அறிமுகப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட மக்கள் தாம் இருக்கும் இடங்களைப் பற்றி உடன் அறியத்தருமாறு கோரப்பட்டுள்ளது. இதன்படி பொலிஸ் தலைமையகத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில், 01. 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவு 02. பொலிஸ் மா அதிபர் உதவிப் பிரிவு -...
நாட்டின் வளிமண்டலத்தில் காணப்பட்ட தாழமுக்க நிலை தற்போது நாட்டில் இருந்து விலகிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் மழை வீழ்ச்சி குறைவடைய வாய்ப்புகள் இருப்பதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. எனினும் காற்று தொடர்ந்து அதிகரித்து வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கேகாலை – தெஹியோவிட்ட - ஹல்தொட்டை – டெனிஸ்தோட்டம் பகுதியில் மண்சரிவு ஒன்று ஏற்பட்டதில்...
பிரபாகரனுக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் செயலையே வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மேற்கொள்கின்றார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், யுத்தம் முடிவடைந்து ஏழு ஆண்டுகளாகியும் இன்னும் வடக்கில் பழைய நிலைமைகளும் அதே சிந்தனையுமே மக்கள் மத்தியில் உள்ளது. அவர்களின் மனங்களில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி எம்முடன் இணைத்துக்கொள்ள நாம் பல...
சிறீலங்காவில் இடம்பெற்ற போரின்போது மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான கொடூரங்கள் இடம்பெற்றதை உறுதிப்படுத்திய சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி உண்மையானது என சிறீலங்கா அரசாங்கம் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஒரு சில மாதங்களில் வெளியான சனல்-4 தொலைக்காட்சி சேவை வெளியிட்ட காணொளி...
புகையிரதப் பாதைகளில் நடப்பவர்களுக்கு எதிராக இன்று திங்கட்கிழமையிலிருந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பாதைகளில் நடந்துசெல்பவர்களினால் கடந்த காலங்களில் அதிகளவான உயிராபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன், ரயில் பயணங்களின்போது அதற்கான பயணச்சீட்டு இன்றி பயணிப்போருக்கு இன்று முதல் 3000 ரூபா அபராதம் விதிக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா...
Loading posts...
All posts loaded
No more posts