வாகனங்கள் மீதான வரியை நீக்க கோரிக்கை

வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை உடனடியாக நீக்க வேண்டும் என்று நுகர்வோர் உரிமை பாதுகாப்புக்கான தேசிய அமைப்பு கூறியுள்ளது. அரசாங்கம் அனைத்துப் பொருட்களுக்கும் வரி அறவிடும் கொள்கையை நடைமுறைப்படுத்துவதாக அதன் தலைவர் ரஞ்சித் விதானகே கூறினார். வாகன இறக்குமதிகளுக்காக புதிய வரி முறையை அறிமுகப்படுத்தியதன் காரணமாக வாகனங்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். முச்சக்கர வண்டி...

கொழும்பில் மீண்டும் மழை; வீதிகள் வெள்ளத்தில்

கொழும்பில் நேற்று இரவு முதல் மீண்டும் பெய்துவரும் கடும் மழை காரணமாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 24 மணிநேரத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்பதால் மண் சரிவு மற்றும் வெள்ள...
Ad Widget

மோட்டார் வாகனம், முச்சக்கர வண்டியின் விலை அதிகரிப்பு?

மோட்டார் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டியின் விலை அதிகரிக்க கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.நேற்று நள்ளிரவு முதல் மோட்டார் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டிக்கான உற்பத்தி வரி அதிகரித்தமை காரணமாக இவ்வாறு விலை அதிகரிக்க கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.இந்த வரி அதிகரித்தமைக்கு அமைய விலை கணக்கீடு...

ஆதவன் மாஸ்டர் கட்டுநாயக்கவில் கைது!

விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் எனக் கூறப்படும் ஆதவன் மாஸ்டர் (அய்யாத்துரை மோகன்தாஸ்) பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்ல தயாரான நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி வீடொன்றில் தற்கொலை அங்கி உட்பட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடி கணனி

நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களின் 80,000 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மடி கணனிகளை வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டம் நேற்று(26) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் மாணவர்களுக்கு மடிகணனிகள் பிரதமரால் கையளிக்கப்பட்டன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவு திட்ட வாக்குறுதிக்கமைய...

மக்களின் உதவியை நாடியுள்ள மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை

பெட் ஸ்கேன் (PET scan) இயந்திரத்தைக் கொள்வனவு செய்ய, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை மக்களின் உதவியை நாடத் தீர்மானித்தது. இதன்பொருட்டு மனுஷத் தெரணவுடன் கைகோர்த்த குறித்த வைத்தியசாலையின் முயற்சிகளுக்கு சிறந்த பலன் கிட்டியுள்ளது. குறிப்பாக, தன் பெயரைக் குறிப்பிட விரும்பாத மனிதநேயம் மிக்க ஒருவர் சுமார் மூன்றரை கோடி ரூபாயை இதற்காக வழங்கியுள்ளமை விஷேட அம்சமாகும்....

இலங்கையில் சிறுநீரக நோயாளிகளுக்கான வைத்தியசாலைக்கு சீனா உதவி

இலங்கையில் சிறுநீரக நோயாளிகளுக்கான சிறப்பு வைத்தியசாலையொன்றை நிர்மாணிக்கும் பொருட்டு, 600 மில்லியன் யுவான்களை (சீன பணம்) சீனா வழங்கியுள்ளது. நேற்று குறித்த நிதி வழங்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தத்தில் சீனாவிலுள்ள இலங்கைத் தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு இலங்கையின் சார்பாக கையெழுத்திட்டுள்ளார். 2015ம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சீன ஜனாதிபதி ஷீ ஜின்...

பெண்ணொருவர் ஓட்டோ சாரதி ஒருவரை அடிக்கும் காணொளி!!

குருணாகல் மாவட்டத்தில் வாரியபொல பிரதேசத்தில் ஓட்டோ சாரதி ஒருவருக்கும், யுவதி ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற சண்டை முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக இணைப்பு தளங்களில் அதீத பிரசித்தி அடைந்து வருகின்றது. சேட்டை செய்த ஓட்டோ சாரதியை செருப்பால் அடிக்கின்றார் இந்த யுவதி. இச்சண்டைக்கு வாரியபொல சண்டை – 2 என்று ஊடகவியலாளர்கள் பெயரிட்டு உள்ளனர். ஏற்கனவே சில...

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவ அரசாங்கம் முடிவு!

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஒன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக, உள்விவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த காலங்களில் காணாமல் போனதாக கூறப்படும் அல்லது கண்டுபிடிக்க முடியாதவர்கள் என கருதப்படும் நபர்கள் பற்றிய தகவல்களை அவர்களது உறவினர்கள் பெற்றுக் கொள்வதே, இதன் நோக்கம் என, குறித்த...

ஓ.ஐ.சியின் மகள் குத்திக்கொலை

ஹொரவப்பொத்தான பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி (ஓ.ஐ.சி) யின் மகள், கலன்பிந்துனுவெவ பிரதேத்தில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் பலியான பெண்ணின்,தாயும் காயமடைந்துள்ளதாகவும் அவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அனர்த்தங்கள் தொடர்பில் கவனம் பாதிப்புகளுக்குப் பின்னரும் அவசியம்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்புகளிலிருந்து விடுபட்ட பின்னர் இயற்கை அனர்த்தத்தை மறந்துவிடுகின்றனர் எனபதை சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அனர்த்தங்களைத் தவிர்க்க - பாதிப்புகளைக் குறைக்க - மக்களைப் பாதுகாக்க நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று திட்டங்களை வகுக்கவேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார். நாட்டின் நலன்கருதி இதுபோன்ற விடயங்களில் நாம் அனைவரும் ஒன்றாக...

அரச ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளம் வழங்கப்படும்

வௌ்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளத்தை கடனாக வழங்குவதற்கு அவதானம் செலுத்தப்படுவதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறினார். நேற்று பிற்பகல் குறித்த அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர்...

பாதிக்கப்பட்டவர்கள் நஸ்டஈட்டைப் பெற உடன் பதிவு செய்யுங்கள்!

வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக முற்றாக மற்றும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகள், பொருட்களுக்கு ஒரு இலட்சம் ரூபா முதல் 25 இலட்சம் ரூபா வரை நஸ்டஈடு வழங்கப்படவுள்ளதால், தமது பகுதிகளுக்கு சொந்தமான கிராம சேவகர்களை சந்தித்து பதிவு செய்து கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் தர்ஷணி...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் படத்தை முகப்புப்புத்தகத்தில் பதிவேற்றிய மாணவன்மீது தாக்குதல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் புகைப்படத்தை தனது முகப்புப் புத்தகத்தில் பதிவேற்றிய வந்தாறு மூலையைச் சேர்ந்த முகாமைத்துவ பீடம் 2ஆம் வருட மாணவன் மீது சிங்கள மாணவர்கள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். லட்சியமூர்த்தி சுமேஸ்காந் என்ற 23 வயதுடைய மாணவன் மீது சிங்கள மாணவர்கள் சிலர் செவ்வாய்க்கிழமை மாலை தாக்குதலை நடாத்தியுள்ளனர். தாக்குதலுக்குட்பட்ட குறித்த மாணவன் செங்கலடி வைத்திசாலையில்...

பிரதமருக்கு அழைப்பாணை

உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்துள்ள வழக்கொன்றில் தன்னை ஆஜராகுமாறு அழைப்பாணை கிடைத்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் நடவடிக்கையாகும் என்றும் சபாநாயகரின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்த முடியாதென்றும் கூறினார். நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட நாடாளுமன்ற அமர்வு, இன்று பிற்பகல் 1 மணிக்கு, சபாநாயகர்...

தந்தை கொலைசெய்யப்பட்டதை அறியாது தந்தையை எழுப்ப 5 நாட்கள் முயற்சி செய்த பிள்ளைகள்!!

கணவரை பொல்லினால் தாக்கி கொலை செய்து தனது பிள்ளைகள் இரண்டினை வீட்டில் தனியாக விட்டு தப்பி சென்ற பெண்ணை தேடி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.கடந்த 19 ஆம் திகதி இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் பின்னர் குறித்த பெண் கணவரை இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்னர் அவர் வீட்டை விட்டு தப்பி சென்றுள்ளார்.தமது தந்தை இறந்ததை அறியாத...

மழையைப் பதுக்கிவைத்த கடவுளை நிதிமோசடிப்பிரிவுக்கு அழைக்கவேண்டும்!

நாட்டில் பல பேரழிவுகளை இவ்வளவுகாலமும் பதுக்கிவைத்திருந்த கடவுளை பாரிய நிதிமோசடிகளை விசாரணைசெய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுமுன் நிறுத்தவேண்டுமென சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ தனது முகப்புப் புத்தகத்தில் பதிவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடும் இவ்வாறே அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். கெலிஓயா கரமட ஸ்ரீ வேலுவனாராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்...

தாவினார் பிள்ளையான்: தடுத்தனர் பொலிஸார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சபை அமர்வில், முதன்முறையாக நேற்றையதினம் பங்கேற்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தை படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு அவர், விளக்கமறியலில்...

மூன்று மாதங்களுக்கு மழை நீடிக்கும்! உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

இலங்கையில் தற்போது நிலவும் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காலநிலை மூன்று மாதங்களுக்கு நீடிக்குமென்பதால் நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சீரற்ற காலநிலையால் பாதிப்புக்குள்ளான மக்கள் இயல்பு வாழ்க்கையை நோக்கி படிப்படியாகத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். வெள்ளநீர் வழிந்தோடும் நிலையில் வீடுகளைத் துப்புரவாக்கும் பணியில் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் தமது தொண்டர்களை...

மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலைக்கு நீதி வேண்டும்!

வவுனியா உக்கிளாங்குளத்தில் பாடசாலை மாணவியான ஹரிஸ்ணவி (வயது - 13) பாலியல் துண்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இன்றுவரை விசாரணைகள் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றன என்று தாயார் தெரிவித்துள்ளார். மருத்துவ அறிக்கைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர் எனவும், விசாரணைகள் பின் செல்வதால் குற்றவாளி தப்பிக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது...
Loading posts...

All posts loaded

No more posts