- Monday
- January 20th, 2025
நாட்டுக்குள்ளும் வெளியேயும் உள்ள ஈழம் என்ற கனவு மற்றும் விடுதலை புலிகளின் சித்தாந்தத்தை நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இல்லாதொழிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவிட்டால் வடக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதத்தை கையில் எடுக்கும் நிலை உருவாகலாம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். தெஹிவளை - கல்சிசை நகரமண்டபத்தில்...
காணாமற்போனமைக்கான சான்றிதழ்களை வழங்குவதற்கான சட்டமூலத்தின் வரைவுக்கு, அமைச்சரவையினால் நேற்றுச் செவ்வாய்க்கிழமை, அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இறப்புகளைப் பதிதல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம், 2010 இல. 19 என்ற சட்டத்தினைத் திருத்தல் தொடர்பாகவே, இந்தச் சட்டமூலம் குறிப்பிடுகிறது. அமைச்சரவையினால் இது அங்கிகாரமளிக்கப்பட்டுள்ள நிலையில், இது வர்த்தமானி மூலம் வெளியிடப்படுமெனவும், நாடாளுமன்றத்தில் இதைச் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகுமெனவும், வெளிநாட்டு அலுவல்கள்...
கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கென முப்படையினரடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்தக் குழுவுக்கு பொலிஸ் தரப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அத்துடன், விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள்...
கொழும்பு - கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை பார்வையிடும் வாய்ப்பை மக்களுக்கு வழங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். இதன்படி நாளை முதல் எதிர்வரும் 14ம் திகதி வரை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொது மக்கள் அனைவருக்கும், ஜனாதிபதி மாளிகை மற்றும் கோல்டன் பூங்காவைப் பார்வையிட முடியும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை...
கொஸ்கம, சாலவ பகுதியில் ஏற்பட்ட இராணுவ ஆயுதக் களஞ்சியசாலை அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகளை அரச நிதியை பயன்படுத்தி புனரமைத்து கொடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். கொஸ்கம பகுதிக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீயினாலும் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிச் சம்பவத்தினாலும் ஏற்பட்ட சேதங்களை ஆய்வுசெய்தார். இதனையடுத்து அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மற்றும்...
கொஸ்கம-சலாவ இராணுவமுகாமில் ஏற்பட்ட வெடிவிபத்தால் 1000 கோடி பெறுமதியான வெடிபொருட்கள் வெடித்து அழிந்துபோயுள்ளதாக ஆங்கில நாழிதள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விபத்தில் 9000 தொன் வெடிபொருட்கள் முற்றாக அழிந்து நாசமாகியுள்ளன. இதன் பெறுமதி 1000கோடியாகும். இந்த வெடிபொருட் களஞ்சியசாலை சரியான நிபுணத்துவத்துடன் அமைக்கப்படவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திரிக்கா ஆட்சிக்காலத்தில் 1990 களில் சலாவ பகுதியில்...
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நிதி மோசடி விவகாரம் ஒன்று தொடர்பில் நேற்று நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட, அவர் பூக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து அவரை 20 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகள் இரண்டு மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்கு சமூகமளித்திருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை, பூகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொஸ்கம இராணுவ முகாமில் தீ விபத்து ஏற்பட்டு 17 மணித்தியாலங்களுக்கு பிறகு இரண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வெடிப்பால் ஏற்பட்ட சத்தம் சுமார் 1 கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் கேட்டுள்ளது. தீயையடுத்து, வெடித்த குண்டுகளின் துகள்கள் வீசுபட்டு, அருகிலிருந்த வீடுகளின் சுவர்களை துளைத்துச்சென்றுள்ளன.
கொஸ்கம - சலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 39 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சலாவ இராணுவ முகாமிலிருந்து ஒரு கிலோமீற்றருக்குள் வசிப்பவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு மீண்டும் திரும்ப வேண்டாம் என இராணுவப் பேச்சாளர் இன்று காலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது....
அண்மையில் ஏற்பட்ட மழை, வௌ்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபை நிவாரண உதவி வழங்க முன்வந்துள்ளது. நாளை(04) லண்டன் லோட்ஸில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவிருக்கும் இந்த நிவாரண உதவித் திட்டத்துக்கு ஏற்கனவே பல மில்லியன் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக இலங்கை கிரிக்கெட் ஊழியர்கள், பயிற்றுவிப்பாளர்கள், கிரிக்கெட் வீரர்கள் என 300...
ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்தின் விலையை அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை அனுமதியளித்துள்ளது. இதன்படி, அல்ட்ராடெக், டோக்கியோ மற்றும் ஹோல்சிம் ஆகிய ஐந்து வகையான சீமெந்தின் விலைகளும் 60 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளன. இதற்கமைய 870 ரூபாவாகவுள்ள சீமெந்துப் பக்கற் 930 ரூபாவாக உயர்வடைகின்றது.
சிவனொளிபாத யாத்திரை காலமானது கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்துள்ளதை அடுத்து அங்கு சுற்றுப்புற சூழலை குழு ஒன்று சுத்தப்படுத்தியுள்ளது. கடந்த 27 மற்றும் 28ஆம் திகதி சிவனொளிபாதமலையை அண்மித்த பகுதிகளில் காணப்பட்ட குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் என்பன குறித்த குழுவால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த குழு 'ஒன்றிணைவோம் உதவி செய்வோம்' எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த...
விடுதலைப் புலிகளின் பெண் கடற்புலிகளின் தலைவியாக செயற்பட்டவரென பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பகிரதி முருகேசு உட்பட 8 பேர் நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 39 பேரது வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் நேற்று நடைபெற்றது. பிரான்ஸிலிருந்து தனது...
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அம்பாந்தோட்டைப் பகுதியில் அமைக்கப்பட்ட தனியார் விடுதியொன்றைத் திறந்துவைக்கும் விடுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் தீ பரவியுள்ளது. இந்தச் சம்பவம் புதன்கிழமை இரவு இடம்பெற்றது. ஐந்து நட்சத்திர விடுதி திறப்பு விழாவானது புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாவை வெட்டித் திறந்துவைத்தபின்னர் நிகழ்வுகள்...
முச்சக்கர வண்டிக்குப் பதிலாக சிறிய ரக கார்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத் திணைக்கத்தில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டில் முச்சக்கரவண்டியினால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அதனைக் கட்டுப்படுத்தவேண்டிய தேவை எழுந்துள்ளது. ஆகவே அதற்குப் பதிலாக சிறிய ரக கார்களை இறக்குமதி...
வைத்தியர்கள் நியமனம் தொடர்பில் இடம்பெறுவதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை நாடளாவிய ரீதியில் பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, கேகாலை ஆகிய மாவட்டங்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்களின் விடுதி, புற்றுநோய் வைத்தியசாலை, காசல் வைத்தியசாலை உள்ளிட்ட அத்தியவசிய வைத்தியசாலைகளில் இந்த நடவடிக்கை...
திடீர் அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுப்பதற்கான நிலைமையொன்று ஏற்படுமாயின், உடனடியாக எடுத்துச்செல்லக்கூடிய பொருட்கள் அடங்கிய அனர்த்தப் பொதியொன்றைத் தயாராக வைத்திருக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய பிரதேசங்களில் வசிப்போருக்கே, இவ்வாறான அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. கல்விச்சான்றிதழ்கள், அடையாள அட்டைகள், காணி உறுதி, பணம், தங்க நகைகள், டோர்ச், அத்தியாவசியமான மருந்துகள் ஆகியன அடங்கிய பொதியையே, தயாராக...
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமெரிக்க இராணுவக் குழுவொன்றும் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. கொழும்பு-வெல்லம்பிட்டியவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சுத்திகரிக்கும் பணியில் அமெரிக்க இராணுவத்தின் கடெற் தர அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கடெற் தர அதிகாரிகளுடன் இணைந்தே இவர்கள் இந்த சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கப் படைகள் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு...
கொழும்பு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக களுகங்கை, நில்வள கங்கை மற்றும் அத்தனகளு ஓய ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் மீண்டும் உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. களுகங்கை பகுதியில் உள்ள மில்கந்த, பட்டுபவுள, நில்வள கங்கையின் பகுதியில் உள்ள பனடுகம, அத்தனகளு ஓயா பகுதியில் உள்ள துன்மலே...
Loading posts...
All posts loaded
No more posts