மூலதன ஆதாய வரியை அறவிடுவதற்கு தீர்மானம்

மூலதன ஆதாய வரியை அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான சட்டமூலம் திருத்தப்பட்டு பாராளுமன்றத்தில் வெகு விரைவில் நிறைவேற்றப்படும். அந்த வகையில் நாட்டில் காணப்படுகின்ற வருமான ஏற்றத்தாழ்வை சமநிலைப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். வரி எவ்வாறு என்ன அடிப்படையில் அமுல்படுத்தப்படும் என்பது குறித்து வரைவிலக்கணம் செய்யப்படும் எனவும்...

இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை முழுமையாக நீக்கம்

ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கை மீன் தயாரிப்புக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Ad Widget

இலங்கையில் மீண்டும் பதற்றம்! பற்றி எரியும் கப்பல்! தற்செயலான ஒன்றா? திட்டமிட்ட சதியா?

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரட்டப்பட்டதன் பின்னரான அரசியல் தளத்தில் என்றும் பரபரப்புக்கு பஞ்சமில்லை. கடந்த ஆட்சியின் போது பல்வேறு மோசடியில் ஈடுபட்டவர்களை குறித்து சமகால அரசாங்கம் வலை விரித்துள்ள போதிலும், சகல துறைகளிலும் ஊடுருவியுள்ள மஹிந்தவின் விசுவாசிகளால் அவை முறியடிக்கப்பட்டு வருகிறது. தற்போது அரசியல் ரீதியாக காணப்படும் நெருக்கடியான...

ஜெனிவாவை மிக இலகுவாக எதிர்கொள்வோம்! அரசு நம்பிக்கை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரை மிக இலகுவாக எதிர்கொள்வோம் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். "சர்வதேச நாடுகள் இலங்கை அரசு மீதும், ஜனாதிபதி மீதும் நம்பிக்கை கொண்டுள்ளன. அதனால், இம்முறையும் போதுமான கால அவகாசத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வழங்கும்" என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்....

அலவி மௌலானா காலமானார்!

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அல்ஹாஜ் அலவி மௌலானா நேற்று புதன்கிழமை மாலை கொழும்பில் காலமானார். சுதந்திரக் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினரான அலவி மௌலானா ஸ்ரீமாவோ தலைமையிலான அரசில் ஜனவசம நிறுவனத் தலைவராகச் செயற்பட்டிருந்தார். அதன் பின்னர் சுதந்திரக் கட்சி முஸ்லிம் பிரிவின் முக்கியஸ்தராகவும், கொழும்பு மாநகர...

சாலாவ முகாம் மீண்டும் புனரமைக்கப்படும்!

முற்றாக அழிவடைந்த நிலையிலுள்ள கொஸ்கம சாலாவ இராணுவ முகாம் மீண்டும் புனரமைப்பு செய்யப்படவுள்ளது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (15) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும்...

மாகாண சபையில் பெண்களுக்கு 25 சத இட ஒதுக்கீட்டுக்கான சட்டதிருத்தம்

இலங்கையில் மாகாண சபைகளில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக அமைச்சரவையில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம், குறைந்தபட்சம் 25...

தலைகீழாக நின்று ஆர்ப்பாட்டம் செய்த அரசியல்வாதிகள்

உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் அரசாங்கம் உடனடியாக உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடாத்த வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர்கள் கினித்தேன பஸ்தரிப்பு நிலையத்துக்கு முன்பாக தலைகீழாக நின்று 14.06.2016 அன்று பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜ் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே மேற்படி...

சோமவன்ச அமரசிங்க காலாமானார்

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் மற்றும் மக்கள் சேவை கட்சியின் பொதுச் செயலாளருமான சோமவன்ச அமரசிங்க காலாமானார். இவருக்கு வயது 73. இராஜகிரியவிலுள்ள தனது சகோதரரின் வீட்டில் வைத்து அன்னாரில் உயிர் பிரிந்துள்ளது. 1969ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்து கொண்ட சோமவன்ச அமரசிங்க, அக் கட்சியின் நான்காவது தலைவராக பதவியேற்றார். பின்னர்,...

அடிப்படைச் சம்பளத்தை இரு மடங்காக அதிகரிப்பதற்கு திட்டம்

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை இரு மடங்காக அதிகரிப்பதற்கு அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதனடிப்படையில் அரச சேவைத் துறையினரின் அடிப்படைச் சம்பளம் 11,730 ரூபாவிலிருந்து 24,230 ரூபா வரை அதிகரிக்கும் என அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இதேவேளை...

க்ளைபோசெட்டை விட அதிக விஷமுடைய கிருமிநாசினி சந்தையில்?

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் தடைசெய்யப்பட்ட க்ளைபோசெட் (Glyphosate) எனும் கிருமி நாசினியை விட, அதிக விஷமுடைய பிறிதொரு விவசாய இரசாயனம் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. இதன்படி க்ளுபோசினேட் (Glufosinate) எனும் பெயரில் குறித்த கிருமி நாசினி சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இப் புதிய களை நாசினி க்ளைபோசெட்டை விட 15 மடங்கு அதிக...

நூற்றாண்டைக் கடந்து வாழும் ஆரோக்கியமான ஆச்சி

”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பார்கள். இன்று நோயில்லாத மனிதர்களைக் காண்பது அரிதாகி விட்டது. சிறுவர் முதல் வயோதிபர் வரை தம் வாழ்நாளில் ஒரு ”பரசிற்றமோல்” மாத்திரையைத் தானும் வலி நிவாரணமாக பயன்படுத்தாதவர்கள் எவருமில்லை எனலாம். இன்றைய நவீன வாழ்க்கை முறையில் நாளுக்கு நாள் புதுப்புது நோய்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது சுகர், பிறசர், கொலஸ்ரோல், கேன்சர்,...

ஜப்பானில் மஹிந்தவுடன் உதயங்க

ஜப்பானுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இலங்கையர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டிருந்தார். ஜப்பான் ரூசூ இபரகி மாநிலத்தின் சுகுபா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் யுக்ரேன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட உதயங்க வீரதுங்கவும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தாய்லாந்து...

கோத்தபாயவின் அறையில் தமிழினி எழுதிய புத்தகம்!

விடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிரணித் தளபதி தமிழினி எழுதியதாகக் கூறப்படும் ஒரு கூர்வாளின் நிழலில் என்ற புத்தகம் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயராஜ பக்ஷவின் அறையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஒரு கூர்வாளின் நிழலில் பல இடைச்செருகல்கள் நடைபெற்றதாக தொடர்ந்து விமர்சனங்கள் வெளிவந்த நிலையில் அண்மையில் கோத்தபாய ராஜபக்ஷவைச் சந்திக்கச் சென்ற ஊடவியலாளர் ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களிலேயே...

தென்பகுதி மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கிய அதிகாரிகளுக்கு கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை

வடக்கில் மீன்பிடிப்பதற்கு “தடையுத்தரவை” மீறி தென்பகுதி மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வட கடலில் சட்ட விரோதமாக மீன்பிடிக்கும் எவராக இருந்தாலும் தராதரம் பார்க்காமல் கைதுசெய்யுமாறு கடற்படையினருக்கும், ரோந்து பிரிவினருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை கடற்தொழில் நீரியல்...

தலைக் கவசங்களுக்கு SLS தரம் அறிமுகம்

மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களுக்கு செப்டெம்பர் முதலாம் திகதி முதல் எஸ். எல். எஸ். தரமொன்றை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு முடிவு செய்துள்ளது. இதன்படி, செப்டெம்பர் மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் மற்றும் இங்கு உற்பத்தி செய்யப்படும் தலைக் கவசங்கள் எஸ். எல். எஸ். 517 தரத்தை உடையதாக இருக்க வேண்டும் என அமைச்சு தெரிவித்தது. உரிய...

சிறுவர் தொடர்பான விடயங்களில் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்!

சிறுவர்கள் தொடர்பான நடவடிக்கைகளில் வெகுஜன ஊடகங்கள் அதிக பொறுப்புடன் செயற்பட வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறுவர்கள் தொடர்பான செய்திகளை வௌியிடும் போது, சில ஊடகங்கள் தமது இருப்பு பற்றி சிந்தித்தே செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது ஊடகங்களின் கடமை எனவும் அவர் கூறியுள்ளார்....

மக்கள் உதவியை நாடிய மஹரகம வைத்தியசாலைக்கு சிறந்த பலன் கிட்டியது

பெட் ஸ்கேன் (PET scan) இயந்திரத்தைக் கொள்வனவு செய்ய, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை மக்களின் உதவியை நாடத் தீர்மானித்தது. இதன்பொருட்டு மனுஷத் தெரணவுடன் கைகோர்த்த குறித்த வைத்தியசாலையின் முயற்சிகளுக்கு சிறந்த பலன் கிட்டியுள்ளது. இதன்படி, 20 கோடி ரூபாய் இதுவரை மக்களால் நன்கொடையளிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வைத்தியசாலையின் இலக்கு எட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, தன் பெயரைக் குறிப்பிட...

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவசர நிதியுதவி வழங்கப்பட வேண்டும்.

வீ.ஆனந்தசங்கரி அவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவசர நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என கோரி ஜனாதிபதி அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் மேதகு ஜனாதிபதி அவர்களே, எதிர்பாராதவிதமாக சொற்ப நேரத்தில் கொஸ்கம, சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட சம்பவத்தால் தமது சகல சொத்துக்களையும் இழந்தவர்களுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களை...

பரணகம ஆணைக்குழு கலைக்கப்படவுள்ளது!

காணாமல் போனோரைக் கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்பட வுள்ளதாக அக்குழுவின் தலைவர் மக்வெல் பரணகம தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி இக்குழு கலைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் காணாமல் போனோரைக் கண்டறிவதற்கான அலுவலகம் ஒன்றைத் திறப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையை குறித்த அலுவலகத்திடம் ஒப்படைக்குமாறும் கூறப்பட்டுள்ளது. காணாமல்போனோர்...
Loading posts...

All posts loaded

No more posts