முதல் தடவையாக குழந்தை பருவம் தொடர்பிலான கணக்கெடுப்பு

மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, சிறுவர் செயலகம் மற்றும் தொகை மதிப்பு திணைக்களம் ஆகியவை இணைந்து உலக வங்கியின் வேலைத்திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் முதன் முறையாக குழந்தை பருவம் தொடர்பில் மதிப்பீடொன்றை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு தழுவிய ரீதியில் 05 வயதுக்கு குறைவான குழந்தைகள் தொடர்பில்...

இராணுவ முகாம் இல்லை, இருப்பினும் பீதியில் தமிழர்கள்!!

இலங்கையில் போர் முடிவடைந்து 7 வருடங்களாகின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் இராணுவ முகாம்கள் விலக்கிக் கொள்ளப்பட்ட சில இடங்களில் இன்னமும் வெடிப் பொருட்கள் அகற்றப்படாத நிலை காணப்படுகின்றது. அந்த இடங்களில் மிதிவெடி அபாய எச்சரிக்கை அறிவிப்புகள் காணப்படுவதால் இராணுவம் விலக்கிக் கொண்ட தங்கள் காணிக்குள் செல்ல முடியாதிருப்பதாக காணி உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தங்கள் காணிகளில்...
Ad Widget

உள்ளூராட்சி தேர்தலில் தனித்தே போட்டி- மஹிந்த அணி சற்றுமுன் திட்டவட்டமாக அறிவிப்பு

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி தனித்து போட்டியிட போவதாகவும் எக்காரணம் கொண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைய போவதில்லை எனவும் கூட்டு எதிரணி சற்றுமுன்னர் தெரிவித்துள்ளது. கொழும்பில் தற்போது இடம்பெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கூட்டு எதிரணி இதனைத் தெரிவித்துள்ளது.

பேரூந்துக் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது!

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து பேரூந்துக் கட்டணங்கள் 3.2 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சற்றுமுன்னர் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவித்துள்ளார். பேரூந்துக் கட்டண அதிகரிப்புத் தொடர்பாக போக்குவரத்து அமைச்சுடன் இன்று முற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதனையடுத்து கட்டண உயர்வு குறித்து தீர்மானிக்கப்பட்டதாக கெமுணு விஜேரத்ன தெரிவித்தார்

சிறுமி கொலை : சந்தேகநபரின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

மஹியங்கனை - ரிதீமாலியத்த - மொரான பிரதேசத்தில் ஒன்பது வயது பாடசாலை மாணவியின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள  சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.அதனடிப்படையில் , குறித்த சிறுமி பாடசாலை விட்டு வீடு வரும் வழியில் வைத்து அவரை கடத்தியதாக குறித்த சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.பின்னர் சிறுமியின் உணவு பெட்டியில் சுற்றப்பட்டிருந்த துணியை கொண்டு அவரின் வாயை கட்டியுள்ளார்.துஷ்பிரயோகத்திற்கு உள்ளான...

சுசந்திகா வேறு நபருடன் வீட்டில் இருந்தார்! அதனால்தான் தாக்கினேன்!- கணவர்

குறுந்தூர ஓட்ட வீரங்கனை சுசந்திகா ஜயசிங்க வேறு நபருடன் இரவு வீட்டில் இருந்து சிக்கிக்கொண்டதால், தான் அவரை தாக்கியதாக சுசந்திகாவின் கணவர் தம்மிக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்.. மூன்று மாதங்களுக்கு முன்னரும் ஆண் ஒருவருடன் இருந்தது, பொரல்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து, பின்னர் இருவரும் சமாதானத்திற்கு வந்திருந்தோம். நேற்றிரவு இன்னுமொரு ஆணுடன் வீட்டில்...

வடக்கில் இன அழிப்பு இடம்பெறவில்லை: சரத்பொன்சேகா

இராணுவத்தின மீது படிந்துள்ள கறைகளை அகற்றவும் வடக்கில் இன அழிப்பு இடம்பெறவில்லை என்பதை நிரூபிக்கவும், தற்போது காலம் வந்துள்ளதாக முன்னாள் இராணுவ தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். யத்தக்குற்ற விசாரணைகளை தாமதப்படுத்தவது நாட்டிற்கு மேலும் அழுத்தமாகவே அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா...

படுகொலைகளைச் செய்த படையினரைக் காப்பாற்றும் முயற்சியில் இராணுவத் தளபதி!

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராகச் சுமத்தப்படும் படுகொலைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விட்டுக்கொடுப்பு அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு இலங்கை சட்டமா அதிபர் ஜயந்த ஜெயசூரியவிடம் இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார். சட்டமா அதிபரை அவரது பணியகத்தில் சந்தித்த இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக சத்ஹண்ட சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை இராணுவத்தினருக்கு...

மாணவி கொலை விவகாரம்: ஒருவர் கைது

மஹியங்கனையில் சடலமாக மீட்கப்பட்ட 9 வயது பாடசாலை மாணவியின் மஹியங்கனை குடாலுனுக கனிஷ்ட வித்தியாலயத்தில் 4 ஆம் தரத்தில் கல்விப்பயிலும் 9 வயதான மாணவியின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், 32 வயதுடை நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குடாலுனுக பனுல்ல காட்டுப்பகுதியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை (17) குறித்த மாணவி சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

குற்றச்சாட்டை நிரூபித்தால் கழுத்தை அறுத்துக் கொள்வாராம் மஹிந்த

தான் 18 பில்லியன் டொலர்களை கொள்ளையிட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிரூபித்தால் கழுத்தை அறுத்து கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் அந்த நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அவ்வாறு சில சந்தர்ப்பங்களில் குற்றம்சுமத்தியுள்ளதாக இதன்போது குறிப்பிட்ட மஹிந்த, தான் ஒரு...

உதய கம்மன்பில விளக்கமறியலில்

பொலிஸ் விஷேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஜூலை 01ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று காலை கைது செய்யப்பட்ட உதய கம்மன்பில கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நுகேகொட, பாகொட வீதியில் உள்ள அலுவலகத்தில் வைத்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்...

மர்மமான முறையில் சிறுமி கொலை

மஹியங்கனை - ரிதிமாலியெத்த  - மோரான பிரதேசத்தில் 9 வயதான மாணவியொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பி கொண்டிருந்த போதே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.பாடசாலையில் இருந்து 2.5 கிலோ மீற்றர் தூரம் அளவில் இவரின் வீடு உள்ளதாக தெரியவந்துள்ளது.இதனோடு அவர் செல்லும் பாதை ஆள் நடமாட்டமில்லாத பிரதேசம்...

கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலைகளில் பணியாற்றினால் சட்ட நடவடிக்கை

கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பணியாற்றினால் அந்த நிறுவனம் தடை பட்டியலுக்குள் சேர்க்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. தனியார் சுகாதார சேவைகளுக்கான கட்டணத்தை 20 வீதம் அதிகரிக்குமாறு தனியார் வைத்தியசாலை உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கையை சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது. தனியார் வைத்தியசாலை உரிமையாளர்கள் நேற்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்....

மாத்தளையில் காணாமல் போன மாணவர்கள் யாழில் பிடிபட்டனர்!

மாத்தளை நாவுல பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தரம் 8 மற்றும் 9ம் தரத்தில் கல்வி கற்கும் டி.எம் சசிந்த பண்டார மற்றும் எ.ஜி.எஸ்.எஸ். அம்பகஸ்பிட்டிய என்ற குறித்த மாணவர்களே காணாமல் போயுள்ளனர். கடந்த 14ம் திகதி குறித்த இருவரும் காணாமல் போயுள்ள நிலையில் 15ம் திகதி...

ஜனாதிபதி, பிரதமரை முகப்புத்தகத்தில் மிரட்டியவர், ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், முகப்புத்தகத்தில் மிரட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சுகத் குமார லக்மன, தான் மலேஷியாவில் சட்டவிரோதமாகக் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதியன்று, மலேஷியாவில் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் தன்னைக் கைதுசெய்து 5 நாட்கள் தடுத்துவைத்துப் பின்னர் இலங்கைக்கு...

சுகாதார சேவைகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது

தனியார் சுகாதார சேவைகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தனியார் சுகாதார சேவை ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் நிர்ணயிக்கப்ட்டுள்ளதுடன், மருத்துவ பரிசோதனை கட்டணங்கள், மருத்துவ கட்டணங்கள், மற்றும் வைத்தியசாலை கட்டணங்களை அதிகரிக்க ஒருபோதும் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். தனியார் வைத்தியசாலைகளின் பிரதானிகளுடன் கொழும்பில் நேற்று காலை...

சுசந்திகா வைத்தியசாலையில் அனுமதி; கணவன் கைது

ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது கணவனால் தாக்குதலுக்கு உள்ளான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம், இந்த ஆண்டு இறுதிக்குள் GSP+ சலுகையை பெற்றுக் கொள்வோம்

நாட்டின் பொருளாதார நிலமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (17) அலரி மாளிகையில் வைத்து விஷேட உரை ஒன்றை நிகழ்த்தி இருந்தார். தனது விஷேட உரையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதிக்கான தடை நேற்று நீக்கப்பட்டது. நாம் அதிகாரத்திற்கு வந்தால் இந்த தடையை நீக்குவதாக 2014ம் ஆண்டு...

தொலைபேசி பயன்பாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கும் ஜனாதிபதி!

ஜனாதிபதி மட்டுமே கையடக்கத் தொலைபேசியை சரியான முறையில் பயன்படுத்துவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கலந்துரையாடல்களுக்கு வரும் போது ஒரு சிலருடைய தொலைபேசிகள் ஒலித்துக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக கலந்துரையாடல்களை மேற்கொள்வது கடினம். ஜனாதிபதி தனது அலுவலகத்துக்கு வந்தவுடன் தனது கையடக்கத் தொலைபேசி நிறுத்தி...

அஞ்சல் பணியாளர்களின் போராட்டம் முடிவு

அஞ்சல் பணியாளர்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. அஞ்சல் சேவையாளர்களின் தொழிற்சங்க முன்னணி இதனைத் தெரிவித்துள்ளது. புதிய ஆட்சேர்ப்பு முறைமை மற்றும் மேலதிக நேர பணிகளுக்கான கொடுப்பனவுகளை மீள வழங்கல் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராடடம் நடத்தப்பட்டது. பிரதமரின் செயலாளர், அரச நிர்வாக அமைச்சு மற்றும் அஞ்சல் சேவைகள் அமைச்சு...
Loading posts...

All posts loaded

No more posts