- Sunday
- January 19th, 2025
என்னுடன் குரோதம் இருந்தால் என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடையுங்கள். அதைவிடுத்து எனது பிரதேச கிராம மக்களை பழிவாங்க வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எமது ஆட்சிக் காலத்தில் குடிசைகள் ஏற்படுத்தப்படவில்லை. அதற்கு மாறாக வசதியான வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹுங்கம அத்புடுவ விஹாரையில் இடம்பெற்ற மத வைபவத்தில்...
மத்திய வங்கியின் நம்பகத் தன்மை மற்றும் நற்பெயரினை நிலைநிறுத்துவதனையே எனது முதன்மையான பொறுப்பாக கருதுகின்றேன் என மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, அதற்கான நியமனக் கடிதத்தினை நேற்று (04) காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டார்....
மாத்தறை புதிய மது வரி அத்தியட்சகர் அலுவலகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று திறந்து வைக்கப்பட்டது.இச்சந்தர்ப்பத்தில் மாத்தறை மாவட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர். கலால் சட்டத்தை மீறும் நபர்களை தடுத்து வைப்பதற்காக மதுவரி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு அறை ஜனாதிபதியால் இதன் போது திறந்துவைக்கப்பட்டது.மேலும் இச்சந்தர்ப்பத்தின் போது சில அமைச்சர்கள்...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில், மொழிப்பெயர்பாளராகவிருந்த ஜோர்ஜ் மாஸ்டரை விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ள கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, அவ்வமைப்பின் ஊடகச்செயலாளர் தயா மாஸ்டர் தொடர்பிலான வழக்கை டிசெம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
தனியார் பஸ் ஒன்றியத்தினர் நாடளாவிய ரீதியில் இன்று மேற்கொள்ளவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தனியார் பஸ் உரிமையார்கள் சங்கத்தினருடன் இடம்பெற்றது. பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பாக உரிய...
நக்கிள்ஸ் வனப்பகுதியில், பாதுகாக்கப்பட்ட வன விலங்குகளை வேட்டையாடியதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர், நேற்று ஞாயிற்றுக்கிழமை (03), தமது சட்டத்தரணியுடன் பன்விலை பொலிஸில் சரணடைந்துள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் தொடர்பில் ஏற்கெனவே இருவரைக் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர். கடந்த சில தினங்களாக வன விலங்குகளை வேட்டையாடிய சிலர் அவற்றுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், சமூக...
எந்தவகையான எரிபொருள் விலையும் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபன தலைவர் ஜி.வீ. ஜயசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருள் பலவற்றினதும் விலையை அதிகரிக்குமாறு தெரிவித்து இலங்கை ஐ.ஓ.சி. நிறுவனத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவித்தல் கிடைக்கப் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பரிந்துரைக்கப்பட்டுள்ள கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையிலான கலந்துரையாடலின் பின்னர் மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் திங்கட்கிழமை மத்திய...
இலங்கை மத்திய வங்கி ஆளுநராக புதியவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.புதிய ஆளுநராக டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து கட்சிகளினதும் ஆலோசனைகளைப் பெற்றதன் பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இவர் பதவியை ஏற்றுக்கொள்ள உள்ளர். இலங்கையைச் சேர்ந்த...
மாலபே தனியார் மருத்துவக்கல்லூரி சட்டரீதியான அந்தஸ்தை வழங்குவதற்காக சுகாதார அமைச்சு மேற்கொள்ளும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்தியர்கள் சங்கம் நாளை மறுதினம் திங்கட்கிழமை அடையாள பணிப்பகிஷ்கரிப்பு ஒன்றில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிரகாரம் திங்கட்கிழமை காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை நாட்டிலுள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் பணிபுரியும்...
தனியார் பேருந்து கட்டண உயர்வு தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்திற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தனியார் பேருந்து நிறுவனங்களின் சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது. தனியார் பேருந்து கட்டண மறுசீரமைப்பு தொடர்பான தேசிய கொள்கை படி தனியார்...
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் சக்தியை கட்டியெழுப்பும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார். பதுளை பிரதேசத்தில் இன்று ஆரம்பிக்கப்படும் என்று அவர் கூறினார். அத்துடன் இம்மாத இறுதிப் பகுதியில் பாத யாத்திரை ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். அரசியல் கட்சியல்லாமல் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் சக்தியாக பலம் பெறுவதாக...
வருடாந்த பஸ் கட்டண அதிகரிப்பு இன்று (01) முதல் மேற்கொள்ளப்படாவிட்டால் எதிர்வரும் 03ம் திகதி முதல் போராட்டத்தில் இறங்குவதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு கூறியுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்த சங்கத்தின் செயலாளர் அன்ஞன பிரியன்ஜித் கூறினார். எவ்வாறாயினும் தாம் போராட்டங்களில் ஈடுபடப்போவதில்லை என இலங்கை தனியார் பஸ்...
இனிமேல் எனது அரசியல் தலைவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என்று அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளும் நிகழ்வு நேற்று காலை இடம்பெற்றது. இந்த நிகழ்விலேயே அமைச்சர் சரத் பொன்சேகா இவ்வாறு கூறினார்....
பிரபல பாதாள உலகத் தலைவர் ஒருவரின் இறுதிக்கிரியையின்போது உலங்குவானூர்தி யிலிருந்து மலர்கள் தூவப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்னர் குறித்த பாதாள உலகக் குழுத் தலைவரின் உடல் இரத்மனாலையிலிருந்து மயானத்துக்கு எடுத்துச்செல்கையில் உலங்குவானூர்தியிலிருந்து பூக்கள் தூவப்பட்டுக்கொண்டிருந்தது. அண்மையில் இனந்தெரியாத நபர்களினால் மஹர நீதிமன்றத்துக்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்ட போதைப்பொருள் வர்த்தகரும் பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவருமான...
பிரதி அமைச்சர் பாலித தேவப்பெரும மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைசெய்ய முயற்சித்தவேளை காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கழுத்துறையில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை ஏற்றுக்கொள்வதில் ஏற்பட்டிருந்த பிரச்சனை காரணமாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதி அமைச்சர் பின்னர் உண்ணாவிரதப் போராட்டமாகத் தொடர்ந்தார். இந்நிலையில், அவரது கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காமையால் மின்விசிறியில் கழுத்தைக் கட்டிக்கொண்டு தற்கொலை...
நாட்டில் உயர் அந்தஸ்துள்ள அதாவது பணம் படைத்தவர்கள் ஆண் விபசாரிகளை நாடுவதாகவும் இதனால் ஆண்களுக்கு எயிட் நோய் அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர். சமூதாயத்தில் உயர் அந்தஸ்த்திலுள்ள பலர் ஓரின சேர்க்கையாளர்களின் சேவையை பெற்றுகொள்கின்றனர். இந்நிலைமை தற்போது நகர்புறங்களில் அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் ஆண் விபசாரிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதுடன் எயிட்ஸ் நோயாளர்களினும்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா சம்பந்தனுக்காக வீடுகளைத் தேடிக்கொண்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை இரா.சம்பந்தனுக்கு அனைத்து வசதிகளுடனும்கூடிய 3 வீடுகள் காண்பிக்கப்பட்ட போதிலும் அவை எதுவும் தனக்குப் பொருத்தமானதாக அமையவில்லையென மறுத்துவிட்டார். ஆனால், இரா.சம்பந்தனின் வயதினைக் கருத்திற்கொண்டு அவருக்கு நிலத்துடன் அமைந்துள்ள வீடொன்றைப் பார்த்துவருவதாகவும், அவர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகையால்...
சகல வகைகளையும் சேர்ந்த முழுமையான பீடைக்கொல்லிகளை நாட்டுக்கு இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்தலை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடைசெய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். நச்சுத்தன்மையற்ற உணவுகளைப் பெற்றுக்கொடுத்து நாட்டு மக்களை சுகதேகிகளாக ஆக்குவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் அரசாங்கம் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. பீடைக்கொல்லி, கிருமிநாசினி...
புனித ரமழானில் முஸ்லிம்களின் நோன்பு துறக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (28) மாலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. முஸ்லிம் மதத் தலைவர்கள் உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் பெருந்தொகையானோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் நாட்டில் சமாதானம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக இதன் போது துஆ பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய...
Loading posts...
All posts loaded
No more posts