- Sunday
- January 19th, 2025
பெறுமதி சேர் வரி விகிதத்தை அதிகரித்து தேசிய வருமான வரி ஆணையாளர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நூற்றுக்கு 11 வீதமாக இருந்த பெறுமதி சேர் வரியை 15 வீதமாக அதிகரிக்க அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார். காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் வாக்குமூலம் அளிக்க அவர் இன்று முன்னிலையான போதே கைது செய்யப்பட்டுள்ளார்.சுமார் 70 மில்லியன் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
971ஆம் ஆண்டு அரசியல் கைதியாக மட்டக்களப்பில் தான் சிறைவைக்கப்பட்ட சிறைச்சாலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று பார்வையிட்டார். அது தொடர்பான வீடியோவை, ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு வரமறுத்த இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பொறித்த நினைவுக்கல்லை, அவர் மீது கொண்ட ஆத்திரத்தினால் அடித்து நொக்கினார் விகாராதிபதி. ஜனாதிபதி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்புக்கு பயணம் செய்து மட்டக்களப்பு விமானநிலையத்தைத் திறந்துவைத்தார். மட்டக்களப்புக்கு வருகை தந்த மைத்திரிபால சிறிசேனவை மட்டக்களப்பு விகாரைக்கு வருமாறு மங்களராமய விகாரையின் விகாராதிபதி வண.அம்பிட்டியே சுமணரத்ன தேரர்...
தனியார் பஸ் கட்டணங்களை 6 தொடக்கம் 7 சதவிகிதம் அதிகரிப்பதற்கான அனுமதியை வழங்க அரசு தீர்மானித்திருக்கின்றது என போக்குவரத்து அமைச்சின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. அதன்பிரகாரம் தற்போது 8 ரூபாவாகவுள்ள ஆகக்குறைந்த கட்டணம் 9 ரூபாவாகவும், 12 ரூபா கட்டணம் 13 ரூபாவாகவும் உயரலாம் எனவும், பஸ் உரிமையாளர்களையும் பயணிகளையும் பாதுகாக்கும் நோக்கத்திலேயே இந்த உயர்வு...
இறுதி யுத்தத்தின்போது சிறீலங்கா இராணுவத்தினர் கொத்துக்குண்டுகளை வீசவில்லையென போரை வழிநடத்திய இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அத்துடன் கொத்துக் குண்டுகளை வாங்குவதற்கான பணபலம் தம்மிடம் இருக்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவிக்கையில், இறுதி யுத்தத்தில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தவில்லை. அதனை வாங்குவதற்கான பணபலமும் எம்மிடமிருக்கவில்லை. இது தொடர்பாக நான் சாட்சியமளிக்கவும் தயாராக...
இலங்கைத் தீவு இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சம்பூர் அனல் மின் நிலைய திட்டத்தை விரைவில் செயற்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கையினை வெகு விரைவில் மேற்கொள்ள வேண்டும் என சிறிலங்கா பொறியியலாளர் நிறுவனத்தின் மின் சக்தி குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்சார செலவுகள் உயர்வடைந்துள்ளமையினால் மீண்டும் மின்சாரம் தடையேற்படுவதற்கான ஆபத்துக்கள் காணப்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கை...
கல்குடா காவல்துறைப் பிரிவில் தமிழர் ஒருவர் சிங்கள இனத்தவர்களால் தலையில் பலமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதையடுத்து கல்குடா பகுதியில் பதற்ற நிலை நிலவுவதாகத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நேற்று அதிகாலை நடைபெற்றுள்ளது. கல்குடா பிரதான வீதியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தங்கராசா வயது (51) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த...
"இலங்கையின் உள்நாட்டு நிர்வாகத்திலோ அல்லது நீதித்துறையின் செயற்பாடுகளிலோ வெளிநாட்டு நீதிபதிகளோ அல்லது சர்வதேச நீதித்துறை சார்ந்தவர்களோ தலையிடுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை." இவ்வாறு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. பாணந்துறை நகரசபை விளையாட்டரங்கில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற ஸ்ரீ ராமான்ய மகா நிக்காயாவின் முக்கிய சமய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு...
கூட்டு எதிர்க்கட்சி நேற்றுமுன்தினம் நிறுவிய நிழல் அமைச்சரவை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நிழல் அமைச்சரவையில் வழங்கப்பட்டுள்ள பிரதமர் மற்றும் ஏனைய அமைசுக்களிலிருந்து தன்னை நீக்குமாறும் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார் என்று அரசியல் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. நிழல் அமைச்சரவை ஒன்றை...
போலி விசா அனுமதிப்பத்திரத்தைக் கொண்டு, கனடாவுக்கு பயணிக்க முயற்சித்த இலங்கையர்கள் நால்வரை, குற்றப்புலனாய்புப் பிரிவினர், இன்று வெள்ளிக்கிழமை (08), கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். இவர்கள், யாழ்ப்பாணத்தின் முள்ளிபுரம் மற்றும் இளவாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24 முதல் 33 வயதுக்கிடைப்பட்ட இளைஞர் யுவதிகளே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் சகோதர...
நகல்ஸ் வனப் பகுதியில் காட்டு விலங்குகளை வேட்டையாடியதாக, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அறுவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, சந்தேகநபர்களை 25,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவித்து, தெல்தெனிய மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். சமூல வலைத்தளங்களில் வந்த புகைப்படங்களின் பிரகாரம் குறித்த...
ஸ்ரீலங்காவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கிவரும் கூட்டு எதிர்கட்சியினர் முதல்முறையாக நிழல் அமைச்சவையொன்றை உருவாக்கியுள்ளனர். இதன்பிரகாரம் மஹிந்த ராஜபக்ச நிழல் பிரதமராகவும் தேசிய பாதுகாப்பு சிறப்புரிமைகள் மற்றும் மத விவகார அமைச்சராகவும் பெயரிடப்பட்டுள்ளார். பந்துல குணவர்தன நிழல் நிதி அமைச்சராகவும் நாமல் ராஜபக்ச நிழல் வெளிவிவகார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். விமல் வீரவங்ச, வீடமைப்பு...
பேராதனை பல்கலைக்கழத்தின் இரு மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் 11 பேர் காயமடைந்துள்ளனர். அப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையிலேயே இவ்வாறு மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை காயமடைந்தவர்கள் தற்போது பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொத்தணிக் குண்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுத் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து, சட்டரீதியான நிலைப்பாடே என்று காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். சிறிலங்கா படையினர் போரில் கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தாலும் கூட, அது சட்டவிரோதமானது அல்ல என்றும், 2010ஆம் ஆண்டே, கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்யும் அனைத்துலக பிரகடனம் நடைமுறைக்கு...
அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட 133 பொருட்கள் மற்றும் 21 சேவைகளுக்கு, வற் (பெறுமதி சேர் வரி) உள்ளடக்கப்படமாட்டாது என்று தெரிவித்த அரசாங்கம், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், அசாதாரண முறையில் அதிகரிக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு, விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...
இரத்தினபுரி, நிவித்திகலை சிதுறுபிட்டியவில், 50 வயதுடைய நபரினால் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 11 வயது மாணவியான எஸ்.சரோஜினியைக் கண்டறிய, துரித நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொள்ள வேண்டும் என, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், இரத்தினபுரி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இ/நிவி/தேலை தமிழ் ஆரம்ப பாடசாலையில், தரம்...
ஆசிய நாடுகளில் பரவலாக நடைபெற்றுவரும் தீவிரவாத தாக்குதல்களையடுத்து இலங்கையின் முப்படைகளும், புலனாய்வுப் பிரிவினரும் சர்வதேச புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து தொடர்ச்சியான கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக இலங்கை இராணுவத்தின் ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார். தற்போது, ஆசிய நாடுகளில் பரவலான தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றுவரும்நிலையில் இலங்கையின் பாதுகாப்புத் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு...
சமாதானம், நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை, தாராளத்தன்மை என்பவற்றினூடாக மனிதகுலம் மேம்பாடடைய இஸ்லாம் காட்டும் பாதையே இன்றைய உலகுக்கு மிக அவசியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருக்கும் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் எடுத்துக்காட்டியுள்ளார். ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஒரு உன்னத சமயக் கோட்பாட்டைப் பின்பற்றும் இஸ்லாமியர்களினால் மனித சமூகத்திற்கு...
முஸ்லிம்களின் ஆன்மீக கட்டுப்பாடு, அர்ப்பணிப்பு போன்றே சமத்துவத்துக்கு வழிகாட்டும் அவர்களது தாராளத்தன்மை தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் மிகச் சிறந்த முன்மாதிரியாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்திருக்கும் ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கிறார். பிரதமரின் இந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, இஸ்லாமியர்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, தலைப்பிறையினைக் கண்ட பின்பு கொண்டாடும்...
Loading posts...
All posts loaded
No more posts