அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளது

அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்விலைகள் பின்வருமாறு, கோழி இறைச்சி (தோலுடன்) 410 ரூபா கோழி இறைச்சி (தோல் இல்லாமல்) 495 ரூபா பருப்பு - 169 ரூபா சீனி (1 கிலோ கிராம்) - 95 ரூபா நெத்தலி (தாய்லாந்து) 1 கிலோகிராம் - 495 ரூபா நெத்தலி (டுபாய்) 1 கிலோகிராம்...

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் இன்றைய தினமும் தொடர்வதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழு கூறியுள்ளது. தமது கோரிக்கைகளுக்கு இதுவரை நியாயமான தீர்வுகள் கிடைக்கவில்லை என்று அதன் இணைத் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே கூறுகின்றார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். எவ்வாறாயினும்,...
Ad Widget

பல்கலைக்கழக பணியாளர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு!

அரச பணியாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபாய் மாத சம்பளத்தை பல்கலைக்கழகங்களில் பணி புரியும் பணியாளர்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்கான சுற்றரிக்கையினை வெளியிடுவதற்கு உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழகங்களின் அலுவலக பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது எல்லையானது 57 இல் இருந்து 60 வரை அதிகரிக்கப்படவுள்ளது. இவர்களுக்கான விசேட கொடுப்பனவாக 20 வீதத்தை ஊழியர் சேமலாப நிதியில் வைப்பிலிடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக...

75 நாட்கள் அல்ல 75 செக்கன்களுக்கும் இந்திய மீனவர்களுக்கு அனுமதி இல்லை

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட அனுமதி வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்படியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின் வடக்கு மீனவர்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டொன்றின் 75 நாட்களுக்கு...

சமையல் நிகழ்ச்சியில் நிஷா பிஸ்வால்!

மூன்று நாள் பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் அரசாங்கத் தொலைக்காட்சியான ரூபவாகினி தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார். ரூபவாகினி தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் ‘நுகசெவன’ என்ற சமையற்கலை தொலைக்காட்சி நிகழ்ச்சியிலேயே கலந்துகொண்டார். இலங்கையின் பிரபல சமையற்கலை நிபுணர் பப்ளிஸ் சில்வாவின் வழிகாட்டலின் கீழ் நிஷா பிஸ்வால் உள்ளூர் உணவொன்றைச்...

கடத்தப்பட்ட மாணவர்கள் உயிருடனுள்ளனர் !! வைபரில் தகவல்!

கடந்த 2008 ஆம் ஆண்டு தெஹிவளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து கடத்தப்பட்ட ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேரில் மாணவர்கள் அனைவரும் உயிருடனேயே உள்ளதாக, பாதிக்கப்பட்டோரின் உறவுகளுக்கு வைபர் ஊடாக செய்தி அனுப்பட்டுள்ளதாக மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர். கடந்த 10 ஆம் திகதி நள்ளிரவில் சவூதி அரேபியாவில் உள்ள உறவினர் ஒருவர் ஊடாக...

அரசுக்கு நெருக்கடி கொடுக்க அமெரிக்கா தயக்கம்! நிஷா பிஸ்வால்

"இலங்கையில் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் அரசின் பொறுப்புக்கூறல் பொறிமுறை அமைக்கப்படும்போதுதான் சர்வதேசத்தின் பங்களிப்பு குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு அறிவிக்கப்படும். அதனை தற்போது கூறி நெருக்கடிகளை ஏற்படுத்த முடியாது.'' இவ்வாறு அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய...

கொத்துக்குண்டு பாவனை சட்டவிரோதமானதல்ல! கண்டனங்கள் மத்தியில்மீண்டும் பரணகம

காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம கொத்துக்குண்டு பாவனையை நியாயப்படுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், தனது கருத்தை நியாயப்படுத்தி மீண்டுமொரு அறிக்கையை அவர் நேற்று வெளியிட்டுள்ளார். 2010 ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் இலங்கை படையினர் கொத்துக்குண்டுகளை பாவித்திருந்தால் அது தவறானதல்ல என்பதே அவரது வாதமாகும்....

6 மாத கால அலசலின் பின்னரே நாமல் கைது! அரசியல் பழிவாங்கல் இல்லை என்கிறது அரசு!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மூத்த புதல்வருமான நாமல் ராஜபக்‌ஷவின் கைதானது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையென மஹிந்த ஆதரவு அணி முன்வைக்கும் குற்றச்சாட்டை அரசு நிராகரித்தது. 6 மாதங்கள் விசாரணை நடத்தப்பட்ட பின்னர், உரிய நெறிமுறைகளுக்கு அமையவே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா...

யாழிலிருந்து வெள்ளவத்தைக்கு புதிய பஸ் சேவை

இலங்கைப் போக்குவரத்துச் சபை யாழ் சாலையும் ஹோமாகம சாலையும் இணைந்து வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புதிய பஸ் சேவை யொன்றை நாளை (15.7.2016) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இச் சேவை தினமும் வெள்ளவத்தையில் இருந்து இரவு 7 மணிக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து தினமும் இரவு 10 மணிக்கும் நடைபெறும். இப் பஸ் யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம், புத்தளம் ஊடாக...

இன்னும் பல ராஜபக்சாக்கள் கைது செய்யப்படுவர்!- நிதி அமைச்சர்

எதிர்வரும் காலங்களில் இன்னும் பல ராஜபக்சாக்கள் கைது செய்யப்படவுள்ளதாக நிதிஅமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கோத்தா, பசில் மட்டுமல்ல இன்னும் பலர் கைதுசெய்யும் பட்டியலில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிதி அமைச்சில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையில் வாழும் பிரஜை என்ற ரீதியில் அடுத்த கைது யாரென தான் அறிந்து...

சம்பந்தன் தேவையில்லையென்கிறார் சுமந்திரன் தேவையென்கிறார் யார் கூட்டமைப்பின் தலைவர்? அரசாங்கம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா? சுமந்திரனா? அரசாங்கத்திற்கு சந்தேகம் எழுந்துள்ளது என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். சம்பந்தனின் கருத்தை மீறி சுமந்திரன் கருத்து வெளியிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். யுத்தக் குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகளை இணைத்துக்கொள்ள அரசாங்கம் இணக்கம்...

நிவாரண விலையில் அத்தியாவசிய பொருட்கள்

நிவாரண விலையின் கீழ் 15 வகையான அத்தியாவசிய பொருட்களை நுகர்வோருக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.குறித்த பொருட்களுள் சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய்த்தூள், டின் மீன் , பயறு, கௌபி, நெத்தலி, கடலை, கொத்தமல்லி, பாம் எண்ணெய், சோயா, மாசி மற்றும் கருவாடு ஆகிய பொருட்கள் அடங்குவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.நிதி அமைச்சில்...

விரைவில் உள்ளூராட்சித் தேர்தல்கள்! முதற்கட்டமாக வடக்கு கிழக்கில்!!

உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களை பகுதிபகுதியாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நம்பகமாகத் தெரியவருகிறது. அதன்படி எல்லை நிர்ணயப் பணிகள் முடிவுற்ற பகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கு அரசு பச்சைக்கொடி காட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் எல்லை நிர்ணயம் முடிவுற்றிருக்கும் வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தல்களை விரைவில் நடத்த முன்னேற்பாடுகளைச் செய்ய ஆயத்தங்கள் நடந்துவருவதாக அறிய முடிகின்றது. கூட்டு...

பஸ் கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை அனுமதி

பஸ் கட்டணத்தை 100க்கு 6 சதவீதம் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்புக் தொடர்பில் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்னறன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் இந்த அதிகரிப்பு அமுலுக்கு வரவுள்ளதாக தெரியவருகின்றது.

மகனை பார்த்து கண்ணீர்விட்டழுத தாய் : கைதிகளுக்கு யோகாசனம் கற்றுக்கொடுக்கிறாராம் நாமல்

வெலிக்கடை சிறைச்சாலையில், சிறைவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலையில் என்ன என்ன செய்கிறார் என்று, அவரை பார்த்துவிட்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும தெரிவித்தார். அங்குள்ள சிறை கைதிகளுக்கு அவர், யோகாசனம் கற்றுக்கொடுக்கின்றார் என்றும் டலஸ் எம்.பி தெரிவித்தார். அதேபோல, அவர் சிறைச்சாலையில் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றார் என்றும் கூறினார். இதேவேளை, நாமல்...

பல்கலைக்கழக மாணவன் தற்கொலையா? கொலையா?

மொரட்டுவை பல்கலைக்கழக மாணவன் ஒருவன் கட்டுபெத்தை பிரதேசத்தில் உள்ள விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மொரட்டுவ பொலிஸார் கூறினர். கற்றல் நடவடிக்கையின் பின்னர் நேற்றைய தினம் மாலை குறித்த மாணவன் விடுதிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பின்னர் குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார்...

முழுக் குடும்பத்தை சிறையில் அடைத்தாலும் அரசியல் பயணத்தை தடுக்க முடியாது!-மஹிந்த

ஒட்டுமொத்தக் குடும்பத்தை சிறையில் அடைத்தாலும் மக்களுக்கான எனது அரசியல் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார். நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டு, ஒரு சில நிமிடங்களில் தனது பேஸ்புக்கில் இட்டுள்ள பதிவொன்றிலேயே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தன் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி தனது பிள்ளைகளை சிறை வைப்பதன்...

மனோகணேசன் அவர்களுக்கு வடக்கு ஊடகவியலாளர்கள் கடிதம்!

கௌரவ மனோ கணேசன் சகவாழ்வு, மொழி அமுலாக்கல் துறை அமைச்சர் இலங்கை ஜனநாயக சோசலிசக்குடியரசு. வடக்கு ஊடகவியலாளர்களது தெற்கு பயணம் பனையோலையும் எழுத்தாணியும் சேர்ந்ததோர் நட்புறவு பயணம் எனும் தொனிப்பொருளில் இலங்கை அரசின் ஊடகத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த மார்ச் சுமார் 125 தெற்கு ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக வடக்கிலிருந்து 54 ஊடகவியலாளர்கள்...

நாமல்க்கு விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான, ஹம்பாந்தோட்ட மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் நேற்று காலை ஆஜராகி வாக்குமூலமளித்தார். அதனையடுத்து,...
Loading posts...

All posts loaded

No more posts