சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகமா? உடன் அறிவியுங்கள்

இணையம் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஊடாக மேற்கொள்ளப்படும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் அல்லது வேறு துஷ்பிரயோகங்கள் குறித்து, முறையிட புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய 077 32 20 032 என்ற கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பதன் மூலமோ, குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமோ...

ரவிராஜ் படுகொலை: 7பேருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் விசாரணை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை தொடர்பாக 7 சந்தேக நபர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் படுகொலை வழக்கில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதீப் சந்திம தாக்கல் செய்த மீளாய்வு மனு நேற்று (புதன்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு...
Ad Widget

த.வி.பு என பொறிக்கப்பட்ட இலக்கத்தகடு, சயனைட் குப்பி மீட்பு

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவிலங்குதுறை பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து, த.வி.பு என பொறிக்கப்பட்ட இலக்கத்தகடு, சேதமடைந்த நிலையிலான அடையாள அட்டை, கைக்குண்டு, பழுதடைந்த நிலையிலான சயனைட் குப்பி என்பவை செவ்வாய்க்கிழமை (19) மாலை மீட்கப்பட்டுள்ளன என்று காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். மாவிலங்குதுறை கிராமத்திலுள்ள காளிகோவில் வீதியில் தங்கரசா தவேந்திரன் என்பவருக்கு சொந்தமான காணியில்...

தொலைபேசி கட்டணங்களுக்கு வற் வரி இல்லை!

தொலைபேசி கட்டணங்களுக்கு வற் வரி சேர்க்கப்படாது என தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் எஸ். சிறிசேன தெரிவித்துள்ளார். வற் வரி அதிகரிப்பினை இடைநிறுத்துமாறு அண்மையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. இந்தநிலையில் குறித்த தீர்ப்பிற்கு அமைய தொலைபேசி கட்டணங்களில் வற் வரியை சேர்க்க வேண்டாம் என தொலைபேசி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக...

பசில் ராஜபக்‌ஷ வைத்தியசாலையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ உடல் நல பாதிப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலை வைத்திய அதிகாரியின் பரிந்துரைப்படி அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனிமதிக்கப்பட்டுள்ளார். பசில் ராஜபக்‌ஷவிற்கு வைத்தியப் பரிசோதனை ஒன்று மேற்கொள்வதற்காகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உப்புல்தெனிய கூறினார்.

ஆகஸ்ட் முதல் இபோச பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு

ஆகஸ்ட் ஆரம்பம் முதல் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களுக்கான கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக அபேசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி நூற்றுக்கு 6 வீதத்தினால் இவ்வாறு பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபைக்கு தற்போது ஏற்படும் செலவுகள் அதிகரித்துள்ளமையே இதற்குக் காரணம் என, பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டி...

பஷில் ராஜபக்ஷ கைது

வாக்குமூலம் வழங்குவதற்காக நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் இன்று முன்னிலையாகியிருந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஆட்சிக்காலத்தில் திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய நிதிமோசடி தொடர்பிலேயே, பஷில் கைதுசெய்யப்பட்டுள்ளார். திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில், பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு, இரண்டு...

நாமல் பிணையில் விடுதலை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இன்று கொழும்பு கோட்டே நீதிமன்றில் நாமலை முன்னிலைப்படுத்தியபோதே பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நாமல் ராஜபக்ஸவுக்கு, 50,000 ரூபா ரொக்கப்பிணையிலும், ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணையிலும் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்க ஜயரத்ன இன்று தெரிவித்தார். மேலும்,...

கதிர்காமத்துக்குச் சென்ற தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்!

நேற்று நண்பகல் 12.00 மணியளவில் கதிர்காமத்திலிருந்து ஏழுமலை செல்லும் வழியில் வைத்து சிங்களவர்களால் தமிழர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, நேற்று நண்பகல் 12.00 மணியளவில் கதிர்காமத்திலிருந்து ஏழுமலை செல்லும் வழியில், முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனம், கதிர்காமம் ஏழுமலைக்குச் செல்லும் வாகனத்திற்கு முந்திச்செல்ல இடம்கொடுக்கவில்லையென இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது,...

2 மாதங்களில் மருந்துகளின் விலை குறையும்!

மருந்துகளின் விலைகளை குறைப்பது தொடர்பிலான நடைமுறை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தயாரிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். மருந்து தொடர்பான புதிய சட்டத்தில் மருந்துகளை கொள்வனவு செய்யும் நடைமுறையின் அளவு குறைக்கப்படும் எனவும் சில நிறுவனங்களின் ஏகபோக உரிமை காரணமாக அவை மீறப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் மருந்துகளின்...

யாழ் பல்கலை மோதலை அடிப்படையாக கொண்டு இனவாதத்தை தூண்டாதீர்கள்!

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதலை அடிப்படையாகக் கொண்டு இனவாதத்தைத் தூண்ட வேண்டாம் என, மாணவர் சங்கம் அனைவரிடமும் கோரியுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்று தொடர்பில் இரு குழுக்களிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான பிரச்சினையை முன்னிறுத்தி சில குழுக்கள் இனவாதத்தை தூண்ட முற்படுவதை வன்மையாக கண்டிப்பதாக...

யாழ் பல்கலை தாக்குதலுக்கு கண்டனம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் கண்டனம் வௌியிட்டுள்ளது. அணைத்து மாணவர்களுக்கும் சுதந்திரமாக கல்வி கற்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என, அந்த சங்கத்தின் தலைவர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன குறிப்பிட்டுள்ளார். அப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் வவுனியா கிளையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய...

நிர்ணய விலையை மீறுவோருக்கு அரசு எச்சரிக்கை

வர்த்தகர்கள் பொருட்களை அதிக விலைக்கு விநியோகிப்பதால், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் நோக்கம் நிறைவேறாத நிலை ஏற்படுவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகார இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச குறிப்பிட்டார். இதனால், கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஊடாக கண்காணிப்பதுடன், அத்தகையவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம்...

இலங்கையில் அதிகரித்துள்ள எச்.ஐ.வி தாக்கம்!

இலங்கையில் எச்.ஐ.வி, எயிட்ஸ் நோயின் அதிகரிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் ராஜித சேனாரதன இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் போலியோ, சின்னம்மை, உட்பட்ட பல நோய்களின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் எயிட்ஸின் தாக்கம் அதிகரித்துவருகிறது என்று அமைச்சர் ராஜித சேனாரதன தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள்...

சிறைச்சாலையில் அதிசொகுசு மெத்தையில் உறங்கும் நாமல் ராஜபக்ஷ!

மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, படுத்துறங்குவதற்கு பாய்க்கு பதிலாக மெத்தை வழக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைவாக வைத்தியரின் பரிந்துரையை கவனத்தில் கொண்டே மெத்தை வழங்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார். இந்த அதிசொகுசு மெத்தை, அவரின் வீட்டிலிருந்தே பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக அவ்வதிகாரி தெரிவித்தார். அவர், சிறைச்சாலையினால் வழங்கப்பட்டுள்ள தலையணையை...

மஹிந்தவுக்கு மைத்திரி கொடுக்கவுள்ள அதிர்ச்சி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்களுக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ளார் என்று இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மஹிந்த சார்பு அணி, மைத்திரி சார்பு அணி என இரண்டு அணிகள் காணப்படுவதால் சு.கவின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை...

பிரான்ஸ் தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம் இலங்கையர்கள் குறித்து அவதானம்

பிரான்ஸில் நடத்தப்பட்டுள்ள பயங்கரவாத தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அந்த தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். இதேவேளை குறித்த தாக்குதலில் இலங்கையர்கள் எவராவது உயிரிழந்து அல்லது காயமடைந்து இருக்கின்றார்களா என்பது குறித்த தகவல்கள் இதுவரை தெரியவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. சம்பவம்...

இலங்கையில் துப்பாக்கி உற்பத்திச்சாலை திறந்து வைப்பு

இலங்கையில் துப்பாக்கி உற்பத்திசாலையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.முதல் தடவையாக இலங்கையில் துப்பாக்கி உற்பத்திசாலையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடவத்தை இஹல பியன்வில பகுதியில் இந்த துப்பாக்கி உற்பத்திச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இந்த உற்பத்திச்சாலையை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். தோமஸ் என்ட் சன்ஸ் நிறுவனம் இந்த நிறுவனத்திற்கு முதலீடு செய்துள்ளது.

புகையிலை நிறுவனங்களின் வரியை 90 வீதமாக அதிகரிக்க யோசனை

அனைத்து வெட் வரிகளையும் நீக்கிவிட்டு புகையிலை நிறுவனங்களின் வரியை 90 வீதமாக அதிகரிப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி மற்றும் தன்னுடைய கூட்டு யோசனையாக அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்பிப்பதாக அவர் மேலும் கூறினார்....

இன்றிலிருந்து 4 நாட்களுக்கு கடும் மழை

இன்று வியாழக்கிழமை (14) முதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரையான நாட்களில் நாடு முழுவதும் கடும் மழை பெய்யும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதில் மத்திய மாகாணத்தில் அதிக மழை பெய்யலாம் எனவும் நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்நிலையம் எதிர்வுக்கூறியுள்ளது.
Loading posts...

All posts loaded

No more posts