- Sunday
- January 19th, 2025
இனவாதத்தை முன்னிறுத்தி பாதயாத்திரை முன்னெடுக்கப்படுகின்றது என்பதற்காக அரசியல் தீர்வு காணும் செயற்பாட்டில் தடைகளோ முட்டுக்கட்டைகளோ ஏற்பட்டுவிடும் என்று தமிழ் பேசும் மக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதனூடாக தீர்வுத்திட்டத்தை முன்வைக்கவே தேசிய அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான டிலான் பெரெரா தெரிவித்தார். கூட்டு எதிரணியின் பாதயாத்திரைக்கு எவ்விதமான...
வடக்கில் தமிழ் மக்களின் சனப்பரம்பல் குடித்தொகை குறைந்துவருவது உண்மைதான் எனினும் தெற்கில் தமிழ்மக்களின் தொகை அதிகரித்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி, மாத்தளை பகுதிகளில் தமிழர்களின் சனத்தொகை அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். விகிதாசார தேர்தல் முறைமையின் விளைவாக வடக்கில் அதிகமான தமிழர் பிரதிநிதித்துவங்களும் தெற்கில் அதிகமான சிங்கள பிரதிநிதித்துவங்களும் உருவாகின எனவே சுமூகமான...
மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்கெதிராக சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டு இன்று 3ஆம் நாள் பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ள நிலையில் மகிந்த அணியினரால் பாதயாத்திரைக்கு முன்னால் தாங்கிவரும் பதாகையில் தமிழ் பிழையாக அச்சிடப்பட்டுள்ளது. இன்றுடன் மூன்றாவது நாள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பிழையைத் திருத்துவதற்கு அவர்களால் எந்தவொரு நடவக்கையும் எடுக்காதது தமிழ் மக்கள் மத்தியில்...
தாங்கிக் கொள்ள முடியாத அளவு கடன் சுமையில் நாட்டை இழுத்துப்போடும் சவால்களுக்கு முகங்கொடுக்கும் நிலை தற்போதைய அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இலங்கை தற்போது 09 இலட்சம் கோடி ரூபா கடன் சுமையை எதிர்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார். கடந்த ஆட்சியாளர்கள் தமது பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றி இருந்தால் நாடு இவ்வாறான ஒரு நிலமைக்கு...
மகிந்த ஆதரவு அணியினரின் கொழும்பு நோக்கிய பேரணியின் இரண்டாம் நாள் இன்று காலை மாவனல்லை உத்துவான்கந்த பிரதேசத்திலிருந்து ஆரம்பமாகியது. இதேவேளை, குறித்த பாதயாத்திரை இன்றைய தினம் நெலும்தெனிய வரை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குறித்த பேரணி பேராதெனியவில் இருந்து மாவனல்லை கனேதென்ன பிரதேசம் வரையில் பேரணியாக சென்றது. “மக்கள் போராட்டம்” எனும் தொனிப் பொருளிலான...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்ளாள் நட்சத்திர வீரர் முரளிதரனையும் அரசாங்கம் அவதூறு செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். கண்டி கடம்பே பிரதேசத்தில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வற் வரி, பட்டத்தாரிகளுக்க தொழில் இன்மை, உள்ளிட்ட மக்கள் விரோத செயற்பாடுகள் மற்றும் மக்களை...
இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயமானது , புதிய இணையத்தள விண்ணப்பப் படிவத்தைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்கான விசாக்களுக்கு வாடிக்கையாளர்கள் மிகவும் இலகுவாக விண்ணப்பிக்க முடியும் என அறிவித்தள்ளது. 'அக்சஸ் யு.கே.' என்றழைக்கப்படும் இந்த இணையத்தள விண்ணப்பப் படிவம் ஒழுங்குபடுத்தப்பட்ட தர்க்க ரீதியான கேள்விகளுடனான குறுகிய படிவம், எடுத்துச் செல்லக்கூடிய நட்புறவான முறைமை, அனுமதியின்றி பயணத்தை மேற்கொள்ளக் கூடிய ஐரோப்பிய...
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்படும் நோயாளர் காவுவண்டிச் சேவையானது நேற்றையதினம் (வியாழக்கிழமை) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் காலிமுகத்திடலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சிங்கஹா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின்போது இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் செய்தியும் வாசிக்கப்பட்டது. அதில், நோயாளர்களை மருத்துவமனைக்குக்...
மன்னார் சன்னார் கிராம பகுதியில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் அதீத ஆயுதப்பயிற்சியால் அக் கிராமத்திலுள்ள பல கர்ப்பிணி தாய்மார்களுக்கு, திடீர் கருக்கலைவு ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த 2 மாதங்களுக்குள் சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு இவ்வாறு கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர் நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான, வலய செயலணி...
கூட்டு எதிர்க் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “மக்கள் போராட்டம்” எனும் தொனிப் பொருளின் கீழ் மாபெரும் நடைபவனி சற்றுமுன் கண்டி கெடம்பே பிரதேசத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது. [caption id="attachment_67786" align="aligncenter" width="660"] ஆர்பாட்டப் பேரணி ஆரம்பமாவதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டியிலுள்ள சர்வமத ஸ்தானங்களுக்கு விஜயம் செய்து சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டனர்.[/caption] முன்னர்...
கோயில்களில் மிருகங்கள் பலியிடப்படுவதை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்துவதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் மிகவிரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கோயில்களில் வேள்விகளின்போது ஆடுகள், கோழிகள் பலியிடப்படுவதற்கு தற்போது நீதிமன்றங்களினால் இடைக்காலத் தடை உத்தரவுகளின் அடிப்படையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவுகளை மீளப் பெறச்...
திருகோணமலை - குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 6 இராணுவ வீரர்களும் அனைத்துக் குற்றங்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு நேற்று அநுராதபுர நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, தெஹிவத்த இராணுவ முகாமில் குறித்த இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டிருந்த போது, 1996ம் ஆண்டு...
மாமியரை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற போது தனது கீழ் உதட்டின் ஒருபகுதியை இழந்த மருமகனை, கிரிந்திவெலப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தனது மனைவி வெளிநாட்டில் தொழில் புரிந்து வரும் நிலையில், தனது மகளைப் பாதுகாப்புக்காக, மாமியாரின் வீட்டில் தங்க வைத்துள்ள நபர், மகள் பிரத்தியோக வகுப்புகளுக்காகச்...
சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபர் ஒருவரின் மகளை, மாணவிகள் கேலி செய்தமையால் மனமுடைந்த மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த பரிதாப சம்பவம் சிலாபத்தில் இடம்பெற்றுள்ளது. சுருக்கிட்டுக் கொண்டு ஆபத்தான நிலையில் சிலாபம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 16 வயதுடைய மாணவி ஒருவர் பத்து தினங்களின்...
உலகிலேயே வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது. வாய்ப் புற்றுநோய் தோன்றுவதற்கு வெற்றிலையும் அது சார்ந்த பொருட்களுமே காரணம் என பல் வைத்திய சேவையின் பிரதிப் பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். இதன்காரணமாக வெற்றிலை பாவிப்பவர்கள் அதன் பாவனையை முற்றாக நிறுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்காலத்தில் வெற்றிலைக்கு உள்ளடக்கப்படும் பாக்கு, சுண்ணாம்பு, புகையிலைகளைத் தடுக்கவேண்டுமெனவும்,...
கட்டுநாயக்கவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் அடுத்த வருட ஜனவரி மாதம் முதல், தற்காலிகமாக மூடப்படவுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜனவரி 5ம் திகதி தொடக்கம் மூன்று மாதங்களுக்கு தினமும் காலை 08.30 முதல் மாலை 04.30 வரை, எட்டு மணித்தியாலங்கள், விமான நிலையம் இவ்வாறு மூடப்படவுள்ளதாக, அமைச்சர் சிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். விமான ஓடுபாதையின்...
ரயில் பயணத்தில் இழைக்கப்படும் குற்றங்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை அதிகரிக்க ரயில் திணைக்களம் தயாராகியுள்ளது. அதற்கமைய, அபராத தொகையை 3 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மிதிபலகையில் பயணம் செய்வது, ரயில் நிறுத்தப்படுவதற்கு முன்னர் அதில் உள்நுழைவது, ரயிலில் மதுபானம் அருந்துதல், தவறான வழியில் மற்ற பயணிகளை தள்ளிக்கொண்டு வருவது போன்ற குற்றங்களுக்காக அபராதத் தொகையே...
எல்லாள மன்னரின் சமாதியை கண்டு பிடிக்குமாறு முன்னாள்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். எல்லாள மன்னரின் சமாதி கண்டு பிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். துட்டகெமுனு மன்னருக்கும் எல்லாளன் மன்னருக்கும் இடையிலான போர் இன முரண்பாடாக சிலர் சித்தரிவித்து வருவதாகவும் அது முற்றிலும்...
இலங்கையில் முச்சக்கர வண்டிகள் தேவைக்கதிகமாக உள்ளதால் அவற்றை இறக்குமதி செய்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்று, பாதுகாப்புடனான நவீன முச்சக்கர வண்டி ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் முச்சக்கரவண்டிகளில் பல குறைபாடுகள் உள்ளதாகவும் அவற்றை நிவர்த்தி செய்வது...
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களைத் தடுப்பதற்குப் பதிலாக அவர்களைச் சுடுவதற்கு கடற்படையினருக்கு அனுமதி கொடுப்பதே ஒரே வழியென மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். ஆனால் அதற்கான அனுமதியை வழங்கும் சட்டமூலத்தை சிறீலங்கா அரசாங்கம் அமுல்படுத்தாது என்ற நிலையிலேயே இந்திய மீனவர்களின் அத்துமீறல் கைமீறிப் போகின்றதெனத் தெரிவித்துள்ளார். நேற்று(வியாழக்கிழமை) வடமாகாண மீனவர் சங்கத் தலைவர்களுடன்...
Loading posts...
All posts loaded
No more posts