நாடுமுழுவதும் 400 இடங்களில் இருமடங்கு வேகத்தில் WiFi

நாடுமுழுவதும் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்தில் 400 இடங்களுக்கு WiFi இணைய வசதியினை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இந்நடவடிக்கையை மேற்கொள்வதற்கு 5 நிறுவனங்களிடம் தகவல் பரிமாறப்பட்டுள்ளதாகவும், புதிய தொழிநுட்பத்தினூடாகப் பெற்றுக்கொடுக்கப்படும் WiFi வசதியானது இருமடங்கு வேகம் கொண்டதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின்...

ஐரோப்பியரை விட 5 மடங்கு அதிகம் மதுவருந்தும் இலங்கையர்கள்!!!

தனிநபர் மதுபான நுகர்வு ஐரோப்பாவை விட ஐந்து மடங்கு அதிகம் என்று தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபையின் தலைவர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார். ஆசியாவில் சிறிலங்காவும் தாய்லாந்தும், அதிகளவு தனிநபர் மதுபான நுகர்வில் முன்னிலையில் இருக்கின்றன. சிறிலங்காவில் 35 வீதமான ஆண்களும், 3 வீதமான பெண்களும் மதுபானப் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். ஆறு மில்லியன்...
Ad Widget

மீண்டும் உண்ணாவிரதப் போரில் குதிக்கத் தயாராகும் அரசியல் கைதிகள்!

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக, அளித்த வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றத்தவறியதால், எதிர்வரும் 08 ஆம் திகதி அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் என வாக்குறுதி அளித்து தமிழ் மக்களிடம் வாக்குகளை பெற்ற போதிலும், இன்று வரை அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை....

‘ஒரு கூர்வாளின் நிழலில்’ புத்தக வருமானத்தில் மஹரகம சிறுவர்களுக்கு மருந்து

விடுதலை புலிகள் அமைப்பின் பெண்கள் பிரிவின் முன்னாள் தலைவியான சிவகாமி ஜெயகுமாரன் (தமிழினி) எழுதிய 'ஒரு கூர்வாளின் நிழலில்' என்ற புத்தக பிரதிகளின் விற்பனை ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட இலாபத்தில் 3 இலட்சம் ரூபாய், மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு வழங்கிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை புத்தக வெளியீட்டு நிறுவனத்துடன் இணைந்து அவரது கணவர், வெள்ளிக்கிழமை வழங்கவுள்ளனர்....

வடக்குக்கான ரயில் போக்குவரத்து பாதிப்பு

வடக்கு ரயில் மார்க்கத்தை இடைமறித்து ரயில் கடவை ஊழியர்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று காலை முதல் முன்னெடுத்துள்ளனர். அநுராதபுரம் - மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கு இடையில் ரயில் பாதையில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக வடக்குக்கான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னாரிலிருந்து கொழும்புக்கு பயணித்த ரயில்கள், மதவாச்சி ரயில் நிலையத்துக்கு...

பௌத்த நாட்டின் இராணுவம், மிருகத்துக்கேனும் விஷம் வைக்காது

இதுவொரு பௌத்த நாடு. இங்குள்ள மக்கள், தர்ம சிந்தனைகளைக் கொண்டவர்கள். இங்குள்ள மிருகத்துக்கேனும் விஷம் வைக்காத இலங்கை இராணுவம், முன்னாள் போராளிகளுக்கு ஒருபோதும் ஊசி மருந்தேற்றவில்லை. இக்குற்றச்சாட்டை, இராணுவம் முற்றாக மறுக்கின்றது' என, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார். இறுதி யுத்தத்தின்போது, இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளைத் தடுத்து...

முன்னாள் போராளிகளுக்கு ஊசிபோடப்பட்ட விவகாரம்!: பரிசோதனை நடத்த தயார் என்கிறது அரசாங்கம்

முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட காலத்தில் உடலியல் ரீதியில் ஏதாவது கெடுதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது தொடர்பில் முறைபாடுகள் முன்வைக்கப்பட்டால் அவர்களுக்கு உடற்பரிசோதனை நடத்துவதற்கு தயாராக இருக்கின்றோம் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளார் மாநட்டில் கலந்து கொண்டிருந்த அமைச்சரிடம் ஊடகவியலாளர்...

பிள்ளைகளை பௌத்த மதத்துறவிகளாக்கிய தமிழ் தந்தை!

தமது நான்கு பிள்ளைகளையும் பௌத்த மதத் துறவிகளாக, தமிழ் தந்தையொருவர் மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வசித்து வந்த வீட்டை அடகு வைத்து மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த குறித்த நபர், மனைவி பற்றிய எவ்வித தகவல்களும் இல்லாத காரணத்தினால் இவ்வாறு பிள்ளைகளை பௌத்த மதத் துறவிகளாக மாற்றியுள்ளார். 56 வயதான சித்திரவேல் சுந்தரலிங்கம் என்ற நபரே இவ்வாறு...

வடக்கு மக்களும் எமது நாட்டு மக்களே

வடக்கும் எமது நாட்டின் ஒரு பகுதி தான். அங்கு வாழும் மக்களும் எமது நாட்டு மக்கள் தான். அவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு நடவடிக்கை மேற்கொள்வது தவறா? என சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக...

மீண்டும் வருவோம்! விட்டுச் செல்ல இல்லை எடுத்துச் செல்ல மீண்டும் வருவோம்: மஹிந்த

நாங்கள் மீண்டும் வருவோம். விட்டுச் செல்வதற்காக அல்ல எடுத்து செல்வதற்காக மீண்டும் வருவோம். அதற்காகவே மக்களை ஆயத்தப்படுத்துகின்றோம். பாதயாத்திரை என்றால் என்ன, எதிர்க் கட்சி என்றால் எப்படி இருக்க வேண்டும். போராட்டத்தை எவ்வாறு முன்னெடுத்து முடிக்க வேண்டும் என இவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் எல்லோரும் தயாராக உள்ளோம். நீங்கள் தயார் என்றால்...

தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் படுகொலை: 10 ஆண்டுகளுக்கு பின்னும் கவலை

மூதூரில் வைத்து, தொண்டர் நிறுவன ஊழியர்கள் 17 பேரைப் படுகொலை செய்தவர்களை நீதிக்கு முன்னால் இலங்கை அரசாங்கம் நிறுத்தவில்லை என, மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது. 'பசிக்கு எதிரான செயற்பாடு' அக்ஷன் பார்ம் எனும் அரசசார்பற்ற தொண்டு நிறுவனத்தின் இலங்கை ஊழியர்கள் 17 பேர், 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதியன்று, அவர்களது வளவில்...

சமுர்த்தி முகாமையாளர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

நாட்டின் சிறந்த முன்னணி நிதி நிறுவனமாகத் திகழ்ந்த சமூர்த்தி நிதி நிறுவனம் குறித்து எவ்வித மதிப்பீடுகளையும் செய்யாத கடந்த கால எதேச்சாதிகார ஆட்சியும் நிர்வாகமும் அந்த நிகழ்ச்சித்திட்டங்களையும் ஊழியர்களையும் பாதாளத்தில் தள்ளும் வகையில் பில்லியன் கணக்கான நிதியினை கொள்ளையடிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அகில இலங்கை சமூர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். நாடெங்கிலும் உள்ள சமூர்த்தி முகாமையாளர்கள்...

இராணுவ வீரரை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பௌத்த பிக்கு!!

இராணுவ சிப்பாய் ஒருவரை மூன்று நாட்களாக கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பௌத்த பிக்கு ஒருவர், மாதம்பை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டவர் மாதம்பை – சேத்சிரிகம பகுதியைச் சேர்ந்த விஹாரையில் பணிபுரியும் 25 வயதான பிக்கு எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை, பாதிக்கப்பட்டவர் வவுனியா – கனகராயன்குளம் இராணுவ முகாமில் பணியாற்றும் 25 வயதான...

 பசிலுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்ற நீதவான் தம்மிக்க ஹேமபால, இன்று உத்தரவிட்டுள்ளார்.

இன்று முதல் குளிர்பான போத்தல்களுக்கு குறியீடு

குளிர்பானங்களில் வண்ணக்குறியீடுகளை இட்டு, குளிர்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவை குறிப்பிடுவதற்காக முறைமை இன்றிலிருந்து அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் கையொப்பம் இடப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டு 36ஆம் இலக்க சட்டத்தின் 32ஆவது பிரிவின் பிரகாரம், ஒரு குளிர்பான போத்தலில் 11 கிராமுக்கும் அதிகமான சீனி அடங்கியிருக்குமாயின், அந்தப் போத்தல் சிகப்பு...

முச்சக்கர வண்டி கட்டணங்களும் இன்று முதல் அதிகரிப்பு

இன்று முதல் முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் கிலோ மீட்டருக்கு 5 ரூபா வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை சுய தொழில் ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.இரண்டாவது கிலோ மீட்டரில் இருந்து இவ்வாறு கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.எனினும் முதலாவது கிலோ மீட்டருக்கு அறவிடப்படும் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என அவர் மேலும்...

தடுப்பில் இரசாயன உணவும் ஊசியும் : புலி­களின் முன்னாள் போராளி சாட்­சியம்

தடுப்பில் இருக்கும் போது எமக்கு இர­சா­யன உணவு தந்­தார்கள். ஊசி போட்­டார்கள். ஊசி போட்டவுடன் ஒரு போராளி உயி­ரி­ழந்தார். தடுப்பில் வைத்து எமக்கு ஏதோ செய்­துள்­ளார்கள். இவ்­வா­றாக விடு­தலைப் புலி­களின் முன்னாள் போராளி ஒருவர் தெரி­வித்துள்ளார். நல்­லி­ணக்க பொறி­முறை தொடர்பில் மக்கள் கருத்­த­றியும் அமர்வு நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை ஒட்­டு­சுட்­டானில் நடை­பெற்­றது. அந்த அமர்வில் கலந்து...

இன்றுமுதல் பேருந்துக்கட்டணம் அதிகரிப்பு!

போக்குவரத்து ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி இன்றுமுதல் பேருந்துக்கட்டணம் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வரி அதிகரிப்புக்களுக்கமைய பேருந்துக் கட்டணத்தை உயர்த்துமாறு தனியார் போக்குவரத்துக் கழகம், போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முறையிட்டிருந்தது. இதற்கமைய, இன்றுமுதல் ஆரம்பக் கட்டணமாக 9.00 ரூபா அறவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ரூபா கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதுடன் ஏனைய...

அரச ஊழியர்களுக்கு சலுகை அடிப்படையில் வாகனம் வழங்கும் யோசனையில் மாற்றம்

அரச உத்தியோகத்தர்களுக்கு சலுகை அடிப்படையில் வாகனங்களை வழங்கும் யோசனை திட்டத்தை திருத்தங்களுடன் மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சலுகை அடிப்படையில் வழங்கும் வாகனங்களின் அனுமதிப் பத்திரத்தின் பெறுமதி 30,000 அமெரிக்க டொலர்கள் எனவும், முழு வரியில் இருந்து 50 வீதத்தை சலுகை அடிப்படையில் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அவதானம் ; எலிக்காய்ச்சலால் 2500 பேர் பாதிப்பு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியிலான எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2500 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த தொற்றினால் இதுவரையில் 20 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தொற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பபா பலிஹவடன தெரிவித்தார். எலிக்காய்ச்சல் காரணமாக நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை சேற்று நிலங்கள்...
Loading posts...

All posts loaded

No more posts