- Sunday
- January 19th, 2025
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் இன்று நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜரானார். இந்தநிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதோடு, இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை...
காதலித்து வந்த யுவதியை கழற்றி விட, அவருக்கு குறுஞ்செய்தி ஊடாக மரண அச்சுறுத்தல் விடுத்த காதலனையும் அதற்கு உடந்தையாக இருந்த அழகுக்கலை நிலையம் ஒன்றில் வேலை பார்க்கும் யுவதி ஒருவரையும் பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர். காதலி செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக சூட்சுமமான விசாரணை ஒன்றினை முன்னெடுத்த பிலியந்தலை பொலிஸார் இவர்களை நேற்று கைது செய்துள்ளனர்....
கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பரீட்சைக்கான அனுமதி அட்டை எதிர்வரும் திங்கட்கிழமை தபாலில் சேர்க்கப்படுமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இந்தப் பரீட்சை நாடு முழுவதிலும் 856 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது. 01 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இந்தப் போட்டிப் பரீட்சையில் பெறப்படும்...
யுத்தத்தை வெற்றி கொள்ள தலைமைத்துவத்தை அளித்த முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வர வேண்டும் என சிலர் கூறுவதாக, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தான் அதிகாரத்துக்கு வரும் முன்னர், ஐக்கிய தேசியக் கட்சியால் யுத்தத்தின் ஒரு பகுதி நிறைவு செய்யப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, தானது ஆட்சிக் காலத்தில் முக்கால்வாசி யுத்தத்தை...
மிருசுவிலில் எட்டுப் பொதுமக்களைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில், மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியி்ன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர, நாடாளுமன்றத்தில் நேற்று கோரிக்கை விடுத்தார். மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியைச் சேர்ந்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி...
நாட்டின நீர் மின்சார உற்பத்தி, மீன்பிடித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதற்கு தொழிநுட்ப உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கோரிக்கைக்கு நோர்வே பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வே பிரதமர் எர்னா சோல்பேர்க் நேற்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் ஜனாதிபதியைச் சந்தித்தபோதே இந்த இணக்கத்தை தெரிவித்தார்....
கொழும்பு சர்வதேச நிதி நகரத்திற்கான (துறைமுக நகரம்) முத்தரப்பு உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது. நேற்று (12) கொழும்பு சினமன் கிரேண்ட ஹோட்டலில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. மூன்று தரப்பினர் இதில் ஒப்பமிட்டுள்ளதுடன், தற்போதைய அரசினால் இது நிதி நகரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. மா நகர சபை மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை...
மூன்று தொன் நிறையுடைய மீன் தொகையொன்று, கடந்த 8 வருடங்களாக, மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் குளிரூட்டியிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை (12) கண்டுபிடிக்கப்பட்டதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு, கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகக் கூறிய அமைச்சர், நட்டத்தில் இயங்கிவரும் மேற்படி கூட்டுத்தாபனத்தின் கடன் மற்றும் சம்பள நிலுவைகளைச்...
அரச கணக்குகளிலிருந்து மறைத்து வெளிநாடுகளிலிருந்து கடன்களைப் பெற்றுக்கொண்டமை தொடர்பான விசாரணைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையில் 3பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின்முன் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ விசாரணைக்கு முன்னிலையாகவேண்டுமென சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு...
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் உண்மையைக் கண்டறியாது நல்லிணக்கத்தை ஏற்படுத்தமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலமானது நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் எடுத்திருக்கும் முதல் அடியென்றும் அவர் பாராட்டினார். நேற்றைய தினம்(வியாழக்கிழமை) காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில்...
இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் தலைமன்னாரிலிருந்து பாலமொன்று அமைப்பது தொடர்பாக இந்திய அரசாங்கமோ இலங்கை அரசாங்கமோ எந்தவிதமான கலந்துரையாடலையும் நடாத்தவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்கும் இத்தகைய கூற்றுக்களை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக் காட்டினார். தலவதுகொடை கனேலந்தை விகாரையில் நேற்று முந்தினம் (10) பிற்பகல் இடம்பெற்ற ஒரு...
வவுனியா சிறுமி கங்காதரன் ஹரிஸ்ணவியின் பாலியல் துஷ்பிரயோக கொலை வழக்கின் சந்தேக நபராகிய பாலசிங்கம் ஜனார்த்தனனுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் புதனன்று அரச தரப்பு சட்டவாதியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கியுள்ளது. ஆறு மாதங்களாக இந்த சந்தேக நபர் எதுவித குற்றச்சாட்டுக்களுமின்றி விளக்கமறியலில் இருந்து வருகிறார் எனத் தெரிவித்து அவரைப் பிணையில்...
இலங்கையில் ஆண்கள் மத்தியில் வாய்ப் புற்றுநோய் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்பாக புற்று நோய் பெண்கள் மத்தியில் கூடுதலாக காணப்படுவது போல் வாய்ப்புற்று நோய் ஆண்கள் மத்தியில் கூடுதலாக காணப்படுவதாக அறிக்கை கூறுகிறது. ஆண்டு தோறும் 2500 வாய்ப்புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் இந் நோயாளர்களில் 78 சத வீதமானோர் ஆண்கள்...
சீ.எஸ்.என் தனியார் தொலைக்காட்சியில் சட்டவிரோதமாக முதலிட்ட 157.5 மில்லியன் ரூபாய் நிதியை, மத்திய வங்கிக்கு மாற்ற கடுவளை நீதிமன்றம் நேற்று அனுமதியளித்துள்ளதாக, இணை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பஷில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கடுவளை மற்றும் மாத்தறை பகுதிகளிலுள்ள...
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் தாம் மேற்கொண்ட போராட்டத்தை கைவிட்டுள்ளதாக, ஊழியர்கள் சங்க ஒன்றியத்தின் இணைத் தலைவர் டயஸ் விஜயகுமார தெரிவித்துள்ளார். உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஏழு கோரிக்கைகளை முன்னிருத்தி பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கடந்த 27ம் திகதி...
கொலைச் சம்பவமொன்றில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு, நுவரெலிய மேல் நீதிமன்றம், இன்று வௌ்ளிக்கிழமை (05) மரண தண்டனை விதித்தது. 2000ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் குற்றவாளிகளுக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, வென்ஷர் தோட்டத்தைச் சேர்ந்த நபரொருவரைக் கொலை செய்தார்கள் உள்ளிட்ட...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல் பிரிவின் தலைவி தமிழினியினால் எழுதப்பட்ட ´ஒரு கூர்வாளின் நிழல்´ என்ற நூல் விற்பனை மூலம் பெறப்பட்ட 3,00,000 ரூபாய் வருமானம் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வு இன்று வௌ்ளிக்கிழமை (05) காலை இடம்பெற்றது. குறித்த பணத்தொகையை வைத்தியசாலைக்கு வழங்கும் நிகழ்வில் தமிழினியின் கணவர் எஸ்...
தேசிய ரீதியில் அரச பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை உடன் முடிவுக்குக் கொண்டு வருமாறும், சகல ஊழியர்களும் இன்று கடமைகளுக்கு திரும்புமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சகல கல்வி சாரா ஊழியர்களையும் விசேட அறிவித்தல் மூலம் கேட்டுள்ளது. இன்று கடமைக்கு சமூகம் தராத தகுதிகாண் மற்றும் பயிற்சி ஊழியர்கள் சகலரும் தங்களது தொழில்களிலிருந்து...
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் இடம்பெற்ற 12வது இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் கபீர் ஹசீமிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளித்த வேளை, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு...
புகையிலைக்கான (tobacco) வரியை 90 சதவீதமாக உயர்த்துவது குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும், அதற்கான பெறுமதி சேர் வரியை 15 வீதமாக அவ்வாறே வைத்திருக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 2016இன் போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய கொள்ளை...
Loading posts...
All posts loaded
No more posts