தெற்கின் எடுபிடிகளாக எம்மை மாற்ற முயற்சிக்க வேண்டாம் :முதலமைச்சர் சி.வி

வட மாகாணத்தின் தேவைகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் உள்ளிட்ட விடயங்களில் தன்னிச்சையாக செயற்படாமல், வடக்கின் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து அவற்றை செயற்படுத்துமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அதனை விடுத்து தெற்கின் எடுபிடிகளாக தம்மை மாற்ற நினைப்பதை ஒருபோதும் வரவேற்க மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற...

மிரட்டல்களுக்கு அடிபணியேன்! மைத்திரிக்கு மஹிந்த பதிலடி

"ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மிரட்டல்களுக்கு ஒருபோதும் நான் ஒருபோதும் அடிபணியமாட்டேன். புதிய கட்சியை ஆரம்பித்தே தீருவேன்." இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சூளுரைத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவுக்கு நேர்ந்த கதியே தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நடக்கப் போகின்றது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமரர் ரணிசிங்க பிரேமதாஸ கட்சிக்குள் இருந்த முக்கிய...
Ad Widget

போராதனை பல்கலை மோதல் குறித்து விசாரணை

பேராதனை பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் குறித்த மாணவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொலிஸார் கூறியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு பேராதனை பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைபீட மாணவக் குழுக்கள் இருவரிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து காயமடைந்த ஐந்து மாணவர்கள் வைத்தியசாலையில்...

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தபட்ட இலங்கையர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஆறு இலங்கையர்களும் இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட நிலையில், படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நடுக் கடலில் தத்தளித்த அறுவர், ஆஸி அதிகாரிகளால் மீட்கப்பட்டனர். இவர்கள் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கடந்த மாதம் 21ம் திகதி இவ்வாறு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. பின்னர்...

புற்றுநோயாளர்களுக்கு மருந்துகளை முற்றிலும் இலவசமாக வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை

புற்றுநோயாளர்களுக்கு இலவசமாக மருந்து வழங்குவதற்காக வைத்தியசாலைகளால் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து மருந்து விலைச் சிட்டைகளுக்கும் பணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். புற்றுநோய்க்கான மருந்துகளின் விலை மிகவும் அதிகமாகும். இந்த மருந்துப் பொருட்களை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து மருந்துகளையும்...

நாமலுக்கு பிணை

பங்கு கொள்வனவு மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட மூவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நாமல் அவர்களை இன்று கொழும்பு  நீதவான் முன் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நாமல் ராஜபக்ஷ மற்றும் ஏனைய இருவருக்கும் ரூபாய் 100 லட்சம் பெறுமதியான 4 சரீர பிணைகள் மற்றும்...

திருப்பதி ஏழுமலையானை தரிசித்த ஜனாதிபதி

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தனது மனைவியுடன் நேற்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தனது மனைவி ஜெயந்தி புஷ்பா குமாரியுடன் நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதிக்கு வந்தார். இரவுப் பொழுதை திருப்பதியில் கழித்த அவர்கள் நேற்று அதிகாலை ஏழுமலையான் கோவிலுக்கு...

இலங்கையில் புர்கா, நிஜாப் உடைகளுக்கு தடை விதிக்க பாதுகாப்பு சட்டசபையில் ஆலோசனை!

முஸ்லிம் பெண்கள் உடலை மறைத்து அணியும் உடைகளான புர்கா, நிஜாப் ஆடைகளை இலங்கையில் தடைசெய்யவேண்டுமென சிறீலங்காவின் தேசிய சபைக் கூட்டத்தில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரியொருவரே இந்த யோசனையை முன்வைத்துள்ளார். சிறீலங்கா புலனாய்வு அதிகாரி ஒருவரின் ஆலோசனைக்கமையவே அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார். அண்மைக்காலமாக, முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா, நிஜாப்...

புகையிரதம் மீது கல் வீசுவோர் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்படும்!

புகையிரதம் மீது கல்வீச்சு நடாத்துவோரை சுடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்வோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த 0.38 மில்லிமீற்றா ரக 25 கைத்துப்பாக்கிகள் புகையிரத திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அனுமதியுடன் வெலிசறை கடற்படை முகாமிலிருந்து இந்த துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக புகையிரதப் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பாளர் அனுர பிரேமரட்ன தெரிவித்துள்ளார்....

வடக்கின் தேவை குறித்து கொழும்பில் முக்கிய பேச்சு! முதலமைச்சர் விக்னேஸ்வரனும் பங்கேற்பார்!!

வடக்கு மாகாணத்தின் தேவைகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பின்பேரில் அவரது ஆலோசகர்களில் ஒருவரான பாஸ்கரலிங்கம் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. நிதி அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும், இதில் வடக்கின் தேவைகள் சம்பந்தமாக...

உரிமை கோரப்படாததனால் பெருந்தொகையான பணம் அரசுடைமை

உரிமை கோரப்படாததனால் பெருந்தொகையான பணம் சமீபத்தில் அரசுடைமையாக்கப்பட்டதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். சட்டமுள்ள ஒரு நாட்டில் எவருக்கும் உரிமையற்ற சொத்துக்கள் இருக்க முடியாது என்றும் அவர் கூறினார். உரிமை கோராமல் இந்தப் பணம் எவ்வாறு இருந்தது என்பது குறித்து ஊடகங்கள் கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று...

தந்தை, மகன், மகள் தற்கொலை

கொட்டாஞ்சேனை, வாசல மாவத்தையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் 47 வயது தந்தை, 13 வயது மகள் மற்றும் 09 வயதுடைய மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். இவர்கள் விஷமருந்தியிருப்பதாக அயலவர்களுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். எனினும்...

‘வடக்கு அரசியல்வாதிகள் பொய் சொல்லுகின்றனர்’

முன்னாள் புலிப் போராளிகளுக்கு, புனர்வாழ்வு நிலையங்களில் விஷ ஊசி ஏற்றப்பட்டதாகவும், இதனால் அவர்களுக்குப் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும், வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். தெல்கொடையிலுள்ள ஸ்ரீ சம்போதி விகாரையில் வைத்து, ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். வடக்கிலுள்ள மக்கள்...

இலங்கையர்களில் 80 சதவீதமானவர்களுக்கு நேரமில்லையாம்!!

இலங்கையர்களில் 80 சதவீதமானோர் 'நேரமில்லை" என்ற போலியான காரணத்தை சுட்டிக்காட்டி தங்களது இலக்குகளை தட்டிக்கழிப்பதாக புள்ளிவிபரமொன்று குறிப்பிடுகின்றது. மேலும் இதில் 45 வீதமானோர் அச்சம் காரணமாகவே தங்களது இலக்குகளிலிருந்து பின்வாங்குவதாகவும் புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை சந்தை ஆராய்ச்சி பணியகத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டிலேயே இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்க் ஹில்டன் ஹொட்டலில் நேற்று நற்குண முன்னேற்ற அமைப்பு...

முன்னாள் போராளிகள் விவகாரம்: சர்வதேச தலையீடு தேவையில்லை!

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி போடப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பரிசோதிக்க சர்வதேச ரீதியான தலையீடு தேவையற்றது என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். வௌிநாட்டு வைத்தியர்களை அழைத்து வர முன்னர் வடக்கிலுள்ள வைத்தியர்களுக்கே அது பற்றி பரிசோதிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

கதிர்காம ஆலய காணியை திருப்பதிக்கு வழங்க திட்டமா?

கதிர்காம ஆலயத்திற்கு சொந்தமான காணியை இந்தியாவின் திருப்பதி தேவாலயத்திற்கு வழங்கவுள்ளதாக, அப் பகுதி மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். கதிர்காமம் - நாகதீபம் பகுதிக்கு அருகிலுள்ள 30 ஏக்கர் நிலப்பரப்பே இவ்வாறு ருகுணு கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக நிலமேவால் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி கதிர்காம நகரிலுள்ள ஆலய வளாகத்திற்கு நேற்று பிற்பகல் வந்த மக்கள் போராட்டத்தினை...

ஊசி மூலம் புற்றுநோயை உருவாக்கமுடியாது!

ஊசி மூலம் புற்றுநோயை உருவாக்கமுடியாது என புற்றுநோய் நிபுணத்துவ வைத்தியர் மகேந்ர பெரேரா தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு செவ்வி வழங்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், புனவர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டு புற்றுநோய் உருவாக்கப்பட்டதாக பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டபோதிலும், ஊசிமூலம் புற்றுநோயைப் பரப்பமுடியும் என்று இதுவரை உலகத்தில்...

மென்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவு பரிசோதிக்கப்படும்

மென்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவு வர்ணங்களில் குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யப்பட வேண்டும் என்பதற்கான சட்டம் தீவிரமாக அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த விதி முறைகளை கடைபிடிக்கத் தவறும் விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். இதற்கான கிரபிக் லயிட் ஸ்டம் லேபிள் முறையின் கீழ் மென்பான போத்தல்களில்...

ரயில் மீது கல் வீசியவர்கள் விளக்கமறியலில்

கொழும்பு - கோட்டையில் இருந்து கல்கிசை வரை பயணித்த ரயிலுக்கு கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து கல் மற்றும் போத்தல்களால் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொள்ளுப்பிட்டிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இவர்கள் கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்தத் தாக்குதலால்...

நான் அப்படிச் செய்யவில்லை! கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்வைத்த குற்றச்சாட்டுக்களை கோட்டாபய ராஜபக்ஷ மறுத்துள்ளார். யுத்தத்திற்காக விமானங்களைக் கொள்வனவு செய்த வேளை, அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய நிதி மோசடி செய்தார் என சந்திரிக்கா நேற்றையதினம் குற்றம் சுமத்தியிருந்தார். இதனையடுத்து, கோட்டாபய இது குறித்து வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக கூறியுள்ளார்.
Loading posts...

All posts loaded

No more posts