- Saturday
- January 18th, 2025
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் அனுதாப பிரேரணையொன்றில் உரை நிகழ்த்திய முதலாவது ஜனாதிபதி என்ற பெயரை மைத்திரிபால சிறிசேன தன்வசப்படுத்தினார். நாடாளுமன்றம் நேற்று முன்தினம் முற்பகல் 10.30. மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. ஆரம்பகட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், காலஞ்சென்ற அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தனவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணையை சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன்...
நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ - மூன் எதிர்வரும் 31ஆம் திகதி புதன்கிழமை இலங்கை வருகின்றார். இவர் இங்கு தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். அத்துடன், ஐ.நாவின் பூகோள...
மன்னார், திருக்கேதீஸ்வரம் கோவிலுக்கு மிக அண்மையிலுள்ள தமிழருக்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமான முறையில் பௌத்த விகாரையொன்று நிர்மாணிக்கப்படுகின்றதா எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிப்பதற்கு இருவார கால அவகாசத்தை புத்தசாசன அமைச்சு கோரியுள்ளது. நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்றின்போது, கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பியான சார்ள்ஸ் நிர்மலநாதனே நீதி அமைச்சரிடம்...
நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு தொகையினரை விடுவிப்பது குறித்து எதிர்வரும் புதன் கிழமைக்கு முன்னதாக அரசாங்கம் அறிவிக்கவுள்ளது. அதன் பிரகாரம் சிறு சிறு குற்றசாட்டுக்களை கொண்ட சந்தேக நபர்கள்,இதுவரையில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாது சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் ஆகியோருக்கு விடுதலை அளிப்படவுள்ளது. தமிழ் அரசியல்...
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். அவர் அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, பேராதனை பல்கலைக்கழகக் கல்வி பயிலும் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் மாணவர்கள் பலர் தமது பெற்றோருடன் என்னை...
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வட மாகாணத்தில் உள்ள புத்தர் சிலைகளை அகற்றுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரி வருகின்றமையால் குறித்த முறைப்பாடு தெரிவிக்கப்படவுள்ளது. முறைப்பாட்டினை வெளிநாடுகளில் உள்ள இலங்கை வாழ் அமைப்புக்கள் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நல்லிணக்க பொறிமுறைகளை...
டீசல் லீற்றர் ஒன்றுக்கான உற்பத்திவரி 10 ரூபாயால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வரி அதிகரிப்பு ஓகஸ்ட் 20ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி புதிய வரியாக டீசல் லீற்றர் ஒன்றுக்கு 13 ரூபாய் அறவிடப்படும். இந்த புதிய வரி அதிகரிப்பு காரணமாக சந்தையில் உள்ள டீசல் விலை அதிகரிக்கப்படாது என தெரிவிக்கப்படுகின்றது. உலக சந்தையில்...
தனியார் துறையில் பணியாற்றும் தாய்மார்களுக்கு பிரசவ விடுமுறையை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியுள்ளார். தற்போது அரச சேவையில் பணியாற்றும் தாய்மார்களுக்கு 06 மாதங்கள் பிரசவ விடுமுறை வழங்கப்படுவதுடன், அதன் பின்னர் சம்பளம் அற்ற விடுமுறை பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது. அதன்படி இந்த நடைமுறையை தனியார் துறைகளில்...
வடக்கில் அமைக்கப்படவிருந்த பொளாதார மத்திய நிலையம் தொடர்பில் நிலவிவந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள சூழலில் அதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவைக் குழுவின் பிரேரணைகளுக்கு அமைய விசேட பொருளாதார நிலையம் ஒன்றுக்கு பதிலாக விசேட பொருளாதார நிலையங்கள் இரண்டை அமைக்க முடிவுசெய்யப்பட்டது. இதில் ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாங்குளத்திலும், மற்றையது...
சம்பளத்தை அதிகரித்து, பொருட்களின் விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜாதிக சேவக சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று (25) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் முதலீடுகள், உற்பத்திகள், வர்த்தகங்கள் போன்றவற்றை மேலும் மேம்படுத்தி அவற்றின் நன்மைகள், மக்களுக்கு வழங்கப்படும்....
சமுர்த்தி திட்டம் மிகவும் செயற்திறனான பயனுள்ள அமைப்பாக மாற்றியமைக்கப்படுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சமுர்த்தி முகாமையாளர்களின் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த விடயத்தை குறிப்பிட்டார். கடந்த ஆட்சிக் காலத்தில் ஒழுங்கில்லாத நிர்வாக கட்டமைப்பின் கீழ் ஊழியர்களின் எதிர்பார்ப்பு சீர்குலைந்ததால் அது திருப்தியளிக்காத...
பேராதனை பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கை பீடத்தின் 10 மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி குறித்த 10 பேருக்கும் இரு வாரங்களுக்கு இவ்வாறு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பேராதனை பல்கலைக்கழக நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 22ம் திகதி...
பம்பலபிடி பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் முஹமட் ஷாகிப் சுலைமான் உயிரிழந்தமைக்கான காரணம் வௌியாகியுள்ளது. நேற்று அவரது சடலம் குறித்த பிரேதப் பரிசோதனைகள் கோகலை வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்திய அதிகாரி ரமேஷ் அலகியவத்தவினால் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி மரணத்துக்குக் காரணம் தட்டையான ஆயுதத்தினால் தலையின் பின் பகுதியில் தாக்கப்பட்டமையால் உடலின் உள் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளமையே என தெரியவந்துள்ளது....
அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றால் வௌியிடப்பட்ட செய்தி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தனிப்பட்ட கவனத்தை செலுத்தியுள்ளார். மைத்திரிபால சிறிசேன விவசாய அமைச்சராக இருந்த காலத்தில் அவரது செயற் குழுவின் உறுப்பினர் ஒருவரால், அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுக்கு இலஞ்சம் வழங்கப்பட்டதாக, அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டிருந்தது. இந்தநிலையில் அந்த விடயத்தில் எந்தவொரு தொடர்போ பங்களிப்போ...
மருதானையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தை பத்தரமுல்லைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு நாளை விடுமுறை விடப்படவுள்ளதாகவும் இதன்படி, நாளையதினம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் எந்தவொரு செயற்பாடுகளும் இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கண்டி, மாத்தறை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளிலுள்ள திணைக்களத்தின் கிளைகளுக்கும்...
பேராதனை பல்கலைகழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட சிரேஷ்ட மாணவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து அந்த பீடத்தின் முதலாம் ஆண்டு தமிழ் முஸ்லீம் மாணவர்கள் பல்கலைகழக வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்களால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்திற்கு வருகைதராத காரணத்தால் அந்த பீடத்தின் முதலாம் வருட தமிழ் மற்றும் முஸ்லீம் மாணவர்கள் மீது...
பம்பலபிட்டி பகுதியில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் வர்த்தகர் மாவனெல்லை பிரதேசத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவனெல்லை பகுதியில் அடையாளம் காணமுடியாத இளைஞர் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. மாவனெல்லை பகுதியில் இருந்து நேற்று இரவு குறிப்பிட்ட சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் சடலமாக மீட்கப்பட்டவர்...
எந்த நேரத்திலும் நாடு பூராகவும் உள்ள அரச வைத்தியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தயாராக இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் வைத்தியர் நளிந்த ஹேரத் தெரிவித்துள்ளார். சுகாதார திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளரை நியமித்தல், தேசிய வைத்தியசாலைக்கு பிரதி பணிப்பாளரை நியமித்தல் உள்ளிட்ட சுகாதார அமைச்சின் பல திட்டங்களுக்கு எதிராகவே இந்த அறிவிப்பை அரச வைத்தியர் சங்கம்...
தனது 9 வது வயதில் இணையத்தளம் ஒன்றை வடிவமைத்தது இந்நாட்டின் இளம் இணையத்தள வடிவமைப்பாளராக சாதனை புரிந்துள்ள கண்டியில் அமைந்துள்ள கொழும்பு சர்வதேச கல்லூரியில் கல்வி பயிலும் வைஷின்யா பிரேமானந் நேற்று (23) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இவர் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான BCS (Bachelor of Computer...
வாகனங்களின் உரிமையை சரியான முறையில் மாற்றிக் கொள்ளாமல் பயன்படுத்தும் தற்போதைய உரிமையாளர்கள், தமது வாகனங்களை தமது பெயர்களுக்கு மாற்றிக் கொள்வதற்கான சலுகைக் காலம் வழங்கப்படும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி கூறினார். வாகனங்களின் ஆரம்ப உரிமையாளரிடமிருந்து சரியான முறையில் உரிமை மாற்றப்படாமையின் காரணமாக வாகன விபத்துக்களின் போது பல்வேறு குழப்படிகளுக்கு முகங்கொடுக்க...
Loading posts...
All posts loaded
No more posts