- Saturday
- January 18th, 2025
ஜனாதிபதியின் இணையத்தை முடக்கிய இளைஞனுக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாக BOUNTY LAB INTERNATIONAL PVT LTD அறிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் தலைமையகத்தை கொண்டுள்ள குறித்த நிறுவனம் தற்பொழுது இலங்கையிலும் செயற்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் ஜனாதிபதியின் இணையத்ததை ஹேக் செய்த இளைஞனுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இவ்வாறான இளைஞர்கள் உலக அளவில் குறைவாகவே இருக்கின்றனர், இவர்களை நம் நாட்டிற்கு...
தேசிய தமிழ் மொழி தின விழா கண்டி மாநகரில் கொண்டாடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் காணப்படும் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கிடையில் தமிழ் மொழி சம்பந்தமான போட்டிகள் வலய, மாகாண மற்றும் தேசிய ரீதியில் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் தேசிய ரீதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் தேசிய தமிழ்...
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட எட்டுப் பேரை, செப்டம்பர் 30ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எவன்காட் விவகாரம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தையில் விற்பனை செய்யப்படும் தண்ணீர் போத்தல்கள் மற்றும் ஹெல்மட் எனப்படும் பாதுகாப்பு தலைக் கவசங்களுக்காக, இன்றுமுதல் புதிய சட்ட நடைமுறை ஒன்று அமுல்படுத்தப்படுகின்றது. இந்த புதிய சட்ட அமுலாக்கத்தின்படி இவை அனைத்திற்கும், SLS தரச் சான்றிதழ் அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தயாரிப்புகள் அனைத்திற்கும் SLS தரச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், அதனை இதுவரை அமுல்படுத்தாத வர்த்தகர்கள் தமது...
எரிபொருள் விலையை உயர்த்துவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை இந்தியன் ஒயில் நிறுவனம் இவ்வாறு எரிபொருள் விலை அதிகரிப்பிற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளது. டீசல் உற்பத்திக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு, விலை அதிகரிப்பிற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. டீசல் உற்பத்தி வரி 3 ரூபாவிலிருந்து 13 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பானது பெற்றோல் உற்பத்தியிலும் தாக்கத்தை...
கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் வசித்துவந்த செல்வந்த வர்த்தகரான மொஹமட் சுலைமானின் கொலை தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஏழு பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொலையை மேற்கொண்ட சந்தேகநபரையும் அதன்பின்னர் வர்த்தகரின் சடலத்தை வாடகை வாகனம் மூலம் கொழும்பில் இருந்து மாவனெல்ல, ஹெம்மாத்தகம பகுதிக்கு கொண்டு செல்ல இணங்கிய குழுவினரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆடைத்தொழில்துறையை சேர்ந்த...
தமிழ்க் கைதி ஒருவர் மீது கவனக் குறைவாக துப்பாக்கிச் சூடு நடத்தி, அவரை கொன்றார் எனக், குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதித்தது. அத்துடன், 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. விமல் விக்கிரமகே எனும் முன்னாள் ராணுவ லெப்டினனுக்கு எதிராக நீதிமன்றம் இந்த...
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஏழ்வருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் நேற்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கில் கோட்டாபய ராஜபக்ஷவுடன், நிஸங்க யாப்பா சேனாதிபதி, முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரால் ஜயனாத் கொழம்பகே,...
ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுறுவி தரவுகளை மாற்றிய குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவன் இதற்கு முன்னர் இரண்டு அரச இணையத்தங்கள் உட்பட 37 இணையத்தளங்களை ஊடுறுவியுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். நேற்று (30) மேல் நீதிமன்ற பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டியவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தொடர்ச்சியாக முன்னெடுத்த...
ரஜரட்ட உள்ளிட்ட உலர் வலயப் பகுதிகளில் பரவியுள்ள சிறுநீரக பிரச்சினைக்கு நேரடியாகத் தொடர்புபட்டுள்ள க்லய்போசேட் கிருமி நாசினி திரவம் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தடை விதிக்கப்பட்ட பின்னரும் தூள்களாக பக்கற்றில் அடைக்கப்பட்டு அவை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் ஹரியனா மாநிலத்தில் இருந்து இலங்கையின் வட பகுதிக்கு கடல் மார்க்கமாக இவை கொண்டு வரப்பட்டு சந்தைகளில்...
வத்தளை - ஒலியாமுல்ல பிரதேசத்தில் தமிழ் மக்களின் பிள்ளைகளுக்காக பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க எடுத்த முயற்சியை நான் பாராட்டுகின்றேன் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இதற்கான அடிகல் இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நாட்டப்பட்டது என சுட்டிக்காட்டிய அவர், இதற்கு அப் பிரதேசத்தில் உள்ள பெருபான்மை இன மக்கள்...
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஊடுருவி (hacking) அதிலிருந்த தரவுகளை மாற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 17 வயது சிறுவன் நன்னடத்தை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும், 26 வயது இளைஞர் எதிர்வரும் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று இருவரும் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு...
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஊடுருவி (hacking) அதிலிருந்த தரவுகளை மாற்றியதாக கூறப்படும் மற்றுமொரு இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவருக்கு 26 வயதாகும். இதேவேளை, நேற்றையதினம் கடுகன்னாவ பகுதியில் வைத்து இந்த சம்பவம் தொடர்பில் 17 வயதான வாலிபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இரு சந்தேகநபர்களையும் இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக,...
சவுதி அரேபியாவில் கல்லெறிந்து கொலை செய்வதற்கு தீர்பளிக்கப்பட்ட இலங்கைப் பெண் ஒருவர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்லெறிந்து கொலை செய்வதற்கு தீர்ப்பளிக்கப்பட்ட குறித்த பெண், மீண்டும் அந்நாட்டு நீதிமன்றத்தினால் மூன்று வருட சிறைத்தண்டனைக்குரியவளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்படும் வகையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவளது சிறைத் தண்டனை கடந்த ஜுன்...
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை ஹக் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடுகண்ணாவையில் வைத்து 17 வயதுடைய பாடசலை மாணவனொருவர் கைது செய்யப்பட்டுள்ளான்.
யாழ்ப்பாணம், நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தெற்கிலிருந்து அங்கு செல்லும் பக்தர்களுக்காக, யாழ்ப்பாணத்துக்கு பயணிக்கும் ரயில்களில் குளிரூட்டப்பட்ட மூன்று பெட்டிகளை இணைப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுது;துள்ளது. இன்று (30), நாளை (31) மற்றும் நாளை மறுதினம் (01) ஆம் திகதி ஆகிய மூன்று தினங்களுக்கே இச்சேவை நடத்தப்படவுள்ளது. அதனடிப்படையில், நாளாந்தம் கல்கிஸை ரயில் நிலையத்திலிருந்து காங்கேசன்துறை...
அற்புதன் நடராஜன் மற்றும் மகேஸ்வரி உட்பட யாழில் நடைபெற்ற முக்கிய கொலைகளுடன் ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் உறுப்பினர்கள் பலர் சம்பந்தப்பட்டுள்ளதாக, அக் கட்சியின் நீண்டகால உறுப்பினராக இருந்த, சு.பொன்னையா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். கடந்த 1990ம் ஆண்டு முதல்...
அண்மையில் பிரேசில் ரியோவில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டித் தொடரில் இலங்கையின் சார்பில் 9 வீர வீராங்கணைகள் பங்கேற்றிருந்தனர். ஆனால் இவர்களுடன் மொத்தமாக 46 அதிகாரிகளும் பிரேசில் சென்றிருந்தனர். ஒன்பது வீர வீராங்கணைகளுக்காக ஏன் 46 அதிகாரிகள் பிரேசில் சென்றார்கள் என்பது தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய ஒலிம்பிக்...
க்கோயா பிரதேசத்தில் 13 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை காணொளியாக பதிவு செய்து, கையடக்க தொலைபேசி ஊடாக பார்த்து கொண்டிருந்த 5 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அந்த சிறுமியின் பெற்றோர், ஹெட்டன் காவற்துறையில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காணொளியை பதிவு செய்து வைத்திருந்த கெமராவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் நாடு பிளவுபடுவதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என எத்ர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உறுதியளித்துள்ளார். நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்பு எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படாமல் இருக்க நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மாத்தறை...
Loading posts...
All posts loaded
No more posts