- Saturday
- January 18th, 2025
நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் இலவச வைத்திய பரிசோதனை செய்வதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குவதாகவும், அதை கட்டாயமாக்குவதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கொலஸ்ட்ரோல், பீ.எம்.ஐ சோதனைகள் போன்றவற்றிற்காக வைத்தியசாலைகளில் நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கும், பின்னர் அவற்றை கிராமிய வைத்தியசாலைகள் வரை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்....
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
குருநாகல், மாளிகாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் வைத்து, யாசகர் ஒருவர் மீது காறித் துப்பிய யுவதி ஒருவரை, அங்கிருந்த இளைஞர்கள் சிலர், சரமாரியாகத் தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவொன்று, சமூக வலைத்தளங்களில் தற்போது உலா வருகின்றன. சம்பவத்தின் போது, பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த...
உயர் மட்டத்தின் உத்தரவுகளினால் இராணுவம் தவறிழைத்திருக்கலாம் எனவும் அவை தொடர்பில் விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிவதில் தவறில்லை எனவும் இராணுவம் குற்றமிழைத்திருந்தால் அதன் உண்மைத்தன்மை தொடர்பில் தெரிந்து கொள்ள முயற்சிப்பதில் எவ்வித தவறும் கிடையாது எனவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். யுத்தக்குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைக் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மங்கள சமரவீர...
சிறீலங்கா இராணுவத்திலிருந்து நேற்று முன்தினம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் எழுதப்பட்ட ‘நந்திக்கடலுக்கான பாதை’ நூலினை சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்தராஜபக்ஷ வெளியிட்டு வைத்தார். ஆனந்தாக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில், நூலின் முதல் பிரதியை மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, மகிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார். இந்த நிகழ்வில், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்...
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணல்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு விட்டுக்கொடுப்புக்கும் அரசாங்கம் தயாரில்லை என ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றில் வைத்து உறுதியளித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் போர் குற்ற விசாரணைக்காக நீதிமன்ற பொறிமுறையொன்றை அமைப்பது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நோக்கமல்ல என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார்....
உலகம் முழுவதிலும் தடை செய்யப்பட்டுள்ள உடற்பயிற்சி முறைகள் இலங்கைப் பாடசாலைகளில் பயன்படுத்தப்படுவதாக விளையாட்டு விஞ்ஞானம் தொடர்பிலான நிபுணத்துவ மருத்துவர் அசங்க விஜேரட்ன தெரிவித்துள்ளார். அமெரிக்க விளையாட்டு விஞ்ஞான கல்லூரி, பிரிட்டன் விளையாட்டு விஞ்ஞான கல்லூரி மற்றும் இராணுவ உடற்பயிற்சி முறையிலிருந்து நீக்கப்பட வேண்டுமென 108 உடற்பயிற்சி வகைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இந்த உடற்...
குளிர்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவுக்கேற்ப, வரி அளவிடுவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறினார். பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் வரி அளவீட்டு முறையை, இலங்கையிலும் அறிமுகப்படுத்துவதன் ஊடாக, தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று, உலக சுகாதார ஸ்தாபனத்தின் தெற்கு மற்றும் கிழக்காசிய வலயங்களின் 69ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு,...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளில் சிறந்த மக்கள் சுகாதாரம் தொடர்பான விஷேட விருது, வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்காசியாவுக்கான பணிப்பாளரினால் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இந்த விருது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வட மாகாணத்தில் அமைந்துள்ள புத்த விகாரைகளை பாதுகாக்கும் படி அரசாங்கத்துக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் தர்ஷன வேரதுவகே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். மனுவில் பிரதிவாதிகளாக வடமாகான முதலமைச்சர் விக்னேஸ்வரன் ,சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் சாகல ரத்னாயக்க உள்பட சில அதிகாரிகளும் குறிப்பிடப்பட்டுள்ளனர். கடந்த...
பண்டாரகம, அடுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய மொஹமட் நஸ்ரின் என்னும் வர்த்தகர் காணாமல் போயுள்ளதாக வர்த்தகரின் தந்தை பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கந்தளாய் ஹோட்டல் ஒன்றில் குறித்த வர்த்தகர் நேற்று தங்கியிருந்துள்ளதாகவும் வங்கியொன்றில் இடம்பெற்ற தங்க நகை ஏலவிற்பனைக்கு குறித்த வர்த்தகர் சென்றுள்ளதாகவும் அவரிடம் சுமார் ஒரு கோடி ரூபா பணம் இருந்துள்ளதாகவும்...
மலேஷியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் மற்றும் இரண்டாம் நிலைச் செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு விஜயம் செய்திருக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு செய்திச் சேவைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை அரசாங்கத்தின்...
புலிப் பயங்கரவாத ஆதரவாளர்களினால், எனக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என்று, மலேசியாவுக்கு புறப்படுவதற்கு முன்னரே நான் அறிந்திருந்தேன்' என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 'புலிகளின் எதிர்ப்புக்கு நான் ஒருபோதும் அஞ்சமாட்டேன்' என்றும் தெரிவித்துள்ளார். மலேஷியாவிலுள்ள இலங்கைப் பிரஜைகள் சிலரைச் சந்தித்ததன் பின்னர், அங்குள்ள ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு...
'யுத்தத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், உயிர்வாழ்பவர்கள் மத்தியில் இல்லை. அதேபோல, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆட்சி அதிகாரத்தில் இல்லை. ஆகையால், பிரச்சினைகளை என்னுடன் இலகுவாகப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்' என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பிரிவினைவாதக் குழுக்கள், வடக்கிலும் தெற்கிலும் இருப்பதனால், சிற்சில பிரச்சினைகள் எழுகின்றன. வடக்கில்,...
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் மக்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் முழுமையாக மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ-மூனுடனான நேற்றை சந்திப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் வகையிலான ஊடக பிராதானிகளுடனான சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி மாளிகையில்...
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஹக் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரையும், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்படுத்தியபோது பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, இந்த உத்தரவை பிறப்பித்தார். 27 வயது இளைஞன், 25,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான...
பம்பலப்பிட்டி பகுதியில் கோடீஸ்வர இளம் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலும் ஐந்து பேரை கொழும்பு குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் 25 மற்றும் 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உயிரிழந்த வர்த்தகரை கடத்திச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் கொழும்பு குற்றப் பிரிவினரால்...
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாராட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு சந்தித்துள்ளார். தேசிய நல்லிணக்க கொள்கையை வலுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்தின்...
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று வியாழக்கிழமை இரவு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா செயலாளர் பான் கீ மூன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அதன்பின்னர் தென்னிலங்கை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர்,...
Loading posts...
All posts loaded
No more posts