தமிழ்க்கொலைக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்!

அரச அலுவலகங்களில் மற்றும் அரச திணைக்களங்களில் தமிழ் மொழியைக் கொலை செய்வதற்கு இடமளிக்கமுடியாது என தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள இலத்திரனியில் அறிவிப்புப் பலகைககளில் தமிழ் மொழி மோசமான தவறுகளுடன் பிரசுரிக்கப்படுவதை நேரில் சென்று ஆராய்ந்த நிலையிலேயே அமைச்சர் இந்தக் கருத்தை...

இன்று தென்படும் சந்திர கிரகணத்தை வெற்றுக் கண்களால் பார்க்கலாம்

இன்று (16) இரவு 10.24 முதல் நாளை அதிகாலை 2.23 மணி வரையில் சந்திரகிரகணம் தென்படும் என இலங்கை கோள்கள் மண்டலம் தெரிவித்துள்ளது. முழு சந்திர கிரகண நிகழ்வு நள்ளிரவு 12.24 மணிக்கு தென்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெறவுள்ள சந்திர கிரகணத்தை வெற்றுக் கண்களால் பார்வையிட முடியும் எனவும், கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும்...
Ad Widget

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு விளக்கமறியல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சருமான மஹிந்தானந்த அளுத் கமகேவை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியிலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மஹிந்தானந்த அளுத்கமகே சற்றுமுன்னர் கைது!

முன்னாள் அமைச்சரும் பராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினராலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக மஹிந்தானந்த அளுத்கமகே, இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு சென்றிருந்த வேளை கைது செய்யப்பட்டுள்ளார்.

சிகரட்டில் நான்காயிரத்து 800 விஷ இரசாயனங்கள்

ஒரு சிகரட்டில் நான்காயிரத்து 800 விஷ இரசாயனங்கள் இருப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதில் 250க்கும் அதிகமானவை கடுமையான விஷம் கொண்ட இரசாயனங்களாகும். புற்றுநோயை ஏற்படுத்தும் 65 வகையிலான இரசாயனங்களும் இதில் காணப்படுகின்றன. இதனால், சிகரட் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக ஒன்பது கோரிக்கைகள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி...

அதிகளவில் தற்கொலை செய்யும் ஆண்கள்

நாட்டில் ஆண்கள் தற்கொலை செய்யும் அளவு அதிகரித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால குறிப்பிட்டுள்ளார். உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். உலகலாவிய ரீதியிலான தற்கொலை செய்வோர் தரவுகளின் படி இலங்கை 22ம் இடத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி கடந்த வருடம் நாட்டில் 3000...

புதிய வற் திருத்தம் விவரம்

அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ள 15 சதவீத வற் (பெறுமதி சேர் வரி)யில் உள்ளடங்கும் மற்றும் உள்ளடங்காத பொருட்கள் மற்றும் சேவைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. வற் விலக்களிப்பு தனியார் பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் நோய் கண்டறியும் சோதனை, வைத்திய ஆலோசனை சேவைகள், வெளிநோயாளர் சேவை, ஆகியவற்றுக்கே புதிய வற் அதிகரிப்பு விலக்களிக்கப்பட்டுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டவை ஆண்டின் மொத்த வருமானம் 50...

வன்னியில் படை முகாம்கள் அகற்றப்பட்டால் மனிதப் புதைகுழிகள் வெளிவரும்: வீரவன்ச எச்சரிக்கை

வன்னியிலுள்ள படை முகாம்கள் அகற்றப்பட்டால் அங்குள்ள மனிதப் புதைகுழிகள் வெளிவரும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியின் முக்கியஸ்தரான நாடாளுமுன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அச்சம் வெளியிட்டுள்ளார். அவ்வாறான நிலை ஏற்பட்டால் சிறிலங்கா இராணுவம் மீது போர் குற்றங்கள் சுமத்தப்பட்டு தண்டனை விதிக்கப்படலாம் என்று குறிப்பிட்டுள்ள அவர் இந்த நிலைமையைத்...

மின்சாரப் பிளக்குகள் மற்றும் சொக்கற்றுக்களுக்கான தேசிய தர நியமம்

மின்சாரப் பிளக்குகள் மற்றும் சொக்கற்றுக்களுக்கான தேசிய தர நியமம் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளது இது தொடர்பான விதிகள் ஆகஸ்ட் மாதம் 16ம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இது தொடர்பான தகவல்களை அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். பொதுப்பயன்பாடுகளின் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித்த குமாரசிங்க ' 13 அம்பயர்...

சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கப் போவதில்லை!

சம்பூரில் அனல்மின் நிலையமொன்றை அமைக்க போவதில்லை என, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் நீதிக்கான மையம், சம்பூர் அனல்மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த வியடம் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த...

பெண்கள் மத்தியில் மதுபான பாவனை அதிகரிப்பு

நாட்டிலுள்ள பெண்கள் மத்தியில் மதுபான பாவனை அதிகரித்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும், இலங்கையில் தற்போது மதுபானம் மற்றும் சிகரெட் பாவனை குறைவடைந்துள்ளதாகவும், எனினும் போதைப் பொருள் கொண்டுவரும் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே...

நிலையான சமாதானத்தை ஏற்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் : சம்பந்தன்

நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவற்கு பேதங்களை மறந்து அனைவரும் முன்வர வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படும் புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- ”புனித ஹஜ் பெருநாளானது தன்னலமற்ற தியாகத்தை...

பதியாத இணையத்தளங்களைகட்டுப்படுத்த முஸ்தீபு

சகல இணையத் தளங்களையும் பதிவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில், கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது தொடர்பில் ஆராயப்பட்டதாக அறியமுடிகின்றது. தற்போது செயற்பாட்டில் உள்ள இணையத்தளங்களை கணக்கிடமுடியாதுள்ளதாகவும் நிறுவனங்கள், அமைச்சுக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் என்றடிப்படையில்...

கொழும்பு பல்கலை வைத்திய பீட மாணவன் சடலமாக மீட்பு

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கியிருந்த வைத்திய பீட மாணவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவர் தற்கொலை செய்திருக்கலாம் என கருவாத்தோட்ட பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 28 வயதான அந்த வைத்தியரின் சடலம் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை, உயிரிழந்த மாணவன் பரீட்சையில் தோல்வியடைந்தமையால் ஏற்பட்ட மன உளைச்சலினாலேயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, பொலிஸாரின்...

கல்முனையில் பூமியதிர்ச்சி !!

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பகுதியில் நேற்று இரவு 9.00 மணியளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டதில் வீடுகளுக்கும் கட்டிடங்களுக்கும் சிறு சேதங்கள் ஏற்பட்டதுடன் நிலங்களிலும் சிறு,சிறு வெடிப்புக்களையும் காணக் கூடியதாகவுள்ளது . இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. சிறிது நேரத்தில் பொலிஸாரும் அப்பகுதிக்கு வந்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினர்....

ஐ.தே.கவின் ஆண்டு விழாவில், தமிழிழும் தேசிய கீதம் பாடப்பட்டது

ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழா, கொழும்பு பொரளை கெம்பல் மைதானத்தில் இன்று கொண்டாடப்பட்டது. விழாவின் ஆரம்பத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதமும், இறுதியில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது.

2020ல் நாட்டின் கடன் சுமையை குறைப்போம்; பிரதமர் ரணில்

2020ம் அண்டாகும் போது இந்த நாட்டின் கடன் சுமையை குறைப்போம். ராஜபக்ஷ குடும்பம் பெற்ற கடன்களை நாங்கள் அடைப்போம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் 70வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம் இன்று (10) பொரளை கெம்பல் மைதானத்தில், அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில்...

இரண்டு கட்சிகளும் ஒரே யோசனைகளையே கொண்டுள்ளன-ஜனாதிபதி

அன்று 70 ஆண்டுகளுக்கு முன்னர் 1946ம் ஆண்டு சிங்கள, முஸ்லிம், தமிழ், பேர்கர் என அனைத்து இன மக்களும் ஒரே இனமாக இருக்க வேண்டும் என்று டீ.எஸ். சேனாநாயக்க கூறியதை இன்று நாமும் கூற வேண்டி ஏற்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் 70வது ஆண்டு நிறைவு கொண்டாட்ட நிகழ்வில்...

கதிர்காமத்தில் தேரர் மீது தாக்குதல்

கதிர்காமம் வல்லி குகை ரஜமகா விகாரையின் விகாராதிபதி ரம்புக்வெல்ல சங்கானந்த தேரர் மீது நேற்று மாலை இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை விகாரைக்குள் புகுந்த இனந்தெரியாத குழுவினர் கூரிய ஆயுதங்களினால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேரர் தற்பொழுது தெபரவெவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லையெனவும் பொலிஸார் மேலதிக...

விடுதியில் தங்கியிருந்த வர்த்தகரை காணவில்லை

மருதானை பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் காணமால் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த விடுதியின் உரிமையாளரினால் நேற்று இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர். கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் வர்த்தகத்தில் ஈடுபடக்கூடியவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் வந்து குறித்த...
Loading posts...

All posts loaded

No more posts