முதலமைச்சர் சி.வி இனவாதியல்ல!! அரசியல்வாதி: மஹிந்த கூறுகிறார்!

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல என்று கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரை தாம் ஒரு அரசியல்வாதியாவே பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்லையின் அமைந்துள்ள ஒன்றிணைந்த எதிரணியின் காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களுக்கான தீர்வு, வேலைவாய்ப்பு, வீதிகள் அபிவிருத்தியின்மை, விவசாயிகளுக்கான நிவாரணம் வழங்கப்படாமை...

பதிவு செய்யாத மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய இன்று முதல் அவகாசம்

பல்வேறு காரணங்களினால் இதுவரையில் பதிவு செய்யப்படாதுள்ள மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு 4 மாத கால அவகாசத்தை வழங்குவதற்கு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி அறிவித்துள்ளார். இந்த அவகாச காலம் இன்று (03) முதல் ஆரம்பமாகி எதிர்வரும் 2017 ஜனவரி வரையில் நடைமுறையில் இருக்கும் எனஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் காலத்துக்குள் 450 வேகம்...
Ad Widget

நியூசிலாந்தில் சம்பந்தனை புகழ்து பேசிய பிரதமர் ரணில்!

நியூசிலாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் அன்ட்‌ரூ லிட்டிலுக்கு (Andrew Little) தைரியமூட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை, புகழ்ந்து பேசினார். நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, நியூசிலாந்துக்கு சென்றுள்ள பிரதமர் தலைமையிலான குழுவினர், ஒக்லண்டில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளை, மெட் அல்பிரட் யுத்த ஞாபகார்த்த மண்டபத்தில்...

விடுதலைப்புலிகளின் தலைவரைப்போன்று விக்னேஸ்வரன் நீண்டதூரம் பயணிக்கமுடியாது!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் அதிக தூரம் பயணிக்கமுடியாது என பீல்ட் மார்ஷலும் தற்போதைய அமைச்சருமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். வடக்கில் எழுக தமிழ் பேரணியை நடாத்திய அவர், இணைந்த வடக்குக் கிழக்கில் சுயாட்சியை கோரியுள்ளார். இது தொடர்பாக பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு...

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததாலேயே அவர்கள் இன்று வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்சன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதனால் நாட்டின் ஒழுக்கம் கெட்டுப்போயுள்ளதாகவும், அரசாங்கம் தமக்கு எதிரான அரசியல்வாதிகளை அவ்வப்போது கைதுசெய்து வருவதாகவும் குறறம் சுமத்தினார். நாட்டில் தற்போது காட்டுச் சட்டமே அமுலில் உள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற...

மஹிந்தவின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்பு?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்படும் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக, அவரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மஹிந்த கதைத்தாரா? என்று, சில அமைச்சர்களிடம் விசாரணை நடத்தப்படுவதிலிருந்தே, தனக்கு அந்தச் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில், நேற்று வெள்ளிக்கிழமை (30), அவன் காட் ஆயுத கப்பல் தொடர்பான வழக்கு இடம்பெற்றது. இந்த வழக்கில்...

கோட்டாபய உள்ளிட்ட எட்டுப் பேருக்குப் பிணை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நிஷங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதிகள் உள்ளிட்ட எட்டுப் பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதம நீதவான் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். எவன்காட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நாளை 30ஆம் திகதி வவுனியாவில் முன்னெடுக்கவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது. நாட்டை இரத்தக் காடாக்க வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட குழுவினர் முன்னெடுக்கும் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே...

இறந்துபோன புலிகளின் எச்சங்களுக்கு புத்துயிர் கொடுக்கிறார் விக்னேஸ்வரன்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழர், சிங்களவர், முஸ்லிம் என மூவின மக்களும் ஒன்றிணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளார் மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரோ. பண்டார கமவில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களிடையே உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கில் இறந்துபோன புலிகளின் எச்சங்களுக்கு புத்துயிர் கொடுக்கவே வடக்கு மாகாண முதலமைச்சர்...

5 வயது சிறுமிக்கு மார்பகப் புற்றுநோய் அறுவைச் சிகிச்சை

மார்பகப் புற்றுநோய்கான முதலாவது அறுவை சிகிச்சை நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் கனிஷ்க டி சில்வா தெரிவித்துள்ளார். 5 வயதுடைய சிறுமிக்கே இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதுடன் இது மிகவும் அரியதொரு சந்தர்ப்பம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை

வட மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்தை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அம்பாறை பிரதேச விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்து அவர், அரசியலமைப்பு என்ற...

தமிழர்கள் அனைவரையும் தமிழ்நாட்டிற்கே விரட்டியடிப்போம்

வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சிங்களவர்களுக்கு எதிரான போக்கை தொடர்ந்தும் கடைபிடித்தால் தமிழர்கள் அனைவரையும் தமிழ் நாட்டிற்கு நாடு கடத்துவதாக பொதுபல சேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாங்கள் விக்னேஸ்வரனுக்கு ஒன்று சொல்ல வேண்டும் சிங்களவர்களிடம் சண்டித்தனம் காட்ட வர வேண்டாம். சிங்களவர்களின் நிலத்தில் வசித்துக்கொண்டு இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என்று. எனக்கு...

வடக்கு முதல்வருக்கு அனைத்து தமிழ் மக்களும் ஆதரவு தெரிவிக்கவேண்டும்!

வடக்கு மாகாணத்தில் நடாத்தப்பட்ட எழுக தமிழ் பேரணியின்போது முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சரின் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானதே எனவும் இதற்கு வடக்குக் கிழக்கிலுள்ள அனைத்துத் தமிழ் மக்களும் மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களும் எந்தவித வேறுபாடுகளும் காட்டாது பூரண ஆதரவை வழங்கவேண்டுமெனவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவர் செந்தில் தொண்டமான்...

இந்து ஆலயம் தீயிட்டு எரிப்பு; படையினர் குவிப்பு!! மக்கள் அச்சத்தில்!!

திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் கல்லடி கிராமத்திலுள்ள மலைநீதியம்மன் ஆலயத்தின் மடப்பள்ளி, அங்குள்ள பௌத்த துறவியொருவரால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 10.30 மணியளவில் ஆளரவம் இல்லாத நேரத்தில் ஆலயத்தின் பின்னால் மறைந்து வந்த காவியுடை தரித்த பௌத்த துறவி, கோயிலின் மடப்பள்ளிக்குத் தீவைத்து விட்டு அருகிலுள்ள ரஜமகா விகாரைக்குள் சென்று...

விகாரைகளை அகற்றுமாறு கோருவதற்கு சி.விக்கு உரிமை இல்லை!

வடக்கிலிருந்து பௌத்த விகாரைகளை அகற்றுமாறு கோருவதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எவ்விதமான உரிமைகளும் இல்லையென, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரிப் பிரதியமைச்சர் ரஞ்சன் இராமநாயக்க, நேற்று (26) கூறினார். நாட்டின் வேறு பகுதிகளில் உள்ளது போன்று, வடக்கிலும் வழிபாட்டுச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். இதனால், வடக்கிலுள்ள பௌத்த விகாரைகளை அகற்ற வேண்டிய தேவையில்லை என,...

காலியில் நிலநடுக்கம்

காலி பகுதியில் சிறிய அளவிலான நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அனர்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு. இன்று காலை ஏற்பட்ட இந்த நில அதிர்வின் மூலம் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்க்ப்பட்டுள்ளது.

எழுக தமிழ் : அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கச் செயற்பாட்டுக்கு இடையூறை விளைவிக்கும்

வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற எழுக தமிழ் எதிர்ப்பு பேரணியானது, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கச் செயற்பாட்டுக்கு இடையூறை விளைவிக்கும் என்று, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். ரத்டெம்பேயில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,...

சிகரெட்டின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிப்பு?

சிகரெட்டின் விலையை ஐந்து ரூபாவினால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான ஆவணம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என்று சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். 15 வீத வற் வரிக்கு அமைவாக சிகரெட்டின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். ஏற்கனவே...

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு புதிய சாரதி அனுமதிப் பத்திரம்!!

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டியின் சாரதிகள் தொடர்பில் புதிய ஒழுங்குமுறை திட்டங்களை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, பயணிகள் போக்குவரத்துக்காக புதிய சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொடுக்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக்க அபேசிங்க குறிப்பிட்டுள்ளார். முச்சக்கர வண்டிகளால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் நோக்குடன் இந்த வேலைத் திட்டம்...

தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கின்றது

அநுராதபுரம் சிறைச்சாலையில் நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. இதுவரை எந்தவொரு தீர்வும் கிடைக்காத நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலையில் நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களது விடுதலையை வலியுறுத்தி கடந்த புதன்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமது...
Loading posts...

All posts loaded

No more posts