- Friday
- January 17th, 2025
நாட்டில் தற்பொழுது பெய்து வரும் அதிக மழை மற்றும் பனி மூட்டம் என்பன காரணமாக தெற்கு அதிவேக பாதையில் வாகனங்கள் பயணிக்கும் வேகத்தை 60 ஆக குறைத்துக் கொள்ளுமாறு பாதை அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அப்பாதையில் இடம்பெற்று வரும் விபத்துக்களைக் குறைப்பதற்கு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இப்பாதையில் பயணிக்கும் வாகனங்கள்,...
கொழும்பு மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்ட காணாமல் போகச்செய்யப்பட்ட 5 மாணவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என ஸ்ரீலங்கா கடற்படைப் புலனாய்வு பிரிவின் சிப்பாய் அளுத் கெதர உப்புல் பண்டார நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார். 2008ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள 5 மாணவர்களில் மூவர் சார்பில்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சியின் தலைவருமான இரா. சம்பந்தனுடன் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இரகசியச் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார். இச்சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடபெற்றதாக தகவல்கள் கசிந்துள்ளன. இச்சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இரா. சம்பந்தனைச் சந்திப்பதும், அவரது கருத்தை செவிமடுப்பதும் எப்போதும் தமக்கு மகிழ்ச்சியைத் தருவதாக அதுல் கெசாப்...
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவிற்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய அழைப்பாணை பிறப்பித்துள்ளார். நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவன்ட் கார்ட் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி நீதிமன்றில் விடுத்த கோரிக்கை ஒன்று தொடர்பிலேயே, தில்ருக்ஷியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு...
ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ், மிஹின் லங்கா நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்களில் 'சம்சுங் நோட் 7' திறன்பேசிகளை கொண்டுவருவது மற்றும் பாவிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த திறன்பேசிகளுடன் தமது விமான சேவையைப் பெற்றுக்கொள்ள வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மருந்து பொருட்களின் விலை குறைப்பு, வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி, அத்தியாவசியமான 48 வகையான மருந்துப்பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. நாட்டில் அதிகமாக காணப்படும் நோய்களுக்கான மருந்துகளும் இதில் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், வலிப்பு, ஆஸ்துமா,...
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் குடும்பத்தினர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந் துள்ளன. அவரது தம்பிகள், மனைவி மற்றும் மகன்கள் மீது அத்தகைய புகார்கள் கூறப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராஜ பக்சே மூத்த மகன் நாமல் மீது அதிரடியாக ‘செக்ஸ்’ புகார் கூறப்பட்டுள்ளது. தற்போது நாமல் இலங்கை பாராளுமன்றத்தில் எம்.பி....
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் முப்படைத் தளபதிகள் சிலரை நீதிமன்றத்துக்கு அழைத்தமை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் சில கருத்துக்களை வௌியிட்டிருந்தார். ஜனாதிபதியின் குறித்த உரையே டில்ருக்ஷியின் இராஜினாமாவுக்கு காரணமாக இருக்கலாம் என, நம்பத்...
கடந்த 15ம் திகதி நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இலங்கையில் மின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்றில் இருந்து (17) எதிர்வரும் 21ம் திகதி வரை காலை இரண்டரை மணித்தியாலங்களும் இரவு ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபை அறிவித்தது. எனினும், குறித்த நேரத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய,...
ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் எதிர்கட்சி தலைவர் ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளார்கள். இந்நிலையில் அரசாங்கத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் பதவியை தற்போது பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் வகித்து வருகின்றார். ஜனாதிபதி இந்தியாவின் கோவாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வதற்காக பெல்ஜியத்திற்கு...
கோத்தபாயவை காப்பாற்றும் வகையில் எனது உரை அமைந்திருக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பொன்றின் போது ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது பிரதமர் ரணில் உட்பட ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்களும் அங்கிருந்துள்ளனர். இதன்போது சமகால நெருக்கடியாக மாறியுள்ள ஜனாதிபதியின் உரை தொடர்பில் அவர்...
தீர்வை வரி இன்றி சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிக்கமைய, இதுவரை 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும், மல்வானையில் உள்ள 16 ஏக்கர் காணியை ஏல விற்பனை செய்யுமாறு பூகொடை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதிலும் உள்ள சகல பொலிஸ் பிரிவுகளையும் இன்று மாலை 6 மணி முதல் தயார் நிலையில் இருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக சிங்கள இணைய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து நாடு முழுவதிலும் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் விடுமுறையில் சென்ற பொலிஸ் அதிகாரிகள்...
பல்கலைக்கழக பட்டப்படிப்பை முடித்து வெளியேறும் ஒரு பட்டதாரி, பட்டம் பெற்று 6 மாத காலத்துக்குள் அரசாங்கத்தின் ஏதாவது ஒரு துறையில் தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள வழி செய்ய வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (12) அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்படி, அரச துறைகளில் நிலவும்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார விளம்பரம் ஒன்றில் காணாமல் போன எனது மகள் உள்ளிட்ட இன்னும் நான்கு பிள்ளைகள் உள்ளனர். அவர்களும் காணாமல் போயுள்ளனர். அவர்களது பெற்றோர்களும் பல இடங்களில் பிள்ளைகளை தேடி திறிகின்றனர். ஜனாதிபதியை சந்தித்து நான் எனது மகள் தொடர்பான தகவல்களை கூறிய சந்தர்ப்பத்தில் ஒரு மாதத்திற்குள் தீர்வை பெற்று தருவதாக...
காவல்துறையினரால் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கொன்றில் தமிழாசிரியர் ஒருவர் சட்டத்தரணியை அமர்த்தாது தானே மன்றில் முன்னிலையாகி வாதாடி விடுதலையாகியுள்ளார். இந்தச் சம்பவம் புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் போக்குவரத்துச் சட்டமீறல் தொடர்பான வழக்கொன்றில் தாமாகவே வழக்கில் முன்னிலையாகி விடுதலையாகியுள்ளார். மோட்டார் போக்குவரத்து ஆணையாளரின் அனுமதியின்றி சிறிய ரக டிப்பர் ரக லொறி ஒன்றின் பின் பக்கத்தை மறைத்து...
இலங்கையில் அமுலில் உள்ள சட்டங்களில் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகின்ற பயங்கரவாதத் தடுப்புக் கட்டளைச் சட்டத்திற்குப் பதிலாக உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது இந்த வரைபிற்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிவலாக கொண்டுவரப்படவுள்ள உத்தேச பயங்கரவாத...
இனிப்புப் பதார்த்தங்களுக்கான வர்ண அடையாளத்தை அறிமுகம் செய்ய சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத் துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன திட்டமிட்டுள்ளார். இலங்கை இனிப்புப் பதார்த்த உற்பத்தியாளர் சங்கத்துடன் நடைபெற்ற சந்திப்பின் போது இதுபற்றி கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் கூறினார். தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவது பற்றியும் இதன் போது ஆராயப்பட்டது. கேக், தொதல், பூந்தி,...
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகனும் கிரிக்கெட் வீரருமான ரமித் ரம்புக்வெல்லவுக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தி, சுவரொன்றின் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியதாக கூறி, கடந்த செப்டம்பர் 22ம் திகதி இவர் கைதுசெய்யப்பட்டு, பின்னர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். எனினும் விபத்தினை...
Loading posts...
All posts loaded
No more posts