- Friday
- January 17th, 2025
அரச பணியாளர்கள் மத்தியில் நெகிழ்வுத்தன்மையான வேலை நேரக்கொள்கை அமுல்செய்யப்படவுள்ளது. முதற்கட்டமாக கொழும்பில் இந்த நெகிழ்வு தன்மையான வேலை நேர கொள்கை, அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக ஆங்கில செய்தி தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேல்மாகாண பாரிய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்கவை கோடிட்டு இந்த செய்தியை வெளியாகியுள்ளது. இதன்படி அடுத்த மாதம் முதல்,...
ஆவா குழுவுடன் புலிகளுக்கும் தொடர்பில்லை இராணுவத்தினருக்கும் தொடர்பில்லை-பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
ஆவா குழுவானது விடுதலைப் புலிகளிடமிருந்தோ, இராணுவத்திலிருந்தோ அல்லது அரசியல் கட்சியிலிருந்தோ தோற்றம் பெற்ற ஒன்றல்ல எனக் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, வடக்கிலுள்ள அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்தி கப்பம் பெறும் ஒரு குழுவே ஆவா குழுவென குறிப்பிட்டுள்ளார். பியகம பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு...
பொலிஸ் அதிகாரிகளில் பெரும்பாலானோரும் சில அரசியல்வாதிகளும் இலங்கையில் நடக்கும் போதைப் பொருள் விற்பனையாளர்களின் பங்காளிகளாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்தை செயற்படுத்தும் முன்னர், அதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கம்பஹாவில்நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும்போதே...
கடமையில் இருந்து இடைவிலகிய ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொடுக்கவுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தற்போது இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும், கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக குறித்த ஓய்வூதியத்தை வழங்கவுள்ளதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெரும் கால...
சிங்கள இசையுலகின் ஜாம்பவான் என அழைக்கப்படும் பழம்பெரும் இசையமைப்பாளரும் பாடகருமான மறைந்த பண்டித் அமரதேவவின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை 10.00 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்துக்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடல் தாங்கிய பேழையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தாங்கி வந்துள்ளார். இது இலங்கையின் வரலாற்றிலேயே நாட்டின் ஆட்சியாளரால் கலைஞர் ஒருவரின் உடல் இவ்வாறு...
வெள்ளை வான் கடத்தலானது, சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தினதும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளினதும் கட்டுக்கதை என, ஒன்றிணைந்த எதிரணியின் நடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியினரின் ஏற்பாட்டில், கொழும்பில், நேற்று வியாழக்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த அவர், மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி காரணமாக ஏற்பட்ட...
பண்டித் அமரதேவவின் மரணத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் நேற்று (03) முதல் எதிர்வரும் ஒரு வார காலத்தை துக்க வாரமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இதன்படி, அரச காரியாலயங்களில் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு நேற்று அறிவித்தல் விடுத்துள்ளது. இதேவேளை மரணமடைந்துள்ள பண்டித் அமரதேவவின் வைத்திய சிகிச்சைக்கான சகல மருத்துவ செலவுகளையும்...
இலங்கையில் குற்றச் செயலில் ஈடுபடும் சிறுவர்களுக்கு தண்டனை வழங்கும் வயது 12 ஆக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், தற்போது நடைமுறையிலுள்ள குற்றவியல் சட்டத்திலுள்ள தண்டனை கோவையில், சில திருத்தங்களை செய்ய நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் முன் வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள குற்றவியல் சட்டக் கோவையில் குற்றச்...
ஹெரோய்ன் கொள்வனவு செய்வதற்காக, தனது சிறுநீரகத்தை 500,000 ரூபாய்க்கு விற்பனை செய்த போதைக்கு அடிமையான நபரொருவரை, 100 மில்லிகிராம் ஹெரோய்னுடன், காலி பொலிஸார் கைது செய்துள்ளனர். காலி, தன்கெதர பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், தனது சிறுநீரகத்தை விற்பனைச் செய்த பின்னர், கொழும்புக்குச் சென்றுள்ளதாகவும்...
விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினிக்காக சிங்கள பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் இப்பாடல் தமிழிலும் பாடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. தமிழினி தனது உணர்வுகளை சொல்வது போன்ற வகையில் இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு லைட் ஹவுஸ் கெலேயில் இடம்பெற்றுள்ளது. காஷ்யப்ப சத்யபீரிஸ் டி சில்வாவின் பாடல்...
புலிகளை அழித்த எமக்கு ஆவா ஒன்றும் பெரிய விடயம் அல்ல என மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எல்லோருக்கும் தெரியும் ஆவா என்பது கடத்தல் வேலை செய்யும் ஒரு குழு....
யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவா குழுவுடன் முன்னாள் போராளிகளுக்கு தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லையென முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அடித்துக் கூறியுள்ளார். அதேபோல் இராணுவமும் முன்னாள் போராளிகளை வைத்து, ஆவா கும்பலைப் போன்ற ஒரு கும்பலை இயக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற...
யாழ்ப்பாணத்தில் மக்களிடையே அச்சத்தை தோற்றுவித்துவரும் ஆவா குழுவை தாம் உருவாக்கவில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, அந்தக் குழுவுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் கூறியுள்ளார். அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தனக்கு எதிராக முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்த கோட்டாபய ராஜபக்ச, ஒட்டுமொத்த படையினரையும் அமைச்சர் கேவலப்படுத்தியிருப்பதாகவும்...
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் மாணிக்கமடு கிராமத்தின் அருகே உள்ள மாயக்கல்லி மலைமீது அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு பிக்குகள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை திடீரென அப்பகுதிக்கு வந்த புத்த பிக்குகளால் தமிழ்க்கிராமமான மாணிக்கமடுவை அடுத்த மாயக்கல்லி மலை மீது புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டது. அந்தப் பகுதியில் பௌத்தர்கள்...
வடக்கில் இயங்கும் "ஆவா" எனப்படும் குழு முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு தெரிந்தே உருவாக்கப்பட்ட கொள்ளைக் குழு என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். குறித்த குழுவினர் இன்று வரை முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் தேவைகளுக்கு அமையவே செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் குறித்த குழுவை கட்டியெழுப்பிய பிரிகேடியரை தனக்குத் தெரியும் எனவும் அவர் கூறியுள்ளார். அரசாங்க...
சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவினால் புதிய கட்சி, புதிய சின்னம் மற்றும் அதன் தலைவர் ஆகியன தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அபே சிறீலங்கா நிதஹஸ் பெரமுன (எங்கள் இலங்கை சுதந்திர முன்னணி) என முதலில் வைக்கப்பட்ட பெயர் தற்போது சிறீலங்கா பொதுஜன பெரமுன (இலங்கை மக்கள் முன்னணி) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பழைய...
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன இறந்துபோன தனது சகோதரனை நினைத்து கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.காலி காராப்பிட்டி வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவை ஸ்தாபிக்கும் நோக்குடன் (TRAIL WALK ) நடைபவனி இடம்பெற்று வந்தது. இதன் நிறைவு நாளான நேற்று காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் குறித்த புற்றுநோய் சிகிச்சைப்பிரிவுக்கான அடிக்கல்...
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி நடத்தும் காலப் பகுதியிலும் இலங்கையில் சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டின் முதல் எட்டு மாத காலப் பகுதியில் 208 சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவிற்கு, இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ள 17 பக்க அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது....
விசேட தேவையுடைய முன்னாள் படையினர் நேற்று முதல் கொழும்பு புறக்கோட்டை வீதியில் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. தமக்கான ஓய்வூதியத்தை வழங்குமாறு வலியுறுத்தி நேற்று மீள ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டம் இரவு பகலாக இன்றும் தொடர்கிறது. இந்நிலையில், ஓல்கோட் மாவத்தை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு, சில வீதிகள் ஒரு...
வற் எனப்படும் பெறுமதி சேர் வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி என்பன இன்று முதல் அமுலுக்கு வருகின்றன.கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி இதற்கான திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.இதன்படி முன்பு 11 சதவீதமாக இருந்த வற் வரி, 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வற் வரி பதிவுக்கான மொத்த மற்றும் சில்லறை விற்பனைகளுக்கான குறைமட்ட...
Loading posts...
All posts loaded
No more posts