மாணவர்களின் தாக்குதலில் உயிரிழந்த மாணவன்

கொழும்பில் அமைந்துள்ள பிரபல சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவர் ஒருவர் மாண வர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலே இந்த உயிரிழப்பு சம்பவத்திற்கு காரண மென தெரியவந்துள்ளது. உயிரிழந்த மாணவர் கற்ற பாடசாலை மாணவர் உள்ளிட்ட, வேறு பாடசாலையின் மாண வரும் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த மாணவரை...

தெஹிவளை விலங்கியல் பூங்காவை இரவுப் பூங்காவாக மாற்றத் திட்டம்

எதிர்வரும் 2017ஆம் ஆண்டு தேசிய புத்தாண்டுக்கு முன்னர் தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவை இரவுப் பூங்காவாக மாற்றுவதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார். மிருகங்களை கூடுகளில் அடைத்து வைக்காது, அவை சுதந்திரமாக நடமாடும் வகையில் இந்த விலங்கியல் பூங்கா மூன்று கட்டங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் அவர்...
Ad Widget

ஆனந்த சங்கரிக்கு அரசாங்கத்தின் வீடு!

ஜனாதிபதி, பிரதம அமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமற்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் ஆகியோருக்கென, கொழும்பில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லங்களின் எண்ணிக்கை 57ஆகும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஜே.வி.பியின் எம்.பியான பிமல் ரத்னாயக்க கேட்டிருந்த கேள்விகளுக்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்...

அணுமின்நிலையம் அமைக்க இடம் தேடுகின்றது அரசாங்கம்!

சிறீலங்காவில் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கு பொருத்தமான இடத்தினைத் தேடி வருவதாக சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அஜித் பெரேரோ தெரிவிக்கையில், அணுமின் நிலையத்தை அமைப்பதற்கு பொருத்தமான இடம் இன்னமும் தெரிவுசெய்யப்படவில்லை. அனைத்துலக அணுசக்தி முகவர் அமைப்புடன் இணைந்து அணுமின் நிலையத்தை அமைப்பதற்குப் பொருத்தமான இடத்தினை தெரிவுசெய்யும் பணியில் சிறீலங்கா...

பிறந்த நாளில் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்தார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை நேற்று தனது பிறந்த நாளில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். தனது 71 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ இணையத்தளத்தை http://www.mahindarajapaksa.lk/ ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்தவின் மகன் அனுப்பிய செய்மதியை காணவில்லை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனால் விண்ணுக்கு ஏவப்பட்ட செய்மதி, காணாமல் போய்விட்டது என்று சுட்டிக்காட்டிய ஜே.வி.பி.யின் எம்.பி.யான நளிந்த ஜயதிஸ்ஸ, அந்த செய்மதியைக் கண்டுபிடிப்பதற்கு, இன்னுமொரு செய்மதியை அனுப்புங்கள் என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்...

தமிழில் தேசிய கீதம்: எதிர்க்கும் மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம்

தமிழில் தேசிய கீதம் பாடுவதை சவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்று கூறி, உயர் நீதிமன்றம் அந்த மனுவை, இன்று (18) நிராகரித்தது. இந்த மனு, மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது. இதன்போது, குறித்த மனு தொடர்பான சட்டமா அதிபரின் விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன....

இன்று முதல் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு கடும் மழை

வங்கால விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கம் காரணமாக நாட்டின் பல பிரதேசங்களிலும் இன்று (18) கடுமையான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த தாழ் அமுக்கம் அடுத்துவரும் 48 மணித்தியாலங்களுக்கு காணப்படும் எனவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத் தளத்தை ஹக் செய்த இளைஞனை ஜனாதிபதி சந்தித்தார்

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத் தளத்தை ஹக் செய்த இளைஞனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி குறித்த இணையத்தளத்தை ஹக் செய்து, இலங்கை இளைஞர்கள் என்ற பெயரில் அடையாளம் காணப்படாத குழுவினர் தகவலொன்றை பதிவிட்டிருந்தனர். கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையை ஏப்ரல் மாதம் நடத்துவதாகவும் நாட்டை...

ஆவா குழு தலைவர் கைது!

ஆவா குழுவின் பிரதான தலைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் 8 தலைவர்களை கைது செய்யும் நடவடிக்கை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வட மாகாணத்தில் இயங்கும் ஆவா இராணுவத்தினரால் வழிநடத்தப்படுவதில்லை என்றும் அமைச்சர் கூறினார். பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார...

நல்லாட்சி அரசில் தாய்ப்பாலுக்கும் வரி!!

நல்லாட்சி அரசாங்கத்தின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முடிந்தால் தாய்ப்பாலுக்கும் அபராதம் அல்லது வரி விதிப்பார் என கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெ லிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட அவர், அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்ட நிதிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தற்போதைய அரசாங்கம் வரிச்சுமைய மக்கள் மீது சுமத்தியுள்ளதாக...

ATM மூலம் பணம் மீளப்பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு?

தன்னியக்க டெலர் இயந்திரங்கள் (ATM) மூலம் பணம் மீளப்பெறும் போது அறவிடப்படும் கட்டணம் 10 ரூபவாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட வாசிப்பின் போதே நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இது தொடர்பாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாண முதலமைச்சர் தமிழ் மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டுகிறார் ; ஜே.வி.பி

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி வருவதாக ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல்ரத்நாயக்க குற்றம்சாட்டியுள்ளார். வடமாகாண முதலமைச்சராக பதவி வகிக்கும் விக்னேஸ்வரன், இதுவரை தனது முதலமைச்சர் பதவியை பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்றவில்லை என்றும் தெரிவித்துள்ள ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர், தனது இயலாமையை மூடி மறைப்பதற்கே அவர் தற்போது...

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்! (ஒரே பார்வையில்)

எட்டாவது பாராளுமன்றத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரை, நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வரவு செலவு திட்ட உரையில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு, இலங்கையின் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்த சமூக அபிவிருத்திக்காக பரந்த கொள்கையை அறிமுகம்...

அவசரமாக கூடிய அமைச்சரவை: பாதீட்டிற்கு அங்கீகாரம்

நல்லாட்சி அரசாங்கத்தினால் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், வரவு செலவுத் திட்டத்திற்கென இன்று முற்பகல் விசேடமாக கூடிய அமைச்சரவையில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நிதியாண்டுக்கான குறித்த வரவு செலவுத் திட்டம்...

கட்டுப்பாட்டு விலையை மீறினால் நடவடிக்கை

விலை குறைக்கப்பட்டுள்ள மருந்துகளை கூடுதல் விலைகளில் விற்றால் அவை தொடர்பில் அறிவிக்குமாறு சுகாதார அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கட்டுப்பாட்டு விலையை மீறி மருந்து விற்பனை செய்யும் மருந்தகங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை வழங்க, சுகாதார அமைச்சினால் விசேட தொலைபேசி இலக்கங்கள்...

ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர், இரா.சம்பந்தன் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோன்ஸ் அனிலே அவர்களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (08/11/2016) கொழும்பிலுள்ள பிரித்தானிய உயரிஸ்தானிகரின் இல்லத்தில் இடம்பெற்றது. இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அமைச்சரை தெளிவுபடுத்திய கூட்டமைப்பின் தலைவர் தேசிய...

வெள்ளவத்தையில் பொலிஸ் பதிவு! மக்கள் பதற்றம்!! படிவங்களை நிரப்ப வேண்டாம் என்கின்றார் மனோ!!!

வௌ்ளவத்தையில் சில பகுதிகளில் பொலிஸ் பதிவு மேற்கொள்வதற்காக, பொலிஸாரால் படிவங்கள், நேற்றுத் திங்கட்கிழமை விநியோகிக்கப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அங்கு பதற்றம் ஏற்பட்டது. ஏற்கெனவே, யுத்தம் நடைபெற்ற காலப்பகுதிகளிலும் அதற்குப் பின்னரான காலப்பகுதிகளிலும், இவ்வாறான பொலிஸ் பதிவுகள் இடம்பெற்று, அதன் மூலமாக மக்களுக்கு இடர்கள் ஏற்பட்டிருந்த நிலையில், மீண்டும் பொலிஸ் பதிவு மேற்கொள்ளப்படுகிறதா என, மக்கள்...

வௌிநாடு சென்று பலியான மஸ்கெலிய யுவதியை அடையாளம் காட்டிய சமூக வலைத்தளங்கள்

வௌிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்ற நிலையில், அங்கு உயிரிழந்த மஸ்கெலிய யுவதி ஒருவர், சமூக வலைத்தளங்களின் உதவியுடன் இனங்காணப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஹட்டன் - மஸ்கெலியா - ஸ்டெர்ஸ்பி சூரியகந்த (லேட்புரூக்) தோட்டத்தில் இருந்து 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம், பழனியாண்டி கற்பகவள்ளி என்ற பெண் சவுதி அரேபியாவுக்கு வேலைக்காக சென்றார். மூன்று பிள்ளைகளின்...

ஓமானில் இலங்கை பெண்கள் விற்பனை! விசாரணை நடாத்துமாறு இலங்கை அரசாங்கம் உத்தரவு

ஒமானில் இலங்கை பணிப்பெண்கள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகின்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு இலங்கை அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். இலங்கை பணிப்பெண்கள் எந்த வகையில் சட்டவிரோதமாக ஒமானுக்குள் பிரவேசிக்கின்றார்கள் என்பது தொடர்பில் விசாரணைகளை நடாத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணைகளுக்காக ஒமானிலுள்ள...
Loading posts...

All posts loaded

No more posts