பசிலுக்கு எதிரான திவிநெகும குற்றச்சாட்டுக்கள் வாபஸ்

திவிநெகும முறைகேடுகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை சட்டமா அதிபர் மீளப்பெற்றுள்ளார். முன்வைக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் சில கோளாறுகள் காணப்படுவதால், மீண்டும் இது குறித்து வழக்குத் தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டார். ஆகவே குறித்த குற்றப் பத்திரிகையை மீளப்...

சாரதிகளுக்கான தண்டனை, அபராதம் குறித்து புதிய சுற்றறிக்கை

வாகன சாரதிகள் இழைக்கும் குற்றங்கள் தொடர்பில் வழங்கப்படும் தண்டனைகள் மற்றும் அபராதம் குறித்து புதிய சுற்றறிக்கையை வௌியிட, எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பிலான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் வாகன சாரதிகள் இழைக்கும் குற்றங்கள் தொடர்பில் வழங்கப்படும் தண்டனைகள் மற்றும் அபராதத்...
Ad Widget

கொக்கிராவ மாமினியாவ விகாரை மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்

அனுராதபுரம் கொக்கிராவ மாமினியாவ விகாரை மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றதாகவும், தாக்குதல் நடாத்தப்பட்டபோது குறித்த விகாரையில் எவருமே இருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலாளிகள் விகாரைக்குள் சென்றும் அங்கிருந்த சிலைகள் அனைத்தையும் உடைத்துள்ளதாக கொக்கிராவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

13 ஆவது திருத்தச் சட்டம் தீர்வாகாது: சுவாமிநாதனுடன் முரண்பட்டார் சம்பந்தன்

13ஆவது திருத்தச் சட்டத்தை முறையாக அமுல்படுத்தினால் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கலாம் என்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் கருத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முரண்பட்டுள்ளார். கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் கணேசலிங்கத்தின் நினைவுதினம், கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது, 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினால் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கலாமென அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார்....

13ஆவது திருத்தத்தை சரியாக அமுல்படுத்தினால் அரசியல் தீர்வு கிடைக்கும்: சுவாமிநாதன்

13ஆவது திருத்தச் சட்டத்தை முறையாக அமுல்படுத்தினால் தமிழ் மக்களின் முக்கிய அரசியல் கருத்துக்களை அது விமர்சனம் செய்யுமென குறிப்பிட்ட அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், அதனை செய்யத் தவறியுள்ளோம் என்றும் குறித்த திருத்தத்தை சரியாக அமுல்படுத்தினால் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை கொடுக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...

அரசகரும மொழியாக தமிழையும் இணைக்க மஹிந்த கடும் எதிர்ப்பு

தமிழ் மற்றும் சிங்கள மொழி ஆகிய இரண்டையும் அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ மொழியாக மாற்றுவது தொடர்பில் அரசியல் நிர்ணய சபை யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது. குறித்த யோசனைக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிக்கை ஒன்றை நேற்றய தினம் வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், வட கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தமையினால் கட ந்த...

முக்கிய பிரமுகர்களுக்கும் சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியர்களுக்குமிடையில் இரகசிய தொடர்பு

சிறையில் அடைக்கப்படும் முக்கிய பிரமுகர்களுடன் சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியர்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்தும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகசுகாதார போஷாக்கு சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்படும் முக்கிய பிரமுகர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க மருந்து கூட்டுத்தாபனத்தின்...

நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்தால் 25000 அபராதம்!

நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருக்கும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 25,000 ரூபாய் வரை அதிகரிக்க அவதானம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மகிந்த அணிமீது கண்ணீர் புகைத் தாக்குதல்!

சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் இன்று காலை நாடாளுமன்றத்திற்கருகில் உள்ளூராட்சித் தேர்தலை விரைவாக நடாத்துமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொல்டுவ சந்தியிலிருந்து நாடாளுமன்றத்திற்கான வீதி மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் நாடாளுமன்றத்திற்கு அருகில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்னிலையில் நிலைமையை...

நேற்றைய ஆர்ப்பாட்டத்தால் அரசுக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

தனியார் பஸ் ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை விதிகளை மீறுவோறுக்கு எதிரான அபராதத் தொகையை அதிகரித்தமையை கண்டித்து நேற்றையதினம் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுத்தனர். மறுபுறம் சேவையில் ஈடுபட்டிருந்த அரச பேருந்துகளினால் பெறப்படும் வருமானம் நேற்றையதினம் அதிகரித்துள்ளதாகவும், இந்த அதிகரிப்பு நூற்றுக்கு 66 வீதம்...

25000 ரூபா அபராதத் தொகையில் மாற்றம்

சாலை விதிகளை மீறுவோருக்கு எதிரான 25000 ரூபாய் அபராதத் தொகையில் இரு திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று காலை தனியார் பஸ் சங்கங்கள் சில ஜனாதிபதியுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அதற்கமைய இடது பக்கத்தால் முந்திச் செல்வது மற்றும் வேகம்...

பொலிஸ்மாஅதிபருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவர் சாகல ரத்நாயக்கவே!

பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவர் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவே என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று கூட்டு எதிர்க்கட்சி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், சபாநாயகர் கரு ஜயசூரியவும்,...

வடக்கில் மதுபாவனை அதிகரிப்பு : தனி நபரின் நுகர்வு 5.7 லீற்றர்

வடக்கில் மதுபாவனை 400 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.மேலும் 2015 ஆம் ஆண்டு தனி நபரின் மதுபான நுகர்வு 5.7 லீற்றர் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றம் நேற்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது வாய்மூல வினாவுக்கான நேரத்தின் போது ஜே.வி.பி எம்.பி. பிமல் ரத்நாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே...

அமெரிக்க உப ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதியிற்கு தீடீர் தொலைபேசி அழைப்பு

அமெரிக்க உப ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மயிக் பென்ஸ் மற்றும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும், இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட எதிர்கால பயணத்திற்கு ஒத்துழைப்பை வழங்கவும் அமெரிக்கா தயாராகவுள்ளதாக, அமெரிக்காவின்...

டீசல் விலை அதிகரிப்பு!

இறக்குமதி தீர்வை அதிகரிப்பின் காரணமாக, லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் இரண்டு எரிதிரவங்களுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளனர்.இதன்படி எக்ட்ரா ப்ரீமியம் யூரோ 3 மற்றும் எக்ட்ரா மைல் ஆகிய இரண்டு வகையான டீசல்களின் விலைகளும் தலா இரண்டு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 'எக்ற்ட்ரா ப்ரீமியம் யூரோ 3' டீசலின் ஒரு லீற்றருக்கான விலை 123 ரூபாவாகவும், 'எக்ஸ்ட்ரா மைல்'...

இருதய சத்திரசிகிச்சையின் போது நால்வர் உயிரிழப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நான்கு நோயாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தேடிப்பார்ப்பதற்கு சுகாதார அமைச்சினால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவினால் கடந்த 28ம் திகதி இருதய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஆறு நோயாளர்களில் நான்கு நோயாளர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. அதன்படி இது தொடர்பில் தேடிப்பார்ப்பதற்காக...

ரயில்வே சங்கமும் டிசம்பர் 01 வேலைநிறுத்தம்?

நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே சங்கமும் எதிர்வரும் 01 ஆம் திகதி நள்ளிரவு முதல் 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. ரயில்வே திணைக்களத்துக்குச் சொந்தமான காணியை தனியாருக்கு வழங்க காணி வங்கியொன்று அமைத்தல், முறையற்ற முறையில் ரயில்வே துறையில் நியமனம் வழங்கல், ரயில்வே திணைக்களத்துக்கு அதிகாரியொருவரை நியமிக்கும் அரசாங்கத்தின் திட்டம்...

பிடல்காஸ்ட்ரோவின் மறைவை முன்னிட்டு ஜனாதிபதி தூதரகத்திற்கு விஐயம்

கியுபா நாட்டின் ஐனாதிபதி பிடல்காஸ்ட்ரோவின் மறைவையொட்டி கொழும்பிலுள்ள கியூபா தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள விஷேட நினைவுப்புத்தகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டார்.

கஸ்ட்ரோவின் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் அனுதாபம்

இருபதாம் நூற்றாண்டில் உருவான புரட்சியாளரான கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் கஸ்ட்ரோவின் மறைவின் மூலம் இலங்கை நெருங்கிய நண்பரொருவரை இழந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையில் நீண்டகாலமாக நட்புறவு நிலவிவருகிறது. அது அணிசேரா இயக்கத்தின் பெறுமதி மற்றும் மனித அபிவிருத்திக்காக இருநாடுகளும் காட்டும் பொதுவான அர்ப்பணிப்பின் மூலம் உறுதிப்படுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்....

சிங்கள மாணவனை தாக்கி கையில் ‘தமிழ்” என எழுதிய நபர்கள்

தலவாக்கலையில் உள்ள பிரபல சிங்கள பாடசாலை ஒன்றின் மாணவனை இந்தெரியாத நபர்கள் தாக்கி அம் மாணவனின் கையில் 'தமிழ்' என ஆங்கில எழுத்துக்களால் பிளேட் ஒன்றினால் கீறியுள்ளனர். தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த தரம் பத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவனே இவ்வாறு தாக்குதலுக்குள்ளான நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவன் பாடசாலை முடிவடைந்து வீட்டுக்கு...
Loading posts...

All posts loaded

No more posts