- Wednesday
- January 15th, 2025
தற்போதைய அரசாங்கமும், அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில், தென் மாகாணத்தை சேர்ந்த பாடசாலை அதிபர்கள், எதிர்வரும் 22ஆம் திகதியன்று, இவ்வாறான பயிற்சிக்கு அழைக்கப்பட்டுள்ளன என்று ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது. இதேவேளை, கடந்த அரசாங்கத்தின் போது, அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டதுடன் அவர் கேர்ணல் தரத்துக்கு தரமுயர்த்தப்பட்டனர். இந்தச் செயற்பாட்டுக்கு ஐக்கிய...
இலங்கையின் பொதுப்போக்குவரத்தில் 90 வீதமான பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்கென சிறுவர் விவகார அமைச்சு, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, பிரதமர் அலுவலகம் மற்றும் இலங்கை பொலிஸ் என்பவற்றுடன் இணைந்து UNFPA அமைப்பு “அவளின் பயணம் பாதுகாப்பானதா?” என்ற தொனிப்பொருளிலான பொதுமக்களை அறிவூட்டும் ஒரு பிரசார நடவடிக்கையை...
பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ரயில் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இக்குறித்த வேலை நிறுத்தமானது, எதிர்வரும் 7 ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் 48 மணி நேரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் கொழும்பு கல்கிசை நீதிமன்றில் இருந்து சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி இரண்டும் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன. இதன் காரணமாக, சுமார் மூன்று மணிநேரம்...
சிறீலங்காவின் 45ஆவது பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரசாத் டெப் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இலங்கையின் 44ஆவது பிரதம நீதியரசரான கே.ஸ்ரீபவன் ஓய்வுபெற்றதையடுத்து, அரசியலமைப்பு சபையால் ஏகமனதான பிரியசாத் டெப் நியமிக்கப்பட்டார். புதிய பிரதம நீதியரசருக்கு ஜனாததிபதி மைத்திரிபால சிறிசேன...
சில பொலிஸ் அதிகாரிகளின் கவனயீனக்குறைவினால், முழு பொலிஸ் சேவைக்கும் அவப்பெயர் உண்டாகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிராண்பாஸ் பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பொரளையிலிருந்து தனது முச்சக்கரவண்டியை செலுத்தியுள்ளார். இதன் போது குறித்த சாரதி வீதி விதிமுறைகளை மீறியதால் நீதிமன்றத்தில் பெப்ரவரி 30 ஆம் திகதி ஆஜராகுமாறு போக்குவரத்து பொலிஸார் உத்தரவு பத்திரம்...
சைட்டம் நிறுவனம் மற்றும் நெவில் பிரணாந்து வைத்தியசாலை என்பவற்றின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக பதவி வகித்த சமீர சேனாரத்னவை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்துள்ளதாக சைட்டம் அறிவித்துள்ளது. சமீர சேனாரத்னவின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டும், அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கு வசதியாகவும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சைட்டம் முகாமைத்துவக் குழு...
முன்னாள் புலி உறுப்பினர்கள் தம்மை கொலை செய்ய முயற்சிப்பதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்ட முன்னாள்புலி உறுப்பினர்கள் சிலர் என்னைக் கொலை செய்ய முயற்சிக்கின்றனர். அண்மையில் இவ்வாறு முயற்சி மேற்கொண்ட புலி...
மாலபே SAITM தனியார் கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். பொலிஸார் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றின் மூலம் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. SAITM தனியார் கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக போலியாக காட்டுவதற்கே மேற்படி துப்பாக்கி சூட்டு சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக பொலிஸார்...
களுத்துறை வடக்கு சிறைச்சாலை பஸ்ஸின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது. இதற்கமைய இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த துப்பாக்கிப் பிரயோகத்தால் காயமடைந்த ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சந்தேகநபர் ஒருவரும் நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...
தற்போது நிலவுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் மின் உற்பத்தி வரையறுக்கப்பட்டிருப்பதாக இலங்கை மின்சார சபை கூறியுள்ளது. மின் உற்பத்தி வரையறுக்கப்பட்டாலும் மின் வெட்டு இடம்பெறாது என்று மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன கூறினார்.
சட்டவிரோதமான முறையில் நியூசிலாந்து செல்ல முயன்ற 18பேர் சிறீலங்கா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நீர்கொழும்பில் வைத்து இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 15 பேர் தமிழர்கள் எனவும், அவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் அதுல்கேஹசாப் தலைமையிலான அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சிலர் கதிர்காமத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டனர். இந்த வழிபாடுகளுக்கான நேற்று இவர்கள் கதிர்காமம் புனித பூமிக்கு வருகை தந்திருந்தனர். அமெரிக்க தூதுவர்களுடன் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சிலரும் வழிபாடுகளில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் வனவிலங்குதுறை காமினி ஜயவிக்கிரம பெரேரா வெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சர் ஹர்ச டி...
சீகிரியா மலைக்குன்றிலுள்ள ராஜமாளிகைக்கு செல்வதற்கான குன்றின் அடிவாரத்திலுள்ள வாயிலில் இருக்கும் இரு பாத அடையாளங்களும் சிங்கத்தின் பாதங்கள் அல்ல எனவும், அவை புலியின் பாதங்கள் என்றும், தம்புளை - ரங்கிரி விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் இத்தாமலுவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். இலங்கை வாழ் மக்களை மட்டுமன்றி, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் ஏமாற்றி, குன்றின் அடிவாரத்திலிருப்பது...
விமானப்படையினர் வசமுள்ள தமது நிலங்களை மீட்பதற்கு இன்றுடன் 24ஆவது நாளாக தமது போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கும் கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக நேற்று கொழும்பில் கண்டனப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். மக்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட அவர்களின் பூர்வீகக் காணிகளை அவர்களிடம் மீண்டும்...
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளைத் தடுப்பது குறித்து விஷேட அவதானத்துடன் செயற்படுமாறும், இதற்காக பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகளுடன் இணைந்து செயற்பாட்டு வேலைத் திட்டங்களை தயாரிக்குமாறும் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலம் குறித்து அரசாங்கத்திற்கு பொறுப்புள்ளதாகவும், அந்த பொறுப்பை எந்தவொரு தயக்கமும் இன்றி நிறைவேற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....
தனியார் வீடொன்றில் சித்திரவதை முகாம் ஒன்றை நடாத்தி வந்ததாக குற்றம்சாட்டப்படும் பேராதெனிய பல்கலைக்கழக விவசாய பீட 15 மாணவர்களுக்கு இன்று முதல் (22 ஆம் திகதி) விரிவுரைகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழ மாணவர் ஒழுக்காற்றுக் குழுப் பொறுப்பாளர் கலாநிதி ஹிடிநாயக்க இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். பிரதான விசாரணை முடியும் வரையில் இவர்களது விரிவுரைத் தடை...
எதிர்வரும் 24ம் திகதி முதல் நாட்டின் தென்பகுதியில் மழை அதிகரிக்க கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு சப்ரகமுவ மத்திய மற்றும் தென் மாகாணங்களில் காலைவேளையில் பனிமூட்டமான காலநிலை காணப்படும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் கரையோரப்பிரதேசங்களிலும் நாட்டின் பெரும்பாலான இடங்களிலும் சீரான காலநிலை நிலவும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்துக்குள் அரசியல் யாப்பு கொண்டுவரப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். இது தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் அமையவேண்டும் என்பதே தமிழ்மக்களின் எதிர்பார்ப்பாகும் என்று முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். அனைத்து சமயத் தலைவர்களின் தேசிய மாநாடு என்று தொனிப்பொருளில் தேசிய...
ஒரு மருத்துவராக இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யாது பகிரங்கமாக மருத்துவர் போன்று செயற்படும் சைட்டம் மருத்துவர் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அகில இலங்கை மருத்துவ அதிகாரிகளின் சங்கம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது. தெற்காசியாவின் தொழினுட்ப மற்றும் மருத்துவ நிறுவனத்தின் (SAITM) தலைமை நிறைவேற்று அதிகாரியாக செயற்படும் அதன் மருத்துவ பீடத்தின் பணிப்பாளர்...
Loading posts...
All posts loaded
No more posts