- Wednesday
- January 15th, 2025
வெள்ளவாய, கொடவெஹரகள பகுதியில் வைத்து புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் புலி உறுப்பினர் உட்பட மூவர் வெள்ளவாய பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறித்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு சென்ற வேளையிலேயே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேகநபர் முல்லை தீவு பகுதியை சேர்ந்தவர் எனவும் ஏனையவர்கள் கொடவெஹரகள பகுதியை சேர்ந்தவர்கள்...
கொழும்பில் உள்ள தாமரைத் தடாக வளாகத்தில், சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்துகொண்ட முன்னாள் புலி உறுப்பினரின் சகோதரரை, எதிர்வரும் 17ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வொன்றில் சுத்திகரிப்பு வேலையைச் செய்துகொண்டு மிகவும் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய முன்னாள் புலி உறுப்பினரின் சகோதரரே இவ்வாறு விளக்கமறியலில்...
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2009 ஆம் ஆண்டு வெள்ளை வானில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றில் குற்றப்புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது. குறித்த வழக்கு ஒரு மாதத்திற்கு பின்னர் நேற்று (திங்கட்கிழமை) கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குற்றப்புலனாய்வு...
நேற்று கிரியெல்ல - பஹலகம பகுதியில் தனது மனைவியை அசிட் மற்றும் கத்தியைக் கொண்டு தாக்க முற்பட்டவர் உயிரிழந்துள்ளார். மனைவியைத் தாக்க முற்பட்ட அவரை அயல் வீட்டார் இணைந்து தாக்கியதிலேயே அவர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் சம்பவத்தில் தம்புஎவன - கஹவத்தை பகுதியைச் சேர்ந்த 24 வயதான மகேஷ் திலகரத்ன என்பவரே உயிரிழந்துள்ளார். சடலம் கிரிஎல்ல...
களுத்துறை , அளுத்கம பிரதேச பாடசாலை ஒன்றின் மாணவர்கள் இருவருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளமை தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.இருவரும் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவினரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாணவர்கள் இருவருடனும் நெருங்கிய தொடர்பைப் பேணியதாக கருதப்படும் அழகுக்கலை நிபுணர் மற்றும் அவரிடம் மாணவர்களை அழைத்துச் சென்ற நபரொருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மாணவர்களின்...
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தேசிய ரூபவாஹினியில் விளம்பரம் செய்து அதற்காக 1,652 இலட்சம் ரூபாவை செலுத்தாமை சம்பந்தமாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ (வியாழக்கிழமை) நாளைமறுதினம் பாரிய ஊழல் மோசடி விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். சுயாதீனத் தொலைக்காட்சி சேவையில் விளம்பரம் செய்து அதற்கு நஷ்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் விசாரணை...
போர்க் குற்றங்களில் இலங்கை இராணுவம் ஈடுபடவில்லை எனும் வாக்குமூலங்கள் அடங்கிய 200 பக்கங்களைக் கொண்ட அறிக்கை, இன்று (திங்கட்கிழமை) முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு தும்முல்லையில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் வைத்து மேற்படி அறிக்கை கையளிக்கப்படவுள்ளது. லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாநயக்க, ரியல் அட்மிரல் எச்.ஆர். அமரவீர, ரியல் அட்மிரல்...
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மான விவகாரத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தின் பின்னர் கூடிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களால் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் மேற்படி கருத்து கூறப்பட்டிருந்தது. மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கான கால அவகாசம் வழங்குவது தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்களில்...
கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து கலைப்பீடத்தைச் சேர்ந்த சில மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கலைப்பீடத்தைச் சேர்ந்த இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்கள் சிலருக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பீடாதிபதி கலாநிதி அத்துல ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆனந்த ராஜகருணா மாவத்தையில் உள்ள மாணவர்...
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை அமெரிக்காவின் ரி.பி.ஜி. விமான நிறுவனத்துக்கு விற்பனை செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தகவலை பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரத்ன நேற்று தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். கடந்த 1992ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவை...
நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெற்கு சப்ரகமுவ மேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு அதிக வாய்ப்புள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் கடற்பிரதேசங்களை அண்டிய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய...
இலங்கையின் சக்திவள துறைகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு தேவையான தொழிநுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறும் இந்துசமுத்திர பிராந்திய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரி, நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) அவுஸ்ரேலிய பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது ஆஸி.பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையுடன்...
அமிதிரிகல எலுவந்தெனிய பிரதேசத்தில் அதிக வேகத்தில் உந்துருளியை செலுத்திய இளைஞரொருவர் பேரூந்து ஒன்றில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிந்திருந்தார்.நேற்று இடம்பெற்ற குறித்த விபத்து அவரது நண்பரால் அவ்விடத்தில் இருந்து கைப்பேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் யக்கல , இம்புல்கொட பிரதேசத்தை சேர்ந்த லஹிரு ஷெஹான் என்ற 19 வயது இளைஞராவார்.எலுவந்தெனிய நடுவத்த பிரதேசத்தில் பிரதேசத்தில் நேற்றைய...
தனியார் துறை ஊழியருக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம் 2500 ரூபாவை இதுவரை வழங்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தொழில்திணைக்கள ஆணையாளர் நாயகம் திருமதி சாந்தனி அமரதுங்க தெரிவித்துள்ளார். இந்த சம்பள அதிகரிப்பு தொகையை சில நிறுவனங்கள் வழங்காதமை தொடர்பாகவே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இது தொழிலாளர் உரிமையை மீறும் பாரிய குற்றமாகும்...
நாட்டின் பொருளாதாரத்தில் கூடுதலான சுமையை ஏற்பவர்கள் பெண்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விடுத்துள்ள இந்த வாழ்த்துச்செய்தியில் ,
தெரணியகல, மாகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்டுள்ள ஏழுவயதான பெண் பிள்ளையும், 45 வயதான மற்றுமொரு நபரும் படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு (06) இடம்பெற்றுள்ளது. அவர்களின் வீட்டுக்கு நேற்றிரவு வருகைதந்த இனந்தெரியாத நபரே இக்கொலைகளை புரிந்திருக்கலாம் என்று தகவல் கிடைத்துள்ளது. இதேவேளை, தாக்குதல்களுக்கு உள்ளான பெண்பிள்ளையின் தாய், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர...
வட மாகாணத்தில் ஆயுதப் படையினர் தங்கியிருக்கும் தனியாருக்கு சொந்தமான காணிகளை உரியவர்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
மழை பெய்த போதிலும் மின்னுற்பத்திக்கான நீரேந்து பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி இடம்பெறவில்லை என்று மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்திலிருந்து எதிர்வரும் 6 மாத காலப்பகுதிக்கான மின் உற்பத்திக்கு மேலதிகமாக 51 பில்லியன் ரூபா செலவிட வேண்டி ஏற்படுமென்று மின்சார சபை கணக்கிட்டுள்ளது. இந்த செலவுத் தொகை பாவனையாளர்கள் மீது சுமத்தப்பட...
தனியார் மருத்துவகல்லூரி மாணவர்களுக்கு செயற்பாட்டுப் பயிற்சி வழங்கும் சைட்டம் போதனா வைத்தியசாலை, விரைவில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டி தலதா மாளிகைக்குக் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்து கலந்துரையாடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். எதிர்வரும் 9ஆம் திகதி ஜனாதிபதி...
ஆபத்தான தொழிற்துறைகளில் பணியாற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு ஆயுள் காப்புறுதியை கட்டாயமாக்கும் வகையிலான சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஊழியர் ஒருவர் மரணமடையும் போது செலுத்தப்படும் நட்டஈட்டுத் தொகையை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கும் தொழிற்சாலை தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன என தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களில் கைத்தொழிற்சாலைகளிலும் வேலைத்தளங்களிலும்...
Loading posts...
All posts loaded
No more posts