பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது!

பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைகள் காரணமாக நாட்டில் எரிபொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட ஏனைய தொழிற்சங்கங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கையினால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகளுக்கு எந்தவொரு இடைஞ்சலும் ஏற்பட மாட்டாது. இதனை முகம்கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது. இன்று நடைபெறும் பணிப்பகிஷ்கரிப்பு...

மைத்திரி மஹிந்த இரகசிய சந்திப்பு?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் நேற்றிரவு இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு கறுவாத் தோட்டத்தில் உள்ள விடுதி ஒன்றிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில், அமைச்சர்களான மஹிந்த அமரவீர, சந்திம வீரகொடி, லசந்த அழகியவன்ன மற்றும் டிலான் பெரேரா ஆகியோர்...
Ad Widget

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் உடன்பாடு எட்டப்படவில்லை: பிரதமர்

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வகையிலான பாலமொன்றை அமைப்பது குறித்து நீண்டகாலமாக பேசப்பட்டு வரும் நிலையில், அண்மைய இந்திய விஜயத்தின்போது இதுகுறித்து எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அண்மைய இந்திய விஜயத்தின்...

மஹிந்தவின் கூட்டத்தில் பங்கேற்ற இருவர் மரணம்!

கூட்டு எதிர்க்கட்சியினரின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்ட இருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலிமுகத்திடலில திங்கட்கிழமை இடம்பெற்ற மேதின கூட்டத்தில் பங்கேற்ற இருவரே அதிக வெப்பம் காரணமாக மரணமடைந்துள்ளதாக கொழும்பு தேசியவைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக கடும் வரட்சிநிலை ஏற்பட்டுள்ளதுடன் பல நோய்களும் பரவிவருவதால் மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

தமிழ் அரசியல் கட்சிகள் இனவாதம் பேசுகின்றன!: கருணா

தமிழ் அரசியல் கட்சிகள் இனவாதம் பேசி நாட்டின் அமைதியை குழப்ப முயற்சிப்பதாகவும் அதனை உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கூட்டு எதிரணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழ்...

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை

நிலவுகின்ற வறட்சியான காலைநிலை காரணமாக மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிவதாக இலங்கை மின்சார சபை கூறியுள்ளது. அதன்படி நாளொன்றுக்கான மின்சார கேள்வி 44 கிகாவோல்ட் மணித்தியாலங்களுக்கும் அதிகமாகும் என்று மின்சார சபை கூறியுள்ளது. இதன்காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளர் சுலக்‌ஷன ஜயவர்தன பொதுமக்களிடம் வேண்டுகோள்...

தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணும் விடயத்தில் அரசாங்கம் யாருக்கும் அடிபணியாது: மங்கள

தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணும் விடயத்தில் அரசாங்கம் யாருக்குமே அடிபணியப்போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வெளிநாட்டுத் தலையீட்டைத் தமிழ்த் தலைமைகள் சிலர் கோரி வருகின்றபோதும் அவ்வாறான தேவை இல்லாமல்...

வேலையில்லா பட்டதாரிகளுக்கு எதிராக சட்டத்தரணிகள் போராட்டம்?

நீதிமன்றக் கட்டளையை அவமதித்தவர்களை, உடனடியாக கைதுசெய்ய வேண்டுமெனக் கோரி, சட்டத்தரணிகள் பலர், திருகோணமலை நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக, நேற்று காலை கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையில்லாப் பட்டதாரிகள், திருகோணமலை நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த கட்டளை அடங்கிய ஆவணத்தை, பொலிஸாரிடமிருந்து பெற்றுக்கொண்டதுடன், அதனைக் கிழித்து, காலால் மிதித்தமையை கண்டித்தே, இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு...

மே தினத்தில் ட்ரான்பேரன்ஸி நிறுவனம் விடுக்கும் வேண்டுகோள்

மே தினத்தைக் கொண்டாடும் சகல அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய அமைப்புக்களையும் பொதுச் சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதை தவிரத்துகொள்ளுமாறு ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பாரிய அளவிலான பேரூந்துகள் மற்றும் புகையிரதம் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் நாடளாவிய ரீதியில் மே தின ஊர்வலத்திற்கென ஆதரவாளர்களை குவிப்பதற்காக முற்கூட்டியே ஒதுக்கப்பட்டுள்ளதாக...

மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் சம்பந்தன் பிரேரணை!

கொலன்னாவ – மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) சபை ஒத்திவைப்பு வேளை விவாதமொன்று இடம்பெறவுள்ளது. மீதொட்டமுல்ல பாதிப்பு மற்றும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்தோருக்கு முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனால் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு, அது தொடர்பான விவாதம் முன்னெடுக்கப்படவுள்ளது. இப் பாரிய...

ஜனாதிபதி சட்டத்தரணியானார் எம்.ஏ.சுமந்திரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கபட்டுள்ளார். சட்டத்தரணிகளான விவேகாநந்தன் புவிதரன், எம். நிசாம் காரியப்பர் உள்ளிட்ட சிரேஷ்ட சட்டத்தரணிகள் 25 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 33(2)(உ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்துக்கமைய சட்டத்தரணி தொழில்வாண்மையில்...

முப்படைகளின் உயர்பொறுப்பை ஏற்க பொன்சேகாவுக்கு அழைப்பு

நாட்டின் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படைகளில் அதியுட்ச பொறுப்பை ஏற்பதற்கு முன்னாள் இராணுவ தளபதியும் பிரதேச அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அதற்கான அதிகாரங்களுடன் உரிய பதவியை வழங்கினால் தனக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு சரத் பொன்சேகா சம்மதம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன...

சிவனொளிபாதமலையில் பதற்றம்: புத்தர் சிலையை வைக்க சிங்ஹலே முயற்சி

சிங்ஹலே அமைப்பானது, சிவனொளிபாதமலையில், புத்தர் சிலை வைப்பதற்கு எடுத்த முயற்சி, நல்லதண்ணிப் பொலிஸாரின் தலையீட்டையடுத்து, தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் நேற்று, பதற்றமான சூழல் ஏற்பட்டதுடன், நல்லதண்ணி நகரிலிருந்து சினொளிபாத மலை வீதிவரை, பொலிஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. நேற்று அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட சிங்ஹலே அமைப்பின் யாத்திரிகர்கள், சிவனொளிபாத மலையில், புத்தர் சிலையை வைப்பதற்கு முயற்சிகளை...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு வருடத்தில் மூன்று தடவைகளுக்கு மேல் வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபடக் கூடாது : பிரதமர்

ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு வருடத்தில் மூன்று தடவைகளுக்கு மேல் வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபடக் கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தல் விடுத்துள்ளார். கட்சியைச் சேர்ந்த யாராவது வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபடுவதாக இருந்தால், தன்னிடம் எழுத்து மூலம் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என கட்சித்தலைமையகத்தில் இடம்பெற்ற ஐ.தே.கட்சியின்...

கனியவள போராட்டம் நிறைவு!

கனியவள கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க உறுப்பினர்கள் மேற்கொண்டு வந்த பணிநிறுத்தப் போராட்டத்தை நிறுத்துவதற்கு தொழிற்சங்க ஓன்றியம் தீர்மானித்துள்ளது. நேற்று (24) மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, துறைசார் அமைச்சர் உள்ளிட்டவர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையில், தொழிற்சங்க போராட்டத்தை கைவிடுவதற்கு அவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனியவள மற்றும் பெற்றோலிய வாயுத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி இதனைத் தெரிவித்தார். திருகோணமலையில்...

தேசிய வைத்தியசாலை மக்களுக்கு அவசர வேண்டுகோள்

தற்பொழுது நாட்டில் நிலவும் அதிக வெப்பம் கொண்ட காலநிலைமைக்கு ஈடுகொடுப்பதற்கு ஒவ்வொருவரும் அதிகளவில் நீர் பருகுமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் சமிந்தி சமரகோன் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிக உஷ்ணத்தின் காரணமாக உடம்பின் செயற்பாடுகள் பாரிய தாக்கத்துக்கு உள்ளாகின்றன. இதனால், சளியுடன் கூடிய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன....

வெப்பமான காலநிலை 2ம் திகதிவரை தொடரும்!

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தொவித்துள்ளது. இதுவேளை நாட்டிற்கு மேலாக உலர்காற்று வீசுவதால் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

பெற்றோலிய வள தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்

இலங்கை பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் சில வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. திருகோணமலை துறைமுகத்திலுள்ள எரிபொருள் தாங்கியை இந்தியாவுக்கு வழங்க எதிர்ப்புத் தெரிவித்தல் உட்பட மூன்று கோரிக்கைகளை முன்னிருத்தி, இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக, இவர்கள் முன்னரே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, போராட்டத்தை அடுத்து, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் வாகன...

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகள் வழங்கிவைப்பு

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் 30 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வீட்டுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களை கொள்வனவு செய்ய 30...

மீதொட்டமுல்ல அனர்த்தம்; குடும்பம் ஒன்றுக்கு மாதாந்தம் 50,000 ரூபா!

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்கு மாதாந்தம் 50,000 ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மீதொட்டமுல்ல உயர் அச்சுறுத்தல் வலயத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்கே மாதாந்தம் 50,000 ரூபா படி எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. மீதொட்டமுல்ல சம்பவம் தொடர்பில் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
Loading posts...

All posts loaded

No more posts