இந்திய பிரதமர் இலங்கைக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்துகொண்டு நாடு திரும்பினார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை நிறைவு செய்து நேற்று மாலை 6.30 மணியளவில் நாடு திரும்பினார். நேற்று கொழும்பில் ஆரம்பமான ஐக்கியநாடுகள் வெசாக் வைபத்தில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் நேற்று முன்தினம் மாலை கொழும்பை வந்தடைந்தார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்...

மோடியின் உலங்கு வானூர்தியால் காயமடைந்த பெண்

ஹட்டன்- நோர்வூட் விளையாட்டரங்கு அருகில் மதில்சுவர் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று (12) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி பயணித்த உலங்கு வானூர்தி நோர்வூட் மைதானத்தில் தரையிறங்கிய போது ஏற்பட்ட அதிக காற்று காரணமாக குறித்த மதில்சுவர் உடைந்து வீழ்ந்துள்ளது. காயமடைந்த பெண்மணி டிக்கோயா...
Ad Widget

சுகாதார அமைச்சர் சய்டமை பாதுகாப்பதில் உள்ள அக்கறையை டெங்கு ஒழிப்பில் காட்டவில்லை!

சய்டம் நிறுவனத்தை பாதுகாப்பதற்கு சுகாதார அமைச்சர் மேற்கொள்ளும் முயற்சிகளை டெங்கு ஒழிக்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தாமை நாட்டினுள் அழிவு நிலையை தோற்றியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தொடர்ந்து கருத்து வௌியிட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், இலங்கை மருத்துவ சபையின் ஒழுங்குமுறைக்கு அடிபணியாமல் செயற்படும் சய்டம் நிறுவனத்தை...

இரண்டு வருடங்களில் காணி மற்றும் வீடு பிரச்சினைகள் நிவர்த்திக்கப்படும் : ரணில்

எதிர்வரும் இரண்டு வருடங்களில் மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு பிரச்சினைகள் பெருமளவில் நிவர்த்தி செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்தார் 7 பேர்ச் காணி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் அம்மக்களது வீட்டு பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். பாரத பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் நிகழ்வு நேற்று (12)...

வாரணாசி-கொழும்பு இடையிலான போக்குவரத்து ஓகஸ்டில் ஆரம்பிக்கப்படும்: பிரதமர் மோடி

இந்தியாவின் வாரணாசிக்கும் கொழும்பிற்கும் இடையிலான போக்குவரத்து எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொழும்பு – பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஐ.நா.வின் 14ஆவது சர்வதேச வெசாக் தின நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தமது உரையில் மேலும் தெரிவிக்கையில்-...

மோடியைச் சந்தித்தார் மகிந்த!

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, மகிந்த ராஜபக்ச நேற்று பின்னிரவில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இறுக்கமான நிகழ்ச்சி நிரலுடன் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்காவில் குறிப்பிட்ட சில தரப்பினரை மாத்திரம் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். அந்த சந்திப்பு பட்டியலில் மகிந்த ராஜபக்சவின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை. இந்த நிலையில்,...

இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி விசேட இராப்போசன விருந்து! சம்பந்தன் விக்னேஸ்வரன் பங்கேற்பு!

இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு நேற்றய தினம் (11) மாலை இலங்கைக்கு வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நேற்று இரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட இராப்போசன விருந்து...

புனர்­வாழ்­வ­ளிக்­கப்­ப­டாமல் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலி­க­ளினால் எனக்கு உயி­ரா­பத்து : மஹிந்த

தற்­போதைய அர­சாங்­கத்­தினால் விடு­விக்­கப்­பட்ட புனர்­வாழ்­வ­ளிக்­கப்­படாத விடு­தலை புலி­க­ளி­னா­லேயே தனது உயி­ருக்கு ஆபத்து ஏற்­படும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். அதே­நேரம் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­காவின் பாதுகாப்புச் செயற்பாடுகளை அவரின் வீட்டிற்கே சென்று கோத்தபாய ராஜபக் ஷ சீர் செய்து கொடுத்தாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவின்...

எச்.ஐ.வி. தொடர்பான செய்தி வதந்தி என்கிறார் ஜயசுந்தர பண்டார!

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு, இலங்கையின் சில பகுதிகளில் எச்.ஐ.வி. நோயை ஊசி மூலம் பரப்பி வருவதாக வதந்திகள் வெளியாகியுள்ளதாகவும் இது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர், சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு நேற்று (திங்கட்கிழமை) வழங்கிய விஷேட செவ்வியின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

இலங்கையில் 100 பேருக்கு 135 தொலைபேசிகள்!

இலங்கை வாழும் ஒவ்வொரு 100 பேருக்கும் 135.7 தொலைபேசிகள் பயன்பாட்டில் உள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, ஒவ்வொரு 100 பேருக்கும் 12 தரைவழித் தொலைபேசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. கைபேசிகளையும் சேர்த்துக் கொள்ளும் போது, ஒவ்வொரு 100 பேருக்கு 135.7 தொலைபேசிகள் இருக்கின்றன. அத்துடன் சிறிலங்காவின் சனத்தொகையில் 23.2 வீதமானோர் இணையத்தளத்தைப்...

உலகில் முதலாவது நவீன லேசர் வெசாக் அலங்காரப் பந்தல் இலங்கையில்

உலகில் முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரப் பந்தல் கொழும்பு காலிமுகதிடலில் மக்கள் பார்வைக்காக புதன்கிழமை(10) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. குறித்த நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரப் பந்தலானது 60 அடி உயரத்தையும், 40 அடி அகலத்தையும் கொண்டுள்ளது. இதனை பேராசிரியர் பிரபாத் சந்திம உக்வத்த வடிவமைத்துள்ளார்....

வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்னங்களை அழிப்பது பயங்கரவாத செயல்!

நாட்டிலுள்ள புராதன, வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்னங்களை அழிப்பது திருத்தப்பட்ட புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 20 வருடங்களுக்குக் குறையாத தண்டனை பெறும் குற்றச் செயல் என தெரிவிக்கப்படுகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக கருதப்படும் ஒருவரின் உடைமைகள் அனைத்தும் அரசுடமையாக்கப்படும் எனவும் அச்சட்டம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இலங்கையின் இறைமைக்கு பங்கம் ஏற்படும்...

வீடுகளுக்கு வந்து இலவசமாக இரத்த மாதிரி பரிசோதனை செய்வதாக கூறி எச்.ஐ.வி வைரஸ்ஸை பரப்புவோர் தொடர்பில் எச்சரிக்கை

வீடுகளுக்கு வந்து இலவசமாக இரத்த மாதிரி பரிசோதனை செய்வதாக கூறி எச்.ஐ.வி வைரஸ்ஸை ஊசி மூலம் உட்செலுத்துவதாக தற்போது சமூகவலைத்தளங்களில் செய்தியொன்று அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. வீடுகளுக்கு வந்து இலவசமாக இரத்த மாதிரி பரிசோதனை செய்வதாக கூறி எச்.ஐ.வி வைரஸ்ஸை ஊசி மூலம் உட்செலுத்துவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஐ.எஸ் தீவிரவாதிகளின் திட்டம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்களம் மற்றும்...

மாணவன் ஒருவனிடம் இனந்தெரியாதோர் இரத்தம் எடுத்ததால் பதற்றம்!

கிண்ணியா அல் அதான் வித்தியாலய மாணவன் ஒருவனிடம் நேற்று வெள்ளிக்கிழமை (05) இனந்தெரியாதோர் இரத்தம் எடுத்ததால் கிண்ணியாவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கிண்ணியா மகரூப் நகரை சேர்ந்த சதாத் முகம்மது ருஸ்தி (வயது 11) என்ற இந்த மாணவன் அல் அதான் வித்தியாலயத்தில் 6ஆம் தரத்தில் கல்வி கற்கிறான். இம்மாணவன் பாடசாலை முடிந்து வரும்போது வெள்ளைக்...

அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

தொழிற்சங்க நடவடிக்கைக்கு அரசாங்கம் சரியான தீர்வு வழங்காவிட்டால் எதிர்வரும் நாட்களும் கடுமையான நடவடிக்கைகயை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. இது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை சம்பந்தமாக சங்கத்தின் மத்திய செயற்குழு கூடி தீர்மானிக்கும் என்று அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா கூறினார். இதேவேளை நேற்று வைத்தியர்கள்...

சார்க் செய்மதி ஏவப்பட்டமை தொடர்பில் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து

இலங்கை உள்ளிட்ட சார்க் உறுப்பு நாடுகள் அனைத்துக்கும் பொதுவான தொடர்பாடலுக்கான செய்மதி நேற்று(05) பிற்பகல் இந்தியாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். நேற்ற (05) பிற்பகல் அநுராதபுரத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையிலிருந்து செய்மதி தொழில்நுட்பத்தினூடாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் தொடர்பு...

நான் ஆட்சி செய்திருந்தால் வேலைநிறுத்தம் இடம்பெற்றிருக்காது

தாம் நாட்டை ஆட்சி செய்திருந்தால் வேலைநிறுத்தம் இடம்பெற்றிருக்காது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தறை, மாகந்துர, ரன்சேகொட விகாரையில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி தீா்வை வழங்கும் என்ற நம்பிகையை தமிழ் மக்கள் இழக்கின்றனா்: எஸ். ஸ்ரீதரன்

நல்லாட்சி அரசாங்கம், தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொண்டு பிளவுபடாத நாட்டில் சுயநிர்ணயத்துடனான சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை வழங்கும் என்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் இழந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில், நடைபெற்ற இராஜதந்திரச் சிறப்புரிமைகள் சட்டத்தின் கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை...

வேலை நிறுத்தம் வெற்றி என்கிறது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

இன்று காலை 08 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. சுகாதார தொழிற் சங்கங்கள், போக்குவரத்து, ஆசிரியர் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்துள்ளதுடன், மாணவர் சங்கங்களின் ஆதரவும் கிடைத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார். 24 மணித்தியால...

30 தொழிற்சங்கங்கள் இன்று காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில்

சுகாதாரம்,கல்வி மற்றும் போக்குவரத்து துறைகளைச்சார்ந்த சுமார் 30 இற்கு மேற்பட்ட தொழிற் சங்கங்கள் இன்று (05) வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். எனினும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக ஆபத்தான நிலையிலுள்ள நோயாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட மாட்டாதெனவும், மகப்பேற்று மற்றும் சிறுவர்...
Loading posts...

All posts loaded

No more posts