- Monday
- January 13th, 2025
தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய பதிலளிக்காவிடில் விரைவில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக, அந்த ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் முதல் எந்தவொரு நாளிலும் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, இன்று நள்ளிரவு...
தமிழீழ அடிப்படைவாத பிரிவினரால், மனித படுகொலை வாரம் அனுஷ்டிக்கப்படும் தருணத்தில், யுத்தம் நிறைவு செய்யப்பட்டு 8 வருடங்கள் நிறைவடைந்ததுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் பொலிஸ் வாகனத்திற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தெற்கில் சிங்கள- முஸ்லிம் மோதலுக்கு அடிகோலுவதற்கு சூட்சும நடவடிக்கைகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய சுதந்திர முண்ணனியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்....
பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்கள் சிறந்த சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் அந்த சாதனைகளே இனத்திற்கும் மொழிக்கும் பெருமை தேடித் தரும் என்றும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு...
நாட்டை அபிவிருத்தி பாதையில் முன்னோக்கிக் கொண்டுசெல்லும் முனைப்பிலேயே அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அந்த வகையில் நாட்டின் அபிவிருத்தியில், இந்த அமைச்சரவை மாற்றமானது புதிய உத்வேகத்தை கொடுக்கும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய...
நாடளாவிய ரீதியில், 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி இன்று (19) பதிவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக, வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேலும், மணித்தியாளத்துக்கு 60 தொடக்கம் 70 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. எனவே, நாடளாவிய ரீதியிலுள்ள கடற்கரை பகுதிகளில் குடியிருக்கும் மக்களும் மீன்பிடிக்கச் செல்வோரும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு...
இராணுவத்தினர் உயிரைப் பணையம் வைத்து நாட்டுக்கு சமாதானத்தைப் பெற்றுத்தந்ததை இன்று பலர் மறந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உயிரைப் பணையம் வைத்துப் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ள மஹிந்த ராஜபக்ஷ, தற்போது உருவாகியுள்ள நிலைமை கவலைக்கிடமானது எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போதைய ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணத்தில் கால்பதிக்க அனுமதியற்ற ஒரு நிலையம் உருவாகியுள்ளதாகவும்...
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் சைட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை அரைநாள் பணிப்பகிஷ்கரிப்பொன்றில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரையில் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில், இராணுவ வெற்றியின் 8 ஆவது வருட நிறைவைக் கொண்டாடும் நிகழ்வு நாளை (20) மாலை 3.00 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. “பெற்ற வெற்றியைப் பாதுகாப்போம், இராணுவ வீரர்களை தனிமைப்படுத்தாதிருப்போம்” எனும் தொனிப் பொருளில் இந்த நிகழ்வை...
நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டங்கள் அமுலாகின்றன. கூடுதலான டெங்கு நோயாளிகள் அடையாளங்காணப்பட்ட மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது சுகாதார அமைச்சின் நோக்கமாகும். இதற்கு அமைவாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை இந்த வேலைத்திட்டம் அமுலாகும். இந்தப்பணியில்...
கொழும்பு-06, வௌ்ளவத்தை சவோய் திரையரங்குக்கு அருகில் உள்ள கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இதனால், 19 பேர் படுகாமயடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் 13பேர்களுபோவில வைத்தியசாலையிலும் மேலும் 6பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டட இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்றும் அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்றே,...
இலங்கையின் வான்பரப்பில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அடுத்து வரும் சில நாட்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி முதல் இலங்கையின் தென் மற்றும் மேற்கு பகுதியில் அதிக மழையுடனான காலநிலையை எதிர்பார்க்க முடியும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பருவமழை நிலைமை நாட்டின் ஊடாக...
எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்துக்கு முன்னால், காணாமற்போனோரின் உறவினர்கள், அமைதியான முறையில் தற்போது ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றனர். காணாமற்போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவரிடம் மனுவொன்றைக் கையளிப்பதற்காக வருகை தந்திருந்த உறவினர்களே, இவ்வாறு அமைதிப் போராட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றனர். “காணாமற்போனோரைக் கண்டுபிடிப்பதற்கான அலுவலகத்தை விரைவில் ஸ்தாபிப்பதற்கு,...
தற்போது வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதில் தமது சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அரச மற்றும் தனியார் துறையினரிடமும் அரசியல்வாதிகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளார். டெங்கு ஒழிப்புக்காக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி தமது நேரடி பங்களிப்பை வழங்குமாறு ஜனாதிபதி அனைத்து அரசியல் பிரதிநிதிகளிடமும் கேட்டுக்கொண்டார். அதேபோன்று டெங்கு...
யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வட. மாகாணத்தில், புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திப் பணிகள் நல்லாட்சி அரசாங்கத்தினால் திருப்திகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க காங்கிரஸ் சபையின் பிரதிநிதி பில் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் சபை பிரதிநிதிகளுக்கும், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், வடக்கு...
சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்று போதனா வைத்தியசாலையாக மாற்றி மக்களுக்கு இலவச சுகாதார சேவைகளை வழங்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி அரசுடைமையாக்கப்படும் என ஏற்கனவே அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், நேற்ற (திங்கட்கிழமை) குறித்த...
காலி மாவட்டச் செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானிய சைபர் நிபுணர் குழு என்ற அமைப்பு உரிமைகோரியுள்ளது. உலகெங்கிலும் கடந்த வாரம் 99 நாடுகளின் இணையத்தளங்கள்மீது ரன்சம்வேர் வைரஸ் தாக்குதல் நடாத்தப்பட்ட நிலையில், சிறிலங்காவுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இவ்விணையத்தளத்துக்குள் ஊடுருவிய இணைய ஊடுருவிகள், பாகிஸ்தான் ஜந்தாபாத், இஸ்லாம் ஜிந்தாபாத், முஸ்லிம்கள்...
வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துடன் இணைந்து சிலர் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதும், இராணுவத்தினரை விமர்சிப்பதும் கவலையளிப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அரநாயக்க பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த அமைச்சர், இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் நினைவாக முள்ளிவாய்க்கால் வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றமை தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே...
ஆடம்பர வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு சிறப்பு வரி சலுகைகளை வழங்க நிதி அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பொதுக் கணக்குகள் மேற்பார்வைக் குழுவால் தடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் 26 பேருக்கு வாகன இறக்குமதிக்கான வரி நிவாரணம் வழங்கும் சட்டமூலம் ஒன்றை, சுங்கத்துறை விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சு தயாரித்து நாடாளுமன்ற அனுமதிக்காக அனுப்பி...
அவுஸ்திரேலியாவுக்கான வீசாக் கட்டணம் எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு திணைக்களத்தினால் புதிய வீசா கட்டணம் தொடர்பான பட்டியல் அறிவிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி அறிவிக்கப்பட்ட 2017/18 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு...
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பானது மிகவும் ஆரோக்கியமான வகையில் இடம்பெற்றுள்ளது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்....
Loading posts...
All posts loaded
No more posts