தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

தபால் ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியிலான பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர். நுவரெலியா, கண்டி மற்றும் காலி கோட்டை ஆகிய பகுதிகளிலுள்ள தபால் அலுவலகங்களை சுற்றுலா ஹோட்டலாக மாற்ற அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை உடனடியாக நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே அவர்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக, ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி குறிப்பிட்டுள்ளது....

கூட்டமைப்பிற்கு எதிரான விமர்சனங்கள் அழுத்தங்களாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும்: ஸ்ரீ கஜன்

தற்போது பிரதான எதிர்க் கட்சியாக செயற்பட்டு வருகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் அனைத்தும் இனப்பிரச்சினை தீர்விற்கு அரசாங்கத்திற்கான அழுத்தங்களாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று சிரேஷ்ட ஊடகவியலாளரும் வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ஸ்ரீகஜன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக் காட்சியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...
Ad Widget

இன்றும் பணிப்பகிஷ்கரிப்பு, அவசர சேவையும் தேவைப்படின் நிறுத்தப்படும் : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

ஒரு சில வைத்தியசாலைகளைத் தவிர நாட்டிலுள்ள சகல வைத்தியசாலைகளிலும் இன்றும் (23) பணிப்பகிஷ்கரிப்பு தொடர்வதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அரச வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை பெற வருவதா? இல்லையா? என்பதை நோயாளர்கள் தீர்மானம் எடுத்துக் கொள்ள வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்று காலை 8.00 மணிக்கு...

வைத்தியர்களுக்கு இடையே மோதல்: ஒருவர் படுகாயம்

கொழும்பில் வைத்திய அதிகாரிகள் குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாலபே தனியார் வைத்தியசாலை தொடர்பில் நீடிக்கும் சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் நிறைவில் குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த வைத்திய அதிகாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு,...

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேற்கொண்டுள்ள சேவை புறக்கணிப்பு சம்பந்தமாக இதுவரை எடுக்காத நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், ’மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த...

வடமாகாணத்தைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு அனைத்துத் தமிழ் மக்களுக்கும் உண்டு! : இராதாகிருஷ்ணன்

தமிழர்கள் செறிந்துவாழும் வடமாகாணத்தை நாம் நழுவவிட்டால் ஏனைய மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கும் சாத்தியக்கூறு உள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரன் மதிப்புக்குரிய ஒரு தலைவர், அதேபோல் இரா.சம்பந்தனும் மரியாதைக்குரியவர். இந்நிலையில் இவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்த பல்வேறு சக்திகள் முனைகின்றன. மட்டக்களப்பு பன்குடா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன்...

மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை வீச்சு: 30 பேர் காயம்

சுகாதார அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல்களினால் காயமடைந்த 30 பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை மூடுமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (புதன்கிழமை) சுகாதார அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் சுகாதார...

பிணையில் விடுவிக்கப்பட்ட ஞானசார தேரர் கைது

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சற்று முன்னர் பொலிஸ் புலானாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகடை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் அவர் மீளவும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தற்போது தேரரை புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பிணையில் விடுவிக்கப்பட்டார் ஞானசார தேரர்!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் முன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றில் ஆஜராகத் தவறியதையடுத்து, ஞானசார தேரரை கைது செய்வதற்கு நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தார். நீதிமன்றத்தை அவமதித்ததாக ஞானசார தேரர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதேவேளை, தேசிய பல சேனா அமைப்பின்...

பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க ஜனாதிபதி நடவடிக்கை

புதிய அரசியல் அமைப்பில் பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இதன்போது, புதிய அரசியல் அமைப்பில் பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அரைவாசியாக குறைக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். புதிய அரசியல் அமைப்பின்...

பேருந்து கட்டணங்களை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து அரச மற்றும் தனியார் பேருந்துகளின் கட்டணங்களை 6.28 சதவீதமாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தற்போது குறைந்தபட்ச பேருந்து கட்டணமாக உள்ள 9 ரூபா, ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து 10 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது....

நடு வீதியில் வைத்து மாணவி மீது ஊசி ஏற்றிய கொடூரம்!

கந்தளாய் - பேரமடுவ பிரதேசத்தில் 10 வயது மாணவி மீது வீதியில் வைத்து ஊசி ஏற்றப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.குறித்த மாணவி கடந்த 17 ஆம் திகதி மேலதிக வகுப்பொன்றுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய வேளை உந்துருளியில் பின்தொடர்ந்து வந்த இருவர் இவ்வாறு அவர் மீது ஊசியை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.உந்துளியில்...

இம்மாதம் 22,23, 24 ஆம் திகதிகளில் கடும் மழை

இம்மாதம் 22, 23, 24 ஆம் திகதிகளில் கடும் மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளதாகவும், இதனால், ஏற்படும் வெள்ளம் மற்றும் மண் சரிவு என்பவற்றிலிருந்து பாதுகாப்புப் பெற, முன் ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் எனவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாபா தெரிவித்துள்ளார். இந்த தயார்படுத்தல்,...

தனியார் வைத்தியசாலைகளில் இரத்தப்பரிசோதனை கட்டணங்கள் குறைப்பு

தனியார் வைத்தியசாலைகள் , இரசாயன கூடங்களில் மேற்கொள்ளப்படும் இரத்த பரிசோதனை மற்றும் டெங்கு இரத்த பரிசோதனைக்காக அறவிடப்படும் கட்டணம் நேற்று முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவின் வேண்டுகோளுக்கமைவாக நேற்று முதல் குறைக்கப்படுகின்றது. இதற்கமைவாக தனியார்வைத்தியசாலைகளில் முழுஅளவிலான இரத்த பரிசோதனைகளுக்கு 250 ரூபா ( Full...

தற்கொலை சம்பவங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டாம்: தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

தற்கொலை செய்து கொள்வதனை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதனை தவிர்க்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக சிறுவர்கள் உட்பட இளைஞர்கள் ரயிலில் தலையை வைத்து தற்கொலை செய்து கொள்வது தொடர்பில்...

நாணயத்தாள்களை சேதப்படுத்தினால் தண்டனை: மத்திய வங்கி

இலங்கையில் புழக்கத்திலிருக்கும் நாணயத்தாள்களை சேதப்படுத்துதல், அதில் மாற்றங்களை செய்தல், மற்றும் சிதைத்தல் என்பன தண்டனைக்குரிய குற்றம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு நாணயத்தாளை சேதப்படுத்துபவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் தண்டப்பணம் விதிக்கப்படும் அளவிற்கு சட்டத்தில் இடமிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த செயற்பாட்டை நிறுத்திக்கொள்ளுமாறும், அவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ள நாணயத்தாளை உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினூடாக மாற்றிக்கொள்ளுமாறும்...

பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு?

பஸ் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளும் அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரமளவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. குறித்த திருத்தம் தொடர்பாக பரிந்துரைகளை முன் வைக்குமாறு நிதியமைச்சினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது. பஸ் கட்டணங்களில் திருத்தம் செய்வது சம்பந்தமான தேசிய கொள்கைக்கு அமைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 01ம் திகதி கட்டணங்களில் திருத்தம்...

தரம் 7 புவியியல் புத்தகங்கள் விஷ இரசாயனத் தாளில் அச்சடிப்பு: மீளப் பெறுமாறு வலியுறுத்தல்!

தரம் 7 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புவியியல் புத்தகம் விஷ இரசாயனத் தாளில் அச்சிடப்பட்டுள்ளதுடன், அது மாணவர்களின் சுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்கவல்லது எனவும், அவ்வாறு நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்ட தரம் 7 புவியியல் புத்தகத்தை மீளப் பெறுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது. தொழில்சார் நிபு­ணர்­களின் கேட்போர் கூடத்தில் நேற்று...

நாடளாவிய பணிப்பகிஷ்கரிப்பால் தபால் சேவை முடங்கியது

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால்துறை ஊழியர்கள் மேற்கொண்டு வரும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தால் தபால் சேவைகள் முற்றாக முடங்கியுள்ளன. நிர்வாக ரீதியாக தாம் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு இதுவரையில் உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தபால் அலுவலகத்திற்காக கட்டப்பட்ட கட்டடத்தில் சுற்றுலா விடுதியை நடத்த தீர்மானித்தமைக்கு எதிராகவும் 48 மணிநேர பணி பகிஷ்கரிப்பாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு...

செல்ஃபி எடுக்க முயன்ற சகோதரர்கள் ரயில் மோதி உயிரிழப்பு!

பம்பலபிட்டி – கொள்ளுபிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையில் செல்ஃபி எடுக்க முயன்ற சகோதரர்கள் இருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் 12 மற்றும் 25 வயது மதிக்கத்தக்கவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ச்சியாக ஆபத்தான இடங்களில் புகைப்படம்...
Loading posts...

All posts loaded

No more posts