- Sunday
- January 12th, 2025
‘எமது பிள்ளைகள் பல அயலிலுள்ள கிராமங்களுக்குச் சென்று தமிழ் மொழியிலேயே கல்வி கற்கின்றனர். இது எமக்கு மகிழ்ச்சி தருகின்ற போதும் நாங்கள் வாழும் கிராமத்தில் பாலர் பாடசாலை ஒன்றையும் அமைத்துத் தாருங்கள்` என மன்னார் மறிச்சுக்கட்டிப் பிரதேச சிங்கள கம்மான மக்கள்அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அமைச்சர் ரிஷாட்...
வேலையற்ற பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்க தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த விடயமாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் அரசாங்கம் வேலையில்லாப் பட்டதாரிகளிடமிருந்து மாவட்ட அடிப்படையில் பயிற்சிக்காகவும் நியமனத்திற்காகவும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளது. சுய தொழில், தனியார் துறை, அரச சார்பற்ற அல்லது அரசதுறை ஆகிய எந்தத் துறைகளிலும்...
காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு, அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னெடுப்புக்கள் போதுமானதல்லவென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக, பிரித்தானிய அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, எதிர்க்கட்சித் தலைவரை நேற்று (புதன்கிழமை) சந்தித்தது. இதன்போதே, எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, காணிகளை விடுவித்தல் மற்றும்...
நடைமுறையிலிருக்கும் தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக ஸ்மார்ட் அடையாள அட்டைகள் எதிர்வரும் இரண்டு மாதத்திற்குள் வழங்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக புதிதாக அடையாள அட்டை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் வியானி குணதிலக தெரிவித்தார். குறித்த அடையாள அட்டையானது பாதுகாப்பு உத்திகள் பலவற்றை கொண்டுள்ளது என...
யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட காரணத்தினாலேயே தானும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் ஒரே மேடையில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற புத்தக வெளியீட்டு விழாவொன்றில், மஹிந்தவும் சம்பந்தனும் ஒரே மேடையில் சங்கமித்திருந்தனர். இந்நிகழ்வில் உரையாற்றிய போதே மஹிந்த மேற்குறித்தவாறு கூறியுள்ளார். அத்தோடு, யுத்தம் நிறைவடைந்தமையே நல்லிணக்கத்திற்கும்...
சீன கடற்படையின் மிக நவீனமான மருத்துவமனைக் கப்பலான, ஆர்க் பீ்ஸ் நல்லெண்ணப் பயணமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை வரவுள்ளது. இந்தக் கப்பல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று சீன தூதரகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 8ஆம் நாள், இந்த மிதக்கும் மருத்துவமனையில் இலங்கையர்களுக்கு இலவச மருத்துவ உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது....
ஆசிரியர்கள் நல்ல மனநிலையுடன் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய அனைத்து வசதிகளையும் நிறைவுசெய்வதாக ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுராதபுரம் வலிசிங்க சரத்சந்ர மகா வித்தியாலயத்தில் புதிய கட்டிட தொகுதியை இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் திறந்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கி அவர்களது அறிவை மேம்படுத்துவதற்காக அதிபர்,...
நாடளாவிய ரீதியில் மீண்டும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்துமாறு சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன அறிவித்துள்ளார். தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவிற்கு அமைச்சர் விடுத்துள்ள பணிப்புரைக்கமைவாக இந்த திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை மேற்கொள்ளப்படவுள்ளது. நாட்டின் பல இடங்களில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையை கருத்திற்கொண்டு...
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஹபீர் ஹாசிம் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ‘வாள்வெட்டு...
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இலங்கை அரசாங்கமும், சீன மேர்ச்சண்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனமும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பங்காளர்களாக மாறியுள்ளன. தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டு எதிர்க் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உட்பட பல்வேறு அமைப்புக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளது. இவ்வுடன்படிக்கை குறித்து கருத்துத்...
மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் புதுப்பிக்கக்கூடிய வலு சக்தி அமைச்சு மக்களை கேட்டுள்ளது. நீர் ஏந்து பிரதேசங்களில் பொதியளவு மழைபெய்யாததினால் மின் உற்பத்திக்கான நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் விரைவாக குறைந்து வருகிறது. தொடர்ச்சியான மின்விநியோகத்திற்காக மக்களின் ஒத்துழைப்புகள் தேவை என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மின்சாரம் கூடுதலாக பயன்படுத்தப்படும் மாலை 6.00 மணி முதல்...
இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ராம் நாத் கோவிந்த்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோவிந்த்திற்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய இந்திய ஜனாதிபதியின் தொலைநோக்கு மற்றும் முதிர்ச்சி நாட்டின் அனைத்து சமூகங்களையும் தழுவிய நல்லிணக்கம் மற்றும் ஐக்கியத்தை அடைந்துகொள்வதில் பெரிதும் பங்களிப்புச் செய்யும் என்று தெரிவித்துள்ளார்....
கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து எரிபொருளை கொண்டுசெல்வதை தடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் சுமார் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எரிபொருள் தாங்கிகளை மறித்தும், விமான நிலையத்திற்கு எரிபொருள் கொண்டுசென்ற ரயிலை மறித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பெற்றோலிய வளத்துறை ஊழியர்களது ஆர்ப்பாட்டம் காரணமாக பாரிய போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கொலன்னாவ...
உயிரிழந்தவரின் காலை உயிருள்ளவருக்குப் பொருத்தி தமிழ் வைத்தியர் ஒருவர் சாதனை புரிந்துள்ளார். இச்சாதனை அனுராதபுர வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. குருதிக் கலன்கள் தொடர்பான சத்திரசிகிச்சை நிபுணர் யோ. அருட்செல்வன் என்ற வைத்தியரே இச்சாதனையைச் செய்துள்ளார்.
பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கனிய எண்ணெய் சேவையாளர்களை பணிக்கு திரும்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்தை கருத்திற்கொண்டு, பணிகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி இன்று (புதன்கிழமை) இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார். இந்தியன் ஒயில் நிறுவனத்திடமிருந்து திருகோணமலை சீனக்குடா எண்ணெய் களஞ்சிய தொகுதிகளை மீட்க வேண்டும், அம்பாந்தோட்டை துறைமுக எண்ணெய் களஞ்சிய...
எரிபொருள் விநியோகம், அத்தியவசிய சேவையாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தபட்டு, வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோவினால் கையெழுத்திடப்பட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பெற்றோலிய ஊழியர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த முத்துராஜவல மற்றும் கொலன்னாவ எண்ணெய்க் களஞ்சியங்கள் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இன்று அதிகாலை முதல்...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கனிய எண்ணெய் தொழிற்சங்க ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தலைநகர் கொழும்பில் எரிபொருள் நிலையங்களில் மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால்...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்றுகாலை 8 மணிமுதல் 24 மணி நேர வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. மருத்துவபீட மாணவ செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தைகடத்த முயற்சித்தமை, வைத்திய சபையின் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள ஒழுங்கீனங்கள் உள்ளிட்ட சில முக்கிய விடயங்களை முன்வைத்தே குறித்த பணிப்புறக்கணிப்பு இடம்பெறவுள்ளதாக, அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர்...
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து உரிய தீர்வு வழங்காமையால், நாளை நாடளாவிய ரீதியில், அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளை காலை 08.00 மணி முதல் 24 மணித்தியாலங்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். யாழ்.நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நீதிபதி இளஞ்செழியன் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த உத்தரவை விடுத்துள்ளார். அத்துடன், குறித்த தாக்குதல் தொடர்பில் பொலிஸ் குழுக்களை...
Loading posts...
All posts loaded
No more posts