- Sunday
- January 12th, 2025
காலத்தை வீணடிக்காமல் ஜனாதிபதித் தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடன் நிறைவேற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு (திங்கட்கிழமை) நடைபெற்ற முக்கிய சந்திப்பின்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இந்த மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்துக்கு...
ஐக்கிய அமெரிக்காவிற்கு திருகோணமலையில் கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது நீண்டநாள் கனவாக உள்ளது. புதிய கடற்படை தளபதி டிரவிஸ் சின்னையாவும் அந்நாட்டில் பணியாற்றியவர். எனவே அவர் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர...
குற்றம் சுமத்தப்பட்ட பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் இரசாயனவியல் வினாத்தாள் துண்டுப்பிரசுரத்தை பரீட்சைக்கு முன்பதாக வௌியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கம்பஹா பகுதியைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய ஆசிரியர் உட்பட அவரது உறவினர்கள் இருவரும் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சைட்டம் மருத்துவ நிறுவனத்திற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்றாலும் இன்னும் 300 புதிய மாணவர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அனுமதிக்கவுள்ளதாக சைட்டம் மருத்துவ நிறுவனத்தின் தலைவர் நெவில் பர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த 200 மாணவர்களும் வெளிநாட்டு மாணவர்கள் 100 பேரும் உள்ளடங்கலாக 300 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சில...
குளிர்பானங்களில் சேர்க்கப்படும் மேலதிக சீனிக்கு வரி அறவிட தீர்மானித்துள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பிற்கமைவாக 100 மில்லி லீற்றர் குளிர்பானத்திற்கு சேர்க்க வேண்டிய அதிகூடிய சீனியின் அளவு 6 கிராம் ஆகும். அதற்கு மேலதிகமாக சேர்க்கப்படும் ஒவ்வொரு கிராம் சீனிக்கும் ஒரு ரூபாய்...
இலங்கைக்கு சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ந்து தற்போது ஒரு நாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகின்றது. இந்த நிலையில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, பாலிவூட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுடன் இணைந்து இலங்கையில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்கு அவசியமான மரக்கன்றுகளை நடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குறித்த செயற்பாட்டுக்காக கண்டியில் அவர்கள்...
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல் இருந்து வருகின்றது.எமது பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் யோகராசா கனக ரஞ்சனி தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் நேற்று முன்தினம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே...
இணையதளத்திற்காக அறவிடப்பட்ட வரி குறைக்கப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிப்பதாக இணைய தள ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இந்த கட்டணத்தை இலகுவாக செலுத்தக்கூடிய வசதிகளையும் ஏற்படுத்திககொடுக்குமாறும் இணையதள ஊடகவியலாளர்கள் கேட்டுக்கொண்டனர். அரச தகவல் திணைக்களத்தில் நடைபொற்ற செய்தியாளர் மகாநாட்டில் இணைய தள ஊடகவியலாளர்கள் இவ்வாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். இவ்வாறான வரி குறைப்பு நடவடிக்கையின் மூலம் தமது தொழிற்றுறையை...
இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரால் ட்ரவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். 1982ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் இணைந்த ட்ரவிஸ் சின்னையா, வீர விக்ரம விபூஷ, ரணவிக்ரம, ரணசூர (மூன்று முறை) மற்றும் உத்தம சேவா...
கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 21வது கடற்படை தளபதியாக ரியட் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் தற்போது கடற்படை தளபதி பதவியை வகிக்கும் வைஸ் அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ளார்.
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் தடை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட கொள்கை தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். அஸ்பெஸ்டஸ் மற்றும் புகையிலை தடைக்காக அரசாங்கம் செயற்படும்...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமது இறுதி நம்பிக்கையாக தென்னிலங்கை மக்களை நாடியுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம், 179வது நாளாகவும் நீடிக்கின்றது. இந்நிலையில், கொழும்பிற்கு சென்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர், இன்றைய தினம்...
சமூர்த்தி கொடுப்பனவு தொடர்பில் கனணி மூலம் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த செயல்முறை நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஐித சேனாரட்ன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். கணனி மூலமான...
இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரியான முகுந்தன் கனகே, தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டதற்கிணங்கவே தனது பதவியை இராஜினாமா செய்வதாக அவர் கூறியுள்ளார். தன்னுடைய இராஜினாமாக் கடிதத்தை, இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சிரேஷ்ட...
இலங்கையின் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, பொலிஸ் திணைக்களத்தின் இரண்டு பணியாளர்களை அச்சுறுத்தும் காட்சிகளை இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் சீசீடிவி காணொளியின் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளே குறித்த இணைத்தளத்தில் வெளியாகியுள்ளன https://youtu.be/WuVj4DpmXpc காலை நேர தியான பயிற்சிகளுக்கான ஒழுங்குகளை மீறியமைக்காகவே அவர்களை பொலிஸ் மா அதிபர் அச்சுறுத்துவதாக இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. கடந்த...
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கூடியது. இதன் போது நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த அர்ச்சனா செல்லத்துரை, சபை நடவடிக்கைககளை பார்வையிட்டார். இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்ட அர்ச்சனா செல்லத்துரை...
சமுர்த்தி அனுகூலங்களை குறைப்பதற்கு அல்லது நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளாது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தொவித்தார். நேற்றயதினம் முற்பகல் எம்பிலிப்பிட்டிய கம்உதாவ விளையாட்டரங்கில் நடைபெற்ற வளவை வலய விவசாய மக்களுக்கு 5000 காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, ”சமுர்த்தி...
உந்துருளி விபத்துக்களின் போது உந்துருளிகள் இரண்டாக பிளவடைவது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசிய கவுன்சில் இதனை தெரிவித்துள்ளது.தொடர்ந்து இடம்பெறும் உந்துருளி விபத்துக்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்த போது, இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அதன் தலைவர் சிசிர கொதாகொட எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.இந்நிலையில், உந்துருளி தயாரிப்பு தொடர்பில் அதன் தரநிலை...
சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை எக்காரணம் கொண்டும் குறைக்கப்பட மாட்டாது என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்வியொன்றிற்கு பதிலளித்த அமைச்சர் 14 லட்சத்து 25 ஆயிரத்து 661 சமுர்த்தி பயனாளிகள் நாட்டில் காணப்படுகின்றனர். இவர்களுக்காக அரசாங்கம் நான்காயிரத்து 200 கோடி ரூபா நிதியை ஒதுக்கியிருந்த போதிலும், செயல்பாட்டு...
குப்பையில் இருந்து மின்சாரத்தை உற்பத்திசெய்யும் இலங்கையின் முதலாவது இரண்டு கருத்திட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) கெரவலபிடியவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. கழிவுகளை முறையாக அகற்றாத காரணத்தினால் கடந்த காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி இருந்தது. இதற்கு நிலையான தீர்வை வழங்கும் நோக்கிலேயே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை வளமாக மாற்றி மாற்றுத்...
Loading posts...
All posts loaded
No more posts