- Sunday
- January 12th, 2025
இலங்கையில் நாணயத்தாள் அச்சிடும் போது போலி அச்சிடலை தடுக்கும் தொழில்நுட்ப முறை ஒன்று கடைப்பிடிக்காமையினால் நாடு முழுவதும் போலி நாணயத்தாள் உள்ளதாக அரசாங்க அச்சுப்பொறி திணைக்களம் தெரிவித்துள்ளது. போலி நாணயத்தாள் அச்சிடப்படுவது தொடர்பில் ஒவ்வொரு மாதமும் முறைப்பாடு பதிவாகுவதாகவும், ஒரு மாதத்திற்கு நான்கு முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக நாடு...
விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தாமல் கைவிடப்பட்டுள்ள தனியார் காணிகளை அரசமயப்படுத்தி அவற்றில் விவசாயத்தை மேற்கொள்ள கூடிய வகையில் தற்போது இருக்கின்ற சட்டத்தின் கீழ் விசேட அரச வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை பிறப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையில் பாரிய அளவிலான தனியார் காணிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை தவிர்த்து கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக சிறிசேன தெரிவித்தார்....
இலங்கையில் நாளொன்றுக்கு சாராசரியாக 8 பேர் தற்கொலை செய்கின்றார்கள். தற்கொலை செய்பவர்களில் ஆண்களே முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொலிசாரின் தகவல்களின் படி 2015ம் ஆண்டு 2389 ஆண்கள் உள்ளிட்ட 3058 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. 2016ம் ஆண்டு 2339 ஆண்களும் 668 பெண்களும் தற்கொலை செய்துள்ளனர். இந்த வருடம் முதல் 6 மாத காலங்களில் 1597...
வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனும், மல்வத்து பீட மஹாநாயக்க தேரரும் முக்கிய விடயங்கள் குறித்து இன்று (சனிக்கிழமை) கலந்துரையாடியுள்ளனர். இதன்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மல்வத்து பீட மஹாநாயக்க தேரருக்கு முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனுக்கு தெளிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து பல்லேகலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் முதலமைச்சர் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என குறிப்பிடப்பட்டுள்ள சுவிஸ்குமாரை தப்பிக்க வைக்க, மிகவும் பிரபல்யமான ஒருவர் செயற்பட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் இவ்வாறு குறிப்பிட்ட அசாத் சாலி, உண்மையான குற்றவாளியை கைதுசெய்ய அரசாங்கம்...
நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் சிறிய காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக மேல், தென், சப்ரகமுவ, மத்திய மலைநாடு மற்றும் வட மேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைப் பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேபோல் மன்னார் தொடக்கம் கொழும்பு மற்றும் காலி ஊடான ஹம்மாந்தோட்டை...
போக்குவரத்து நெரிசல் காரணமாக அரச ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவது தாமதப்படுவதால் அவர்களது வேலை நேரத்தில் சலுகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அலுவலக நேரங்களில் நெகிழ்வுத் தன்மையினைக் கடைப்பிடிக்கும் திட்டம் எதிர்வரும் 18ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் முதலில் அரச திணைக்களங்கள் அதிகளவில் காணப்படும் பத்தரமுல்ல பிரதேசத்தில் இருந்து அமுல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின்...
இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு உலகளாவிய வரிக் கோவை இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். எனினும் இவர்கள் மீது வரி சுமத்தப்படாது. இந்த இலக்கத்தை கொண்டு சிகிரியா மற்றும் நூதனசாலைகளுக்கு இலவசமாக செல்ல முடியும். மேலும் வங்கி கணக்குகளை இலகுவாக திறக்க முடியும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். பாராளுமன்றத்தில்...
இலங்கை பூராகவும் இலவச Wi-Fi (இணைய வசதி) வழங்கும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது என்று கூறப்படுகின்றது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட வளமான நாடு மாநாட்டு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டு மக்களை மேம்படுத்துதல் மற்றும் உறவுகளை வளர்க்கும் வேலைத் திட்டத்தின் கீழ் இது விரிவுபடுத்தப்படவுள்ளது. இலவச Wi-Fi வழங்கும் மண்டலங்களை அதிகரிக்க அரசு தீர்மானித்துள்ளது. பொருளாதார...
புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 100 வாக்குகளால் நேற்று(வியாழக்கிழமை) நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலத்திற்கு எதிராக 41 வாக்குகள் பதிவாகியுள்ளது. வரிமுறையினை இலகுப்படுத்தி முதலீட்டாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதே இந்த புதிய தேசிய வருமான வரி சட்டமூலத்தின் பிரதானம் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சட்டமூலம் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில், இன்று...
புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லையென, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்பு தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பு எப்போது நிறைவேற்றப்படுமென குறிப்பிட முடியாத நிலை உள்ளபோதும், சர்வஜன வாக்கெடுப்பு உள்ளிட்ட விடயங்கள்...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கான தனி அலுவலகங்களை அமைப்பதற்கான கொடுப்பனவு வழங்குவது தொடர்பான குறைநிரப்பு யோசனை நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி திட்டத்தின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவினை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 13 கோடியே 44 இலட்சம் ரூபாய்க்கான குறைநிரப்பு யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் இராணுவத்தளபதிகள் மற்றும் இராணுவத்தினரின் விடயங்களில் சர்வதேசம் தலையிட முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 66ஆவது ஆண்டு நிறைவு விழா பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக...
உலகலாவிய முஸ்லிம்கள் புனித ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர். இதனை முன்னிட்டு நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் விசட பெருநாள் தொழுகைகள் இடம்பெறுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஹஜ் பெருநாள் சமத்துவத்தின் அடிபடையிலான உயரிய சமூக நீதிக்கு...
டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு ஊசியை பதிவு செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள மருந்து தொடர்பில் ஆய்வுகள் நடைபெறுகிறது. தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது தேசிய ஒளடதங்கள் அதிகார சபையின் தலைவர் டொக்டர் ஹசித டி சில்வா இந்த விடயத்தை குறிப்பிட்டார். இந்த மருந்து வேறு நாடுகளில் பயன்படுத்துவது தொடர்பான விபரங்களும் விரிவாக ஆய்வு...
இலங்கையில் புதிய நீதி அமைச்சராக தலதா அத்துக்கோரள இன்று, வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். 54 வயதான தலதா அத்துக்கோரள இலங்கையில் முதலாவது பெண் நீதி அமைச்சராவார். அவர் தற்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். சட்டத்தரணியான இவர்...
அநுராபுர சிறைச்சாலையில் மூன்று அரசியல் கைதிகள் முன்னெடுத்த தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்றுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் அருட் தந்தை சக்திவேல் தெரிவித்தார். குறித்த மூன்று அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து இன்றும் 5 ஆவது நாளாக நடைப்பெற்று வந்த நிலையிலேயே...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரியும், அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தினை தேசிய மகளிர் வழக்கறிஞர்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரால், ‘இதுவா நல்லாட்சி’, ‘நீதியரசர் இளஞ்செழியனை சுட...
இலங்கையின் பொருளாதாரத்தின் வளர்ச்சி காணப்படுவதாக உலக வர்த்தக ஸ்தாபனம் தொவித்துள்ளது. மொத்தமாக 164 நாடுகளின் பொருளாதார அபிவிருத்தி பற்றி உலக வர்த்தக ஸ்தாபனம் கவனம் செலுத்தியிருந்தது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் கொடுக்கல் வாங்கல்கள் திருப்திகரமாக உள்ளதென ஸ்தாபனத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016ஆம் ஆண்டில் தெளிவான வளர்ச்சி தென்படுவதை ஆய்வுகள் புலப்படுத்துவதாக...
இலங்கையின் 21 வது கடற்படைத் தளபதியாக நியமனம் பெற்ற வயிஸ் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னய்யா தமது பொறுப்புகளை இன்று ஏற்றுக்கொண்டார். இன்று (22) காலை கடற்படைத் தலைமையகத்தில் புதிய கடற்படைத் தளபதி தமது பணிகளை பொறுப்பேற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்தவினால் வயிஸ் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னய்யாவுக்கு சம்பிரதாயபூர்வமாக கடற்படைத் துறையின்...
Loading posts...
All posts loaded
No more posts