- Saturday
- January 11th, 2025
நாடாளுமன்றில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலைக்கு மத்தியில், பிரதமரை தாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்திக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், இரு தரப்பினருக்கும் இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டன....
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம், புலிகளின் இலட்சினை அடங்கிய 2018 புது வருட வாழ்த்துக்களை முகப் புத்தகம் ஊடாக தயார் செய்து அதனை பகிர்ந்ததாக கூறப்படும் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். 2007 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு...
இலங்கையில் உள்ள அனைத்து இளைஞர் யுவதிகளுக்கும் வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இராஜகிரியவில் அமைக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர், அவர் ஆற்றிய உரையின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சிறந்த வருமான மார்க்கத்தை வழங்குவதே நல்லாட்சி அரசின் நோக்கம் எனவும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்....
இலங்கையின் மிக நீளமான மேம்பாலம் என கருதப்படும் இராஜகிரிய சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பாலம் இன்று (திங்கட்கிழமை) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் இந்த பாலம் திறந்து வைவக்கப்பட்டுள்ளது. இராஜகிரிய பாலத்தின் நிர்மாணப்பணிகள் இவ்வருட இறுதியிலேயே நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டிருந்த போதிலும் பொதுமக்களின் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு அதன்...
அஸ்பற்றோஸ் கூரைத்தகடுகளுக்கான தடை நீக்கம் என்பதன் மூலம் நாட்டில் சுகாதாரம் தொடர்பான அவதானம் இல்லாது போய்விட்டதா? அல்லது வெளிநாடு மற்றும் வர்த்தகம் தொடர்பான தவறான கொள்கையா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அஸ்பற்றோஸ் கூரைத்தகடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க அரசு தீர்மானித்துள்ள விடயம் தொடர்பாக நேற்று...
பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தில் இதற்காக தனியான பிரிவொன்று செயற்பட்டு வருவதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக தெரிவித்தார். வாக்களிக்க தகுதிபெற்றவர்களில் சுமார் 3 இலட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல்...
இலங்கை அரசாங்கம் உடனடியாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கை குழு வலியுறுத்தியுள்ளது. தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் தொடர்பிலான ஐ.நாவின் மூவரடங்கிய தூதுக்குழு கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்திருந்தது. இந்த நிலையில் தமது விஜயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில்...
பெற்றோலிய ஊழியர்கள் சங்கமானது மீண்டும் ஒரு பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பெற்றோலிய சங்கத்தின் இணைப்பாளர் பீ.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. திருகோணமலை எண்ணெய் கிடங்குகளை அரசாங்கம் இந்தியாவிற்கு கொடுக்கவுள்ளதாகவும், இச்செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த...
தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் பொலித்தீன் பாவனையை தடை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பொலித்தீன் பாவனையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டத்தினை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் ஜனாதிபதி மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பாக எதிர்காலத்தில் ஊடக கலந்துரையாடல் ஒன்றினை ஒழுங்குசெய்து உரிய தரப்பினரை அறிவுறுத்துமாறும்...
மருத்துவபீட கற்கை நெறியை தொடர்வதற்கு ஆகக்குறைந்த தகைமைகளை உள்ளடக்கி மருத்துவ சபை சட்டமூலம் ஒன்றை தயாரித்துள்ளது. கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல், இரசாயனவியல் ,பௌதீகவியல் ஆகிய பாடங்களில் ஆகக்குறைந்தது இரண்டு திறமை சித்தியும் சாதாரண சித்தியொன்றும் ஒரே முறையில் பெற்றிருக்கவேண்டும் என்று அரசாங்கம் தீரமானித்துள்ளது. இத்தரத்தினை வெளியிடுவது தொடர்பில் இலங்கை மருத்துவ சபை,...
புகையிரத பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டுள்ளனர். அமைச்சரவை குழுவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. புகையிரத பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டதனைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் நான்கு அமைச்சர்களைக் கொண்ட குழு ரயில் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இலங்கையின் வான்பரப்பில் தற்காலத்தில் எரிகல் வீழ்ச்சி இடம்பெறுகிறது. இதன் உச்சக்கட்டம் இன்று(13) இரவு 9 மணி முதல் மறுநாள் அதிகாலை வரையில் தொடரும். 14ம் திகதி அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரையிலான காலப்பகுதியே இதனை சிறப்பாக பார்க்க உசிதமான காலம் என்று கூறப்படுகிறது. இந்த எரிகற்களின் வீழ்ச்சி, நீலம், சிவப்பு, பச்சை,...
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் இயந்திர சாரதிகளை உடன் பணிக்கு திரும்புமாறு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் நிலையை கருத்திற்கொண்டு, இவர்களை சேவைக்கு திரும்புமாறு ஜனாதிபதி கோரயுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) மாலை ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஏற்கனவே இறுக்கமான கட்டத்தில்...
சருமத்தை அழகுப்படுத்த பயன்படுத்தப்படும் அழகு சாதன பொருளுக்கு சந்தையில் பெரும் கிராக்கி உண்டு.இதனை பயன்படுத்துவதன் மூலம் மேனி அழகாக காட்சியளிக்கும் என்பதே அனைவரின் நம்பிக்கை. இதுதொடர்பில் சந்தையிலுள்ள பொருட்கள்குறித்து நுகர்வோர் அதிகார சபை பாவனையாளர்களின் கவனத்திற்கு பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் அழகு சாதன பொருட்களில் இருந்து நுகர்வோரை பாதுகாக்க தேவையான...
நாட்டிலிருந்து 1100 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்கு திசை வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் நிலவும் தாழமுக்க நிலை எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் வலுவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும் வடமாகாணங்களிலும் , வடக்கு கிழக்கு கடற்கரையோர பிரதேசங்களிலும் இன்று முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும். வடக்கு , வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா...
ஓக்கி சூறாவளி கொழும்பில் இருந்து மேற்கு திசையில் 850 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அரபுக் கடலில் நிலை கொண்டுள்ளது. இந்த சூறாவளி தொடர்ந்தும் நகர்ந்து செல்வதினால் இலங்கை;கு ஏற்படும் தாக்கம் குறைவடையும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் இன்று காலை அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, ஊவா, தெற்கு, மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் 100 மில்லி...
வரவு – செலவுத் திட்டத்தில் பியர் விலையைக் குறைப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனையில் எந்தவித மாற்றமும் செய்யப்படமாட்டாது என, நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மதுபானங்களில் உள்ள மதுசாரத்தின் அளவுக்கு அமைய வரி விதிப்பது என்பது சர்வதேசத்தால் பின்பற்றப்படும் முறை என்றும், அதன் ஊடாக அரச வரி வருமானத்தை பலமானதாக மாற்றிக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்....
காலியின் சிலபகுதிகளில் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக நேற்று இரவு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக கருவாதோட்டம், மாஹப்புகல, வெலிபிட்டிமோதர, உக்வத்த, ஜின்தோட்ட மற்றும் பியன்திகம கிராமசேவையாளர் பிரிவுகளில் இந்த ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. காலி, கிங்தொட்டை என்ற கிராம பகுதியில் அடையாளம் தெரியாத...
இழந்த அதிகாரத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்கான ஒரு மார்க்கமாக அரசியலமைப்பினைப் பயன்படுத்த வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வரவுசெலுவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மஹிந்தவிடம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ”புதிய அரசியலமைப்பினை...
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்புடன் இணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகவிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஒன்றிணைந்த...
Loading posts...
All posts loaded
No more posts