- Saturday
- January 11th, 2025
அரசாங்கத்தின் மந்தகதியிலான செயற்பாடுகள் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள கடும்போக்காளர்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல உந்துசக்தியாக அமைகின்றது என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்று மாலை இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் பிரிவுத் தலைவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத்...
கதிர்காமத்தில் பொலிஸாரின் ஆணையைமீறி பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு காரணம் பொலிஸாருக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படாமையே என சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். கதிர்காமத்தில் அண்மையில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்த காரணத்தினால் அங்கு பதற்ற...
தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கத்தினர் 4 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதனால், 10 தொடரூந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றும் தொடரூந்து இயந்திர சாரதிகளின் சேவை காலம் நீடிக்கப்படாமை மற்றும் புதிய தொடரூந்து இயந்திர சாரதிகள் இணைத்து கொள்ளப்படாமை உள்ளிட்ட 4 கோரிக்கைகளை முன்வைத்து தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கத்தினர் நேற்று...
பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பதுளையிலுள்ள பாடசாலை அதிபர் ஒருவரை தனக்கு முன்னால் மண்டியிட்டு மன்னிப்புக் கோருமாறு நிர்ப்பந்தித்தமை தொடர்பில், குறித்த அதிபரால் முதலமைச்சருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது. அதன்பின்னர் இன்று காலை சட்டத்தரணி சகிதம் பதுளை பொலிஸில் சரணடைந்த ஊவா முதல்வர், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட...
கொழும்பில் உள்ள அமெரிக்க நிலையம் மறு அறிவத்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைநிரப்பு பிரேரணை நிறைவேற்றப்படாமை காரணமாக அமெரிக்க அரசாங்கம் முடங்கியுள்ளமையினாலேயே இந்த நிலையம் மூடப்பட்டுள்ளது. எனினும் கடவுச்சீட்டு மற்றும் வீசா சேவைகள், தூதரகத்தின் ஊடாக தொடர்ந்தும் இடம்பெறும் என...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்கென சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டதே தவிர, தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டை போல சொந்தத் தேவைக்கு அந்த நிதி ஒதுக்கப்படவில்லையென தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கடந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்தமைக்காக, தன்னைத் தவிர கூட்டமைப்பின் ஏனைய...
நாட்டின் அரசியல்வாதிகளில் நூற்றிற்கு 50 சதவீதமானவர்கள் மக்களின் பணத்தை திருடுகின்றனர் என்றும், இதனால் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதில் இடர்பாடுகளை எதிர்கொள்வதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவடிவேம்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”அபிவிருத்தி அடைந்த...
தமது சிபாரிசைப் புறக்கணித்த பாடசாலை அதிபரை ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தன் முன் மண்டியிடச் செய்தது உண்மையே என்பது அம்பலமாகியுள்ளது. ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மற்றும் மாகாண கல்வி வலய அதிகாரிகள் முன்னிலையில், பாதிக்கப்பட்ட பாடசாலை அதிபரே இதை உறுதிசெய்துள்ளார். பதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபர் ஆர்.பவானி. அவருக்கு,...
நாட்டின் பல பாகங்களில் குளிரான இரவுகளுடனும், விடியல்களுடனும் கூடிய வரண்ட காலநிலை நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அடுத்த வரும் நாட்களில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் உறைபனியை அவதானிக்கலாம். ஏனைய பாகங்களில் பொதுவாக சீரான காலநிலை நிலவும். வடக்கு, ஊவா, வடமேல் மாகாணங்களிலும், அம்பாறை,...
ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாடுதழுவிய ரீதியில் உடனடி பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நேற்று மாலை ஊழியர்கள் சிலர் மின்சார சபையின் தலைவரைத் தடுத்து வைத்து, தலைமையக வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து மின்சார சபைத் தலைவரை மீட்டுள்ளனர்....
பெண்கள் மதுபானச்சாலைகளில் பணியாற்ற இடமளிப்பது தற்போது நாட்டில் பெரிய பிரச்சினையாகியுள்ள நிலையில், பெண்களால் எந்த வேலைகளையும் செய்ய முடியும் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ‘நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ளும் சில...
தமது பிரச்சினைகளுக்கு எதிர்வரும் வாரத்திற்குள் தீர்வு கிடைக்காவிட்டால் முன்அறிவித்தல் இன்றி வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. நேற்று இடம்பெற்ற அவசர மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வௌியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 22ம்...
நல்லாட்சி அரசு நிலைத்து இருப்பதன் ஊடாகவே புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் கொழும்பு அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும்,...
அண்மையில் மதுபானம் தொடர்பாக வெளியான வர்த்தமானி அறிவிப்பினை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். அஹலவத்தையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியான வர்த்தமானி அறிவிப்பு நாளை ( இன்று திங்கட்கிழமை) தொடக்கம் ரத்து செய்யப்படும்...
தற்போதைய அரசாங்கத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் களவு செய்ய மாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். வெயங்கோட பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “தற்போதைய அரசாங்கத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் களவு செய்ய மாட்டார்கள். என்றாலும் அமைச்சர்களும்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே என்று ஜனாதிபதி செயலகத்திற்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2015 ஜனவரி 9ஆம் திகதி முதல் ஆறு வருட காலத்திற்கு ஜனாதிபதி பதவி வகிக்க முடியும் என சட்டமா அதிபர் திணைக்களம் உச்ச நீதிமன்றத்திற்கு கடந்த வாரம் அபிப்ராயத்தை வெளிப்படுத்தியிருந்தது. இது கடுமையான வாதப்பிரதி வாதங்களை தோற்று...
வாகன விபத்தில் உயிரிழப்பவர்களின் அவயவங்களை தானம் செய்யும் அனுமதியை சாரதி அனுமதிப் பத்திரத்தின் ஊடாக வழங்குவதற்குரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் சஞ்சீவ பந்துகீர்த்தி இதுதொடர்பாக தெரிவிக்கையில் . தமது அவயவங்களை தானம் செய்ய விரும்புவோர் சாரதி அனுமதிப் பத்திரத்தில் அதனை குறிப்பிடுவதன் மூலம் இந்தப் பணியை துரிதமாக மேற்கொள்ள முடியும்...
தமிழ் மாணவர்கள் ஐவர் உட்பட 11 தமிழர்கள் வெள்ளை வானில் கடத்தி காணாமல் போகச்செய்த விவகார வழக்கில், இலங்கை கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி தஸநாயக்க உட்பட 6 சந்தேக நபர்களையும் விடுவித்து கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, கொழும்பு கோட்டை...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு வருடங்களுக்கு பதவியில் நீடிக்கலாம் என சட்டமா அதிபர் தனது கருத்தை நீதிமன்றில் முன்வைத்துள்ளார். எத்தனை ஆண்டுகள் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபிப்பிராயம் கோரியிருந்த நிலையில் அது குறித்து ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு ஆராய்ந்து வருகின்றது. பிரதம நீதியசர் பிரியசாத் டெப்...
நாட்டிலுள்ள மதுபான உற்பத்தி நிலையங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் பெண்கள் பணிபுரிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சு தெரியவித்துள்ளது. மது ஒழிப்பினை தனது தேர்தல் பிரசாரங்களின் போது வாக்குறுதிகளை வழங்கிய நல்லாட்சி அரசாங்கம் 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பியரிற்கு விலை குறைப்பினைச்...
Loading posts...
All posts loaded
No more posts