- Thursday
- January 2nd, 2025
இலங்கை ஜன நாயக சோஷலிசக் குடியரசின் முதல் பெண் பிரதம நீதியரசரான கலா நிதி ஷிராணி பண்டாரநாயக்கவைப் பதவிநீக்கம் செய்யும் குற்றவியல் பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் 106 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. (more…)
நாட்டின் இறைமையைப் பாதுகாத்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் போது எந்த அழுத்தங்களுக்கும் இடமளிக்கக் கூடாது. மக்கள் ஆணையையும் அவர்களுக்கான உரிமையையும் எவரும் காட்டிக்கொடுக்க இடமளிக்க முடியாது மக்கள் எதிர்பார்ப்பையும் அபிலாசைகளையும் நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவது முக்கியமென தெரிவித்த ஜனாதிபதி எமக்காக மக்கள் என்றில்லாமல் மக்களுக்காக நாம் என செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். (more…)
மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதான 15 அதிகாரங்கள் "திவிநெகும' சட்டத்தின் மூலம் பலவந்தமாகப் பறிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த தமிழ்க் கூட்டமைப்பு, தமிழர்களை அடிமைப்படுத்தும் சர்வாதிகாரச் சட்டமே இது என்றும் (more…)
திவிநெகும சட்டமூலம் நிறைவேற்றம் திவிநெகும சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. (more…)
அரசாங்க மருத்துவ நிர்வாக சேவையில் கடமையாற்றும் மருத்துவ நிபுணர்கள் தனியார் வைத்தியசாலைகளில் பணியாற்றுவதைத் தடை செய்யப்படும் இது தொடர்பாக விசேட சுற்றறிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயத்திலக்க தெரிவித்தார். (more…)
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க, இந்த ஆண்டில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்த பாய ராஜபக்ஷ தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரி வித்துள்ளார். (more…)
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க, ஜனாதிபதியிடம் தொடர்ந்தும் கொடுத்து வந்த வலியுறுத்தல் காரணமாகவே அவரின் கணவரை ஜனாதிபதி தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக நியமித்தார் என்று அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். (more…)
ஒருவரின் குற்றத்தை ஆராய்வதற்கு நாடாளுமன்றத் நிலையியற் கட்டளைக்கு அதிகாரமில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளை ரத்து செய்யுமாறு கோரி, பிரதம நீதியரசர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். (more…)
இலங்கையின் தலைமை நீதிபதியை குற்றஞ்சாட்டி பதவி நீக்கம் செய்ய எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள் தொடர்பில், நாடாளுமன்ற தேர்வுக் குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்களில் சிலர் நீதிமன்றத்தின் அறிவிப்பை ஏற்று தமது கருத்துக்களை தெரிவிக்கவுள்ளனர். (more…)
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணையை விசாரிக்கவென நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ள எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுக்குழு தலைவர், அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடம் கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்துள்ளனர். (more…)
2014ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடாத்த வாய்ப்பு உண்டு என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.நேற்று மாலை கண்டி கட்டுகஸ்தோட்டையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். (more…)
எந்தவொரு சூழ்நிலையிலும் எழுத்து மூலமான உறுதிமொழியின்றி தொழிற்சங்கப் போராட்டத்தை கைவிடத் தயாரில்லை என பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் தலைவர் நிர்மால் ராஞ்சித் தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க அரச சார்பற்ற நிறுவனங்கள் நிதி உதவி அளிப்பதாக செய்யப்படும் பிரசாரங்களில் உண்மையில்லை.இரண்டு மாதங்களாக சம்பளம் பெற்றுக் கொள்ளாத காரணத்தினால் சில விரிவுரையாளர்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி...
லொத்தர் பரிசு கிடைத்திருப்பதாக கூறி, இலங்கையர்களை ஏமாற்றிய நைஜீரிய பிரஜையொருவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். (more…)
பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் ஜுலை 4ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.எதிர்வரும் ஜுலை 4ஆம் திகதி தொடக்கம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனதிற்கும் நிதி அமைச்சிற்கும் இடையில்...
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவி விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்காக இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. கட்சியின் தலைமைப் பதவி தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவும், கரு ஜயசூரியவும் போட்டியிடவுள்ளனர்.தலைவர் பதவிக்கு எழுந்திருந்த நெருக்கடிக்கு இணக்கப்பாட்டுடன் தீர்வை எட்ட முடியாத நிலையிலேயே இரகசிய வாக்கெடுப்பினை நடத்த நேற்று கூடிய செயற்குழு முடிவு செய்துள்ளது.இன்று திங்கட்கிழமை நண்பகல்...