ஐ.நா. அமர்வில் ஜனாதிபதி மகிந்த நாளை விசேட உரையாற்றுகிறார்!

வடமாகாண சபைத் தேர்தல் தோல்வித் தகவலுடன் நேற்று அதிகாலையில் நியூயோர்க் நகருக்கு பயணமாகிச் சென்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபையின் 68வது பொதுச்சபை அமர்வில் நாளை செவ்வாய்க்கிழமை உரையாற்றவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, 2005 ம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் 6வது தடவையாக...

வடக்கை 2 வருடங்களில் பெளத்த மயமாக்கத் திட்டம்?

"இன்னும் இரண்டு வருடங்களுக்குள் வடக்கு, கிழக்கு பகுதிகளை முற்று முழுதாக பெளத்த மயமாக்குவோம். இலங்கை முழுவதையும் பெளத்த கொள்கையின் கீழ் ஒரே சமூகமாக மாற்றும் திட்டத்தில் (more…)
Ad Widget

தேர்தலுக்கு பின் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தை பயன்படுத்த கூடாது!- அரசு எச்சரிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆய்வு செய்த போது நாட்டை இரண்டாக பிளவுப்படுத்தும் பயணத்தை அந்த கட்சி மேற்கொண்டு வருவது தெரிவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தை தேர்தலுக்கு பின்னர் தனது தேர்தல்...

ஓமந்தை சோதனை சாவடியில் சோதனைகள் நிறுத்தம்

ஓமந்தை இராணுவ சோதனையில் சகல சோதனைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்தார். (more…)

ஓமந்தை சோதனைச்சாவடியை அகற்ற அமைச்சரவை இணக்கம்?

வவுனியாவில் உள்ள ஓமந்தை சோதனைச் சாவடியில் இப்போது நடைமுறையில் இருக்கும் பயணிகள் மீதான சோதனை நடவடிக்கைகளை முற்றாக நிறுத்திக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. (more…)

எரிகல் மழைப் பொழிவு ஓகஸ்ட் 10 முதல் 13 வரை இலங்கையில் காணலாம்

ஆகஸ்ட் 10ஆம் (இன்று)திகதி முதல் 13ஆம் திகதி வரை எரிகல் பொழிவை இலங்கையில் காண முடியுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல்துறை பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார். (more…)

அங்கர், மெலிபன், டயமன்ட் பால்மாக்களில் நச்சு இரசாயனம்: விற்பனைக்கு தடை

டீ.சீ.டீ என்றழைக்கப்படும் டய்சைனைட் டயமைட் எனும் நச்சு இரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பால்மா மாதிரிகளை இரசாயன தொழில்நுட்ப நிறுவனத்தில் பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் மஹிபால ஹேரத் தீர்மானித்துள்ளார். (more…)

வெலிவேரியவில் இடம்பெற்ற சம்வம் விரைவில் எமக்கும் :: எம்.ஏ.சுமத்திரன் தெரிவிப்பு

அரசிற்கு ஏதிராக நடவடிக்கையில் ஈடுபட்டால் வெலிவேரியவில் இடம்பெற்றது போன்றே எமக்கும் இடம்பெறும்.இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமத்திரன் (more…)

வடக்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான பணிகளை துரிதப்படுத்துக; ஜனாதிபதி

வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளை துரிதப்படுத்தி போக்குவரத்தினை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். (more…)

‘மெட்ராஸ் கஃபே’வுக்கு ஜனாதிபதி மஹிந்த முதலிடவில்லை: ஆப்ரகாம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான 'மெட்ராஸ் கஃபே' திரைப்படத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதியுதவி வழங்கவில்லை என்று அத்திரைப்படத்தின் கதாநாயகனான நடிகர் ஜோன் ஆப்ரகாம் தெரிவித்துள்ளார். (more…)

படகு விபத்தில் இலங்கையர்கள் மூவர் உட்பட 9 பேர் பலி

இலங்கையர் உட்பட சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுடன் இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 3 இலங்கையர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். (more…)

போதைப் பொருளினை இல்லாதொழிப்போம்: பொதுபல சேனாவின் அதிரடி முடிவு

போரின் போது உயிரிழந்தவர்கைள விடவும் போதைப் பொருள் பயன்பாட்டினால் அதிகளவானர்கள் உயிரிழப்பதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. (more…)

வி.ஐ.பி. யாகும் வேடர்களின் தலைவர்!

வேடர்களின் தலைவர் ஊருவரிகே வன்னிலத்தோவுக்கு முக்கிய பிரமுகர் (வி.ஐ.பி.) அந்தஸ்தை அளித்துள்ள அரசாங்கம், அவருக்கான உத்தியோகபூர்வ வாகனம் ஒன்றையும் அளித்துள்ளது. (more…)

இழந்து போன உறவுகளைத் தவிர அனைத்தையும் வழங்குவோம்! நாட்டை துண்டாடாமல் நட்புடன் வாழுங்கள்!- ஜனாதிபதி

துண்டாடுவதற்கு இலங்கை ஏனைய நாடுகளைப் போன்று விசாலமான நாடல்ல. இலங்கை ஒரு சிறிய நாடு என்பதைச் சகலரும் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். (more…)

ஜனாதிபதி – சம்பந்தன் சந்திப்பு

இலங்கையின் தேசியப் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் தீர்க்கப்பட வேண்டியுள்ள சகல விவகாரங்களையும் தீர்த்துவைப்பதில் தனக்கு ஆர்வம் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் இன்று காலை அவரை சந்தித்துப் பேசினார். பிரிபடாத- ஐக்கிய இலங்கைக்குள்...

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்கள் தரம் குறைந்தவை!

இலங்கை வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துப் பொருட்கள் பலவும் தரம் குறைந்தவை என சுகாதார சேவை தொழிற்சங்க சம்மேளன முன்னணி குற்றஞ்சுமத்தியுள்ளது. (more…)

“அமிர்தலிங்கம், சம்பந்தனால்தான் போராட்டத்தில் இறங்கினோம்” -விநாயகமூர்த்தி முரளிதரன்

கடந்த காலத்தில் அமிர்தலிங்கம், சம்பந்தன் போன்றவர்களின் வார்த்தைகளைக் கேட்டு நாங்கள் போராடினோம். அவர்கள் கூறியபடியால்தான் போராட்டத்தில் இறங்கினோம். ஆனால் இறுதியில் என்ன நடந்தது? (more…)

திருமலையில் 5 மாணவர்கள் கொலை; 12 பொலிஸார் கைது

2006ஆம் ஆண்டு திருகோணமலையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 12 விசேட (more…)

அணுத் தொழில்நுட்பம் தொடர்பில் ரஸ்யாவுடன் இலங்கை உடன்படிக்கை

அணுச் சக்தி தொழில்நுட்பம் தொடர்பில் இலங்கை ரஸ்யாவுடன் உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டுள்ளது. (more…)

புலிக்கொடியுடன் ஓடியவருக்கு பிடியாணை

ஐக்கிய இராஜியத்தில் கார்டிஃப் நகர மைதானத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடியவருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts