- Sunday
- January 12th, 2025
ஹப்புத்தளை - ஹல்துமுல்ல - மீறியபெந்த பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மூவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.எல்.உதயகுமார தெரிவித்தார். (more…)
பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவுக் காரணமாக 6 லயின் குடியிருப்புகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய பொது நீதிமன்றம் நீக்கியதையடுத்து குமரன் பத்மநாதனூடாக (கே.பி.) தமிழீழ விடுதலை புலிகளின் சொத்துக்களை ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கம் பயன்படுத்தக்கூடுமென பிரதம எதிர்கட்சியான ஐ.தே.க. குற்றம் சாட்டியுள்ளது. (more…)
ஹைலன்ட் பால்மா மற்றும் யோகட் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று கால்நடை மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எச்.எல். திசேரா தெரிவித்தார். (more…)
2015 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்ற நிலையில் எதிர்க்கட்சி எம்.பி ஒருவர், இரண்டு கரட்டுகளுடன் நேற்று திங்கட்கிழமை அவைக்கு வருகைதந்திருந்தார். (more…)
பொது வேட்பாளரை நிறுத்தி தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்துவதே எதிர்க்கட்சிகளின் முக்கிய யுக்தியாக இருக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் கூறியுள்ளார். (more…)
இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாட்டில் இலங்கையில் பிறந்தவர்களுக்கு மாத்திரம் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. (more…)
ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு வருகைதந்த பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் இன்று திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். (more…)
சுயநிர்ணயக் கோரிக்கை தலைதூக்காது இருக்க வேண்டும் என்றால் 13ம் திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். (more…)
இலங்கையில் காணாமல்போனவர்களின் தேசிய நினைவுதினம் இன்று திங்கட்கிழமை நடக்கவுள்ளநிலையில், அந்த நிகழ்வுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர். (more…)
அடுத்த நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நேற்று பி.பகல் 1.33 மணியளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. (more…)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சர் என்ற முறையில் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் வரவு - செலவு திட்ட யோசனையை முன்வைத்தார். இதன் பின்னர் நாடளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களைச் சந்தித்து அளவளாவினார். (more…)
அடுத்த வருடத்துக்கான வரவு - செலவு திட்டம் நிதியமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் போதான நேரடி காட்சிகளை இங்கே காணலாம். (more…)
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலப் பிரதியை காணவில்லை என திவயின செய்தி வெளியிட்டுள்ளது. (more…)
"ஜனாதிபதித் தேர்தல் விவகாரத்தில் தேர்தல்கள் ஆணையாளரின் அதிகாரம் மீறப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணையாளருக்கு உரியது. இன்று இந்த அதிகாரம் மீறப்பட்டுள்ளது. இதேபோல் ஜனாதிபதித் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை ஆணையாளரே தீர்மானிக்கவேண்டும். (more…)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் எதிர்வரும் 2015ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. (more…)
பல நாடுகளில் அதிகரித்துவரும் தீவிரவாத நடவடிக்கைகள் தற்போது கனடாவிலும் தலைதூக்கியிருப்பது கவலையளிக்கின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட வீரருமான டி.எம். டில்ஷானின் ஆடம்பர ஹோட்டல் 'டி பெவிலியன் இன்' நேற்று முந்தினம் (21) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts