- Monday
- January 13th, 2025
2015 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் ஆசிர்வாதம் பெற்றார். முதலில் பேலியகொடை வித்தியலங்கார பிரிவினாவுக்கு சென்ற ஜனாதிபதி பிரிவினாவின் அதிபர் களனி பல்கலைக்கழக வேந்தர் வண.வெலிமிட்டியாவே குசலதம்ம நாயக்க தேரரைச்சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார். பிரிவினாவுக்கு வருகை தந்திருந்த பொதுமக்களும் ஜனாதிபதிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்....
ஆளும் கட்சியில் இணைந்துகொண்ட திஸ்ஸ அத்தநாயக்காவிற்கு சுகாதார அமைச்சுப் பதவி வழங்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். (more…)
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் சமர்பிக்கப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களும், 1981ஆம் ஆண்டு தேர்தல் சட்டதின் 15ஆம் இலக்க இலக்க தேர்தல் சட்டப்பிரமாணங்களின் படி தேர்தல் சட்டவிதிகளுக்கிணங்க கையளிக்கப்பட்டமையால், அனைத்து வேட்பு மனுக்களும் தம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய சற்று நேரத்துக்கு முன்னர் தெரிவித்தார். இதன்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட 17...
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கை இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் தற்போது நடைபெறுகின்றது.
நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்த ஏ.எச்.எம்.அஸ்வர், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற விவகாரங்கள், வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் தொடர்பாடலுக்கான ஜனாதிபதியின் சிரேஷ் ஆலோசகராகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அஸ்வருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வழங்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்றே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆராயும் என்று இலங்கையின் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிபிசிக்கான பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் போர் முடிவுக்கு வந்துவிட்டாலும், தமிழர்களின் பிரச்சினை இன்னமும் தீரவில்லை...
விடுதலைப் புலிகளின் வங்கிகளில் மக்களால் அடகு வைக்கப்பட்ட மற்றும் படையினரால் கண்டெடுக்கப்பட்ட நகைகளை அவர்களுக்கு மீளக் கையளிக்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது அயிரத்து 960 பேருக்கு தங்க நகைகள் மீளளிக்கப்பட்டன. மன்னாரைச் சேர்ந்த 223 பேருக்கும், வவுனியாவைச் சேர்ந்த 319 பேருக்கும்,...
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் 75 சதவீதத்தை நானே வெற்றிகொண்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று இடம்பெற்ற, எதிரணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'இந்த யுத்தத்தை நடத்தியதும் அதில் வெற்றிகொண்டதும் சரத் பொன்சேகாவே. யுத்தத்தின் 75 சதவீதமானவை எங்களது, அரசாங்கத்தின்போதே வெற்றிகொள்ளப்பட்டது. நாம்...
இம்முறை ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடனேயே நான் போட்டியிடுகின்றேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை (05), அலரி மாளிகையில் வைத்து தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்கள் ஊடகங்களின் பிரதானிகளைச் சந்தித்த ஜனாதிபதி, மேற்கண்டவாறு தெரிவித்தார். 'நான் போட்டியிடுவது சந்திரிகாவுடனேயே. இது மங்கள – சந்திரிகா ஒற்றுமையாகும். ரணிலுக்கு இன்னும்...
நாட்டின் தேசிய இனமான தமிழ் மக்களுக்காக உண்மையான உணர்வுகளோடு போராடி மரணித்த மாவீரர்களையோ, தியாகத்திற்கு உரித்தான போராளிகளையோ தேர்தல் பிரசாரங்களின்போது கொச்சைப்படுத்தவோ, அதை ஒரு கருப்பொருளாகக் கொள்ளவோ வேண்டாம் என மேல் மாகாண சபையின் ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர் சண்.குகவரதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மொறட்டுவ பல்கலைக்கழக பழைய மாணவர்களுடனான சந்திப்பில் 'இன்றைய சூழலில் ஜனாதிபதி...
ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனத்தினால் உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு வருடமும் தயாரிக்கப்படும் அதிக இலஞ்சம் பெறும் நாடுகளின் பட்டியலின் 2014ஆம் ஆண்டுக்கான தரப்படுத்தலில் இலங்கை 85ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. 175 நாடுகளை மையப்படுத்தியே 2014ஆம் ஆண்டுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 85ஆவது இடத்தில் இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிரண்டும் இடம்பிடித்துள்ளன. உலக வங்கி மற்றும்...
ஜனவரி 8ம் திகதிக்குப் பின்னரும் நானே இந்த நாட்டின் ஜனாதிபதி என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் 8ம் திகதியின் பின்னரும் நானே ஜனாதிபதி அதில் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இந்த நாட்டை கட்டியெழுப்ப அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது. நாட்டில் நிலவிய அரிசி தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்து அதனை...
ராஜபக்ச படையணியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர மைத்திரிபால சிறிசேனவை நாம் பொது வேட்பாளராகக் களமிறக்கிப் போராட்டம் செய்கின்றோம், என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கெளதம புத்தர் சமாதானமாக ஒன்று கூடுங்கள், சமாதானமாகப் பேசுங்கள், சமாதானமாகக் கலைந்து செல்லுங்கள் எனப் போதனை செய்தார். ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசினர்...
பொது எதிரணிகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கொழும்பு விகாரமகாதேவி திறந்தவெளியில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளது. (more…)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகவும் ஆட்சிக்கு வருவாரானால் அவர் நிச்சயமாக ஒரு சர்வாதிகாரியே. இவ்வாறு தெரிவித்துள்ளார் பொது எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன. பொலன்னறுவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது முதலாவது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றகையில் தெரிவித்தவை வருமாறு:- நாடாளுமன்றத்தில் மூன்றில்...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று முன்தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பில், அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, டளஸ் அழகப்பெரும, அநுர பிரியதர்ஷன யாப்பா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி, கல்முனை மாநகர...
இலங்கையில் பதுளை மாவட்டத்தில் ஒரு மாதத்துக்கு முன்னர் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மீரியபெத்தை தேயிலைத் தோட்ட மக்களின் நினைவாக மலையகத்தின் சில இடங்களிலும் தலைநகரிலும் அஞ்சலி நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை நடந்துள்ளன. இதனிடையே, பாதிக்கப்பட்டு தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக சிவில் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். தற்போது தற்காலிகமாக பழைய தேயிலைத்...
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இருதரப்பிலும் ஏட்டிக்குப் போட்டியான ஊடகவியலாளர் சந்திப்புகளும் பிரசார நிகழ்வுகளும் தொடங்கியுள்ளன. (more…)
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இதுவரையிலும் எவ்விதமான பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என்று எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். (more…)
"ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதியாகிவிட்டது. நாட்டுக்கு விடிவு காலம் நெருங்கிவிட்டது. எனவே, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் அணிதிரளவேண்டும்" என்று மஹிந்த அரசிலிருந்து எதிரணியில் இணைந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். "தெற்கில் பேசப்படும் அளவுக்கு வடக்கில் சுதந்திரம் இல்லை. வடக்கு மக்களின் நிலைமை மிகவும் அபாயகரமானதாக உள்ளது. எனவே, அவர்களுக்கும், முழு...
Loading posts...
All posts loaded
No more posts