- Friday
- January 10th, 2025
எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி அன்று நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அலுவலர்கள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA), இந்தியாவுடனான எட்கா (ETCA) உடன்படிக்கை உட்பட பல பிரச்சினைகளை முன்வைத்து இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக...
இலங்கையில் புகழ் பூத்த இராவணா எல்ல நீர்வீழ்ச்சியை காணவரும் சுற்றுலா பயணிகள், அங்கு குளிக்க வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். பண்டாரவளையில் தற்போது நிலவும் அடை மழை காரணமாக ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது. இதனால் குறித்த நீர்வீழ்ச்சியில் ஆபத்தான நிலைமை காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக உள்நாட்டு...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு ரயில்வே ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அனுமதி கிடைத்துள்ள போதிலும், அமைச்சரவை இதுவரை அனுமதி வழங்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தமக்கான ஊதியம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்திற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை என தெரிவித்தும், அதற்கான அனுமதியை வழங்குமாறும் குறித்த தொழிற்சங்கங்கள் கோரிக்கை...
இலங்கை மின்சார சபையில் பெருமளவு மோசடிகள் இடம்பெறுகின்றன என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குற்றஞ்சாட்டியுள்ளார். “இலங்கை மின்சார சபைக்கு வரும் ஒவ்வொரு நிலக்கரி கப்பலுக்கும் 120 மில்லியன் ரூபா மோசடி செய்யப்படுகிறது. விநியோகிக்கப்படும் மின்சாரத்தில் ஒவ்வொரு அலகுக்கும் 14 ரூபா மோசடி செய்யப்படுகிறது. மின்சாரத் துறையில் முதலீடு செய்ய முன்வந்த வெளிநாட்டு...
உழைப்பின் மகிமையை உலகிற்கு எடுத்தியம்பும் தொழிலாளர் தினம், இலங்கையில் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. மே முதலாம் திகதி கொண்டாடப்படும் தொழிலாளர் தினமானது, வெசாக் வாரத்தை முன்னிட்டு இன்றைய தினத்திற்கு பிற்போடப்பட்டது. அந்தவகையில், இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் பேரணிகளும், ஊர்வலங்களும் இடம்பெறவுள்ளன. இற்றைக்கு 132 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் திரண்ட தொழிலாளர்கள் 8...
முன்னறிவிப்பு இன்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவிருப்பதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை செய்துள்ளது. சிங்கபூருடனான வர்த்தக உடன்படிக்கை மற்றும் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக உத்தேச சட்ட மூலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பீடத்தின் ஊடாக வழங்கப்பட்ட...
இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் 91 எச்.ஐ.வி நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக பாலியல் சார் நோய் மற்றும் எச்.ஐ.வி தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பாலியல்சார் நோய் மற்றும் எச்.ஐ.வி தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் டிலானி ராஜபக்ஷ கூறுகையில், "கடந்த வருடம்...
புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்படி புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் விபரங்கள் வருமாறு, பிரதி அமைச்சர்கள் 1. உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி – முத்து சிவலிங்கம் 2. மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி...
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையின் படி, சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையின் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூட்டு எதிர்க் கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பந்துல இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது இவர் மேலும்...
முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மானிகளை (மீற்றர்) பொருத்துவதற்காக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முச்சக்கர உரிமையாளர் சங்கம் முன் வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் கலாநிதி சிசிர கோதாகொட தெரிவித்தார். முச்சக்கர வண்டிகளுக்கு நேற்று முதல் கட்டண மானி பொருத்தப்படுவது...
இலங்கையில் மதங்களிற்கு இடையே குரோதங்களை பரப்புவதற்கு பேஸ்புக்கை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என 12 சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கையை சேர்ந்த 12 சிவில்அமைப்புகள் இது தொடர்பில் பேஸ்புக்கின் பிரதான நிர்வாகிக்கு பகிரங்க கடிதமொன்றை எழுதியுள்ளன. இலங்கையில் மதங்களிற்கு இடையே குரோதத்தினை பரப்புவதற்கு பேஸ்புக் பயன்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள சிவில் அமைப்புகள் இதனை கட்டுப்படுத்தவேண்டும்....
நாட்டில் மாலை வேளைகளில் பல பிர தேசங்களிலும் பெய்துவரும் மழையுடனான கால நிலை எதிர்வரும் 16ஆம் திகதிவரை தொடரும் சாத்தியம் இருப்பதாக வளி மண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்போது இடியுடன்கூடிய மழை பெய்யும்போது பாரிய மின்னலுடன் மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 வரையான வேகத்தில் காற்று வீசும் அபாயம் இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இதேவேளை, இன்றைய...
புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களின் நலன் கருதி இன்று முதல் விஷேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக புகையிரத திணைக்களம் கூறியுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 17ம் திகதி வரை இந்த சேவை முன்னெடுக்கப்படும் என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது. இன்று காலை முதல் கொழும்பு கோட்டையில் இருந்து பண்டாரவளை மற்றும் மஹவை வரை குளிரூட்டப்பட்ட...
சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று நேற்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. ரணிலுக்கு எதிரானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்...
இலங்கை போக்குவரத்து சபையில் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோருக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றது. இவற்றுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளும் விண்ணப்பிக்கலாமென, போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகன சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளின் விவாதம் இடம்பெற்றது. இதன்போது புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கு...
மகிந்த அணியினரால் கொண்டுவரப்பட்ட அவநம்பிக்கைப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டதன் ஊடாக, நாடாளுமன்றம் பிரதமரது அதிகாரத்தை மீள ஸ்தாபித்துள்ளது. நேற்றையதினம் இந்த பிரேரணை மீதான விவாதம் 12 மணி நேரமாக இடம்பெற்றிருந்தது. இதனை அடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில், 46 மேலதிக வாக்குகளை அவநம்பிக்கை பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 76 பேரும், எதிராக 122 உறுப்பினர்களும் வாக்குகளைப் பயன்படுத்தி...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரவளிக்கப்போவதில்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் இதனை அறிவித்தார். “தேசிய அரசுக்கு தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆணையை மக்கள் வழங்கினர். ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த ஆணையை நிறைவேற்றவேண்டும் என்ற அழுத்தத்தை கொடுக்கும்....
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்தே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வாக்களிக்கும் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இன்று காலை இடம்பெறவுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் போது நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதென்ற முடிவை உத்தியோகபூர்வமாக எடுத்து ஊடகங்களுக்கு அறிவிக்கவுள்ளனர். தற்போதைய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைவரத்தை ஆராய்ந்துபார்க்கையில் தமிழ்த்...
எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சம்பந்தன், ”நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இன்றிரவு அல்லது...
பிரதமருக்கு எதிராக கூட்டு எதிர்கட்சியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிதானந்த அளுத்கமகே, பாராளுமன்றத்தை பிரநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமது ஆதரவினை வழங்க தீர்மானித்துள்ளது. ஆனால் தமிழ் கூட்டமைப்பு குறித்த விடயம் தொடர்பில் ஒருதலைப்பட்சமாகவெ செயற்பட்டு வருகின்றது...
Loading posts...
All posts loaded
No more posts