- Monday
- January 13th, 2025
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முடிவுசெய்துள்ளார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அண்மையில் சத்தியப்பிமான செய்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலியும் கலந்துகொண்டுள்ளார். இதேவேளை, தற்போது அவர்கள் இருவரும் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி கொண்டிருக்கின்றனர். அதில் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர்...
வெள்ளப் பாதுகாப்பு அணை உடைப் பெடுத்துள்ளதால் மூதூர் பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேருவில பிரதேசத்திலுள்ள 'வெள்ளம் தாங்கி' என்னும் பகுதியிலேயே பாதுகாப்பு அணை நேற்றிரவு அல்லது இன்று அதிகாலைவேளையில் உடைப்பெடுத்துள்ளதாக தெரிய வருகிறது. 1958ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்குப் பின்பு மூதூர் மற்றும் சேருவில பிரதேசத்தின் சில பகுதிகளை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும்...
வட பகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக வருகின்ற வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய இந்த அறிவிப்பை வெளியிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு: வட பகுதிக்கு வெளிநாட்டவர்கள் வருவதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நாங்கள் நீக்கவில்லை. பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி...
இகினிம்பிட்டிய மற்றும் தம்போவ நீர்த்தேக்கங்களில் மேலதிக நீர், அணையை மேவி பாய்வதனால் புத்தளத்தில் பல பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதுவரையிலும் சுமார் 2000 பேர் இடம்பெயர்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதே வேளை எளுவங்குளத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, மன்னார்- புத்தளம் பழைய வீதி மூடப்பட்டுள்ளது.
நாடு முழுக்க வாழும் தமிழ் பேசும் மக்கள், ஜனவரி எட்டாம் திகதி காலை ஏழு மணிக்கும் பத்து மணிக்கும் இடையில் தமது வாக்குகளை அளித்து விட வேண்டும். அன்று மாலை நேர வாக்களிப்பு வேண்டாம். தாமதம் வேண்டாம். மாலை நான்கு மணிவரை வாக்களிப்புக்கான வாய்ப்பு இருந்தாலும் நாம் நேர காலத்துடன் வாக்களிப்பது நமது வீட்டுக்கும், நமது...
நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளியேன் என பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனமான 100 நாட்களில் புதிய நாடு, கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவின் திறந்தவெளி அரங்கில் தற்போது வெளியிட்டு வைக்கப்பட்டது. விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போது விஹாரமஹாதேவி பூங்காவில் மின்தடையும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில்லை என்பதும் நீதிமன்றத்தால் பிரிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதில்லை என்பதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் தெளிவான கொள்கையாகும். ஆனால், இந்த விடயங்களில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடு என்ன என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கேள்வியெழுப்பினார். பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர்...
"தற்போதும் இலங்கையின் பிரதம நீதியரசர் நானே. எனக்கு எதிர்காலத்தில் நியாயம் கிடைக்கும். அரசியலுக்கு வரும் எவ்வித நோக்கமும் எனக்கில்லை." இவ்வாறு மஹிந்த அரச தரப்பினரால் குற்றப் பிரேரணை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க நேற்றுத் தெரிவித்தார். 2013 ஜனவரி முதல் தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் என்றும்,...
இலங்கையிலிருந்து வறுமை மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ள ஊழல் என்பவற்றை முற்றாக ஒழிப்பதே தனது இலக்கு என ஜனாதிபதி மஹிந்த ராஷபக்ஷ தெரிவித்தார். கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் இடம்பெற்ற momentum வர்த்தக கலந்துரையாடலில் புதன்கிழமை(17) கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை கூறினார்.
அபிவிருத்தி என்ற பெயரில் அனைத்து துறைகளிலும் இராணுவ ஆக்கிரமிப்பினை மேற்கொள்ளும் இராணுவ ஆட்சி எமது அரசாங்கத்தில் இருக்காது. எமது ஆட்சியில் அதன் கடமையினை மட்டுமே இராணுவம் செய்யும் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை மறைக்கப்பட்டு விட்டது. அதனை மீட்டெடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார். சுற்றுலாத்துறை சார் வர்த்தகர்களுடனான சந்திப்பொன்றை நேற்று...
திருமணம் முடிக்காத பொலிஸார் தங்குகின்ற விடுதிகளுக்காக இதுவரை காலமும் அறவிடப்பட்ட நீர் மற்றும் மின்சாரம் பட்டியல்களுக்கான கட்டணங்கள் இனிமேல் அவர்களிடமிருந்து அறவிடப்படமாட்டாது என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படும் என்றும் தலைமையகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருமணம்...
அவுஸ்திரேலியா, சிட்னி நகரின் மத்தியில் உள்ள உணவகம் ஒன்றில் 13 பேரை தீவிரவாதிகள் பிணைய கைதிகளாக பிடித்து வைத்துள்ளமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜஸபக்ஷ கண்டம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் தனக்கு ஆழ்ந்த கவலையளிப்பதாகவும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை அவுஸ்திரேலியாவுடன் ஒன்றுபட்டு நிற்பதாகவும் கூறியுள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடிசன கணக்கெடுப்பின் போது இலங்கையின் சனத்தொகை 20.4 மில்லியன் என கண்டறியப்பட்டுள்ளது என தொகை மதிப்பீட்டு புள்ளிவிபர திணைக்கள பணிப்பாளர் நாயகம் டி.பீ. குணவர்தன தெரிவித்தார். நேற்று கொழும்பு சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் நடத்தப்பட்ட குடிசன வீட்டுவசதிகள் 2012 பிரதான தேடல்களுக்கான கருத்தரங்கின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில்...
"சில அம்மையார்கள் வந்து எதற்கும் பயப்பட வேண்டாம் என்று கூறுகின்றனர். அத்துடன் எமக்கு எதிராக ஆணைக்குழு அமைத்து விசாரிக்கப்போகிறார்களாம். ஆணைக்குழுவை அமையுங்கள். நாங்கள் பயப்படவில்லை. எனது கையில் இரத்தம் தோயவில்லை. எனது கையில் அழுக்குப் படியவில்லை. அவ்வாறு இரத்தம் தோய்ந்தும் அழுக்குப் படிந்தும் இருந்தால் எனது கைகளை நானே வெட்டிவிடுவேன்." - இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த...
கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய, ஹோகந்தரவில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அன்டனோவ் 32 ரக விமானமே இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கட்டுநாயக்கவிலிருந்து ரத்மலானை நோக்கிப் பயணித்த சில நிமிடங்களிலேயே விமானத்தின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது. அனைத் தொடர்தே விமானம் விபத்துக்குள்ளானது....
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்களை, தேர்தல்கள் செயலகம், வெளியிட்டுள்ளது. நேற்று (10) வெளியிடப்பட்டுள்ள சின்னங்களே எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் 4 மணிவரை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க பயன்படுத்தப்படும் வாக்கச் சீட்டுக்களில் அச்சடிக்கப்படும் என...
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அண்மையில் அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட நிலையில், சுகாதார அமைச்சராக இன்று வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். கண்டியிலுள்ள ஜனாதிபதி இல்லத்தில் இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு நீண்ட காலமாக நாடாளுமன்றத்தில் தக்கவைத்துவந்த 3/2 எனும் பெரும்பான்மை பலத்தை தற்போது இழந்துள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் வரை 160 எனும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி புரிந்த ஜனாதிபது மகிந்த ராஜபக்ச அரசு தற்போது எதிரணியில் இருந்து அரச பக்கம் சென்ற திஸ்ஸ அதநாயக்க மற்றும் ஜெயந்த கோட்டகொட...
மலையக மக்களின் நலன்கள், குறிப்பாக அவர்களின் வீடமைப்புத் திட்டத்துக்கு முன்னுரிமை, அங்குள்ள மக்களுக்கு கல்வி மற்றும் வேலையில் கூடுதல் வாய்ப்புக்கள் போன்றவற்றில் உரிய கவனம் செலுத்தப்படும் எனும் உறுதிமொழி வங்கப்பட்டதாலேயே எதிரணி பக்கம் தாங்கள் சென்றதாகக் கூறினார் மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் தோட்டஉட்கட்டமைப்பு...
தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருப்பதா இல்லையா என்று, தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இன்று புதன்கிழமை(10) முக்கிய தீர்மானமொன்றை எடுக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய அரசியல் சூழ்நிலையையடுத்து, அவர் இந்த முக்கிய தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாசுதேவ நாணயக்கார தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருப்பாரா அல்லது வெளியேறுவாரா என்பது தொடர்பில் இன்று...
Loading posts...
All posts loaded
No more posts