- Tuesday
- January 14th, 2025
வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை என எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நான் உருவாக்கும் புதிய அரசில் தேசிய பாதுகாப்புச் சபையை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வடக்கில் இராணுவத்தை அகற்றுவதற்கு நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை. யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவ வீரர்கள், முப்படை தளபதிகள் வெளிநாடுகளில் தூதர்களாக செயற்படுகின்றனர். எனது...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்படும் பதாகைகளை அகற்றுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக யாழ்.மாவட்ட தெரிவித்தாட்சிகரும் மாவட்டச் செயலாளருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். தேர்தல் நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு யாழ்.மாவட்டச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல்...
மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இலங்கை இராணுவம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நாஷனல் என்ற தன்னார்வ அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படத்துடனான சில கடிதங்கள் இராணுவத்தினால், இராணுவ சிப்பாய்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அனுப்பப்பட்டதாக அது குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், அதனை மறுத்துள்ள இராணுவத்தினர், அவை வருடாந்தம் வழமையாக அனுப்பப்படும் சாதாரண வாழ்த்துச் செய்திகளே என்று...
இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவும் மோசமான காலநிலை காரணமாக மழை வெள்ளத்திலும் மண்சரிவுகளிலும் சிக்கி இதுவரை குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர். பதுளை மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவுகளில் சிக்கி, 19 பேர் உயிரிழந்துள்ளதாக பதுளை மாவட்ட பேரிடர் முகாமைத்துவ நிலையத்தின் துணை இயக்குநர் ஈ.எல்.எம். உதயகுமார கூறினார். இவர்களில் 11 பேரின் சடலங்கள்...
சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 2,500 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, நீதிமன்றத்தினூடாக கோரிக்கைப் பத்திரமொன்றை அனுப்பி வைத்துள்ளார். போலி கையெழுத்துடனான ஒப்பந்தமொன்றைத் தயாரித்து தனக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டார் என சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கா மீது குற்றஞ்சாட்டியே அவர் இந்த நட்டஈட்டுத் தொகையைக் கோரியுள்ளார்....
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் திலகரத்ன டில்ஷான், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக நுகேகொடை, தெல்கந்தை பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது கூறினார். இவ்வாறானதொரு நிலையில், அணியின் மூத்த வீரர்களாக குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜனவர்தன ஆகியோருக்கும் ஜனாதிபதி தரப்பிலிருந்து அழைப்பு வந்துள்ள போதிலும் அவ்விருவரும் அதனை மறுத்ததாக வெளியான...
எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மஹிந்த அரசுதான் பொறுப்புக்கூற வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத் பதியூதீன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- "பொதுபலசேனாவின் முஸ்லிம் விரோத எதிர்ப்பு நடவடிக்கைகளால், நாட்டில் சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என நாம்...
"இலங்கையில் வாழும் கிறிஸ்தவ மக்களால் இன்று கொண்டாடப்படும் நத்தார் பண்டிகை இயேசுவின் பிறப்பைக் குறித்து நிற்கிறது. இயேசுவின் பிறப்பு அவர் உலகுக்கு வழங்கிய பிரபஞ்ச அன்பு, சகிப்புத் தன்மை மற்றும் புரிந்துணர்வு என்பவற்றின் போதனையுடன் மானிடர்களின் விடுதலைக் கான வழியைக் காட்டியது என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகும்." - இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நத்தார்...
வடக்கு மாகாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை ஒருபோதும் வாபஸ் பெற்றுக்கொள்ளோம், என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ருவான்வெல்லவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய தரப்பினர் கோரிவருவதைப் போன்று வடக்கிலுள்ள இராணுவம் மீள அழைக்கப்பட மாட்டாது. மேலும் படையினரின்...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு முன்னாள் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றார். சிறிகொத்தவிற்கு முன்னால் இரண்டு குழுக்களுக்கு இடையில் தற்போது மோதல் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஐக்கிய நிபுணர்கள் சங்கம் சிறிகொத்த தலைமையகத்தில் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் சிறிகொத்தவிற்கு...
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவுக்கு முன்பாக பதற்றம் நிலவுகின்றது. அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் என்று கூறப்படும் குழுவுக்கும் ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள் குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்தே அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் வாகனநெரிசலும் ஏற்பட்டுள்ளது.
பிரபல்யமான இருவரின் கையொப்பங்களை சட்ட விரோதமாகவும் தவறான கையொப்பமாகவும் பயன்படுத்துவது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இவ்வாறான குற்றத்தினை செய்தமைக்காக திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன எனது குரலும் எனது கையொப்பமுமே இன்று ஜனாதிபதியின் வெற்றிக்கு உதவ பயன்படுகின்றது. எனது ஆதரவு மஹிந்த ராஜபக் ஷவிற்கு...
வடக்கில் படையைக் குறைத்தல் அல்லது முகாம்களை அகற்றுதல் என்ற பேச்சுக்களுக்கு இடமேயில்லை. ஆனால் வடக்கு, கிழக்கு மக்களுடன் சமாதானத்தை உறுதிப்படுத்த ஹெல உறுமய முன்னிற்கும். - இப்படித் தெரிவித்திருக்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க. அத்துடன், வடக்கு மக்கள் வாக்களிப்பதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனத் தெரிவித்த அவர், வடக்கு மக்கள் மஹிந்த -...
தமிழ் மக்களின் பிரச்சினைகளை பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த அரசு தயாராகவே இருக்கிறது. இப்படித் தெரிவித்திருக்கிறார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ. மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக்...
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவிருந்த கூட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த செய்யப்பட்டிருந்த மேடைக்கு துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெல்லம்பிட்டிய, உமகிலிய எனுமிடத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கே நேற்றிரவு துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனது மூன்றாவது பதவிக்காலத்தில் பிளவுபடாத இலங்கையை உறுதிசெய்வதுடன் புதிய அரசமைப்பொன்றை அறிமுகம் செய்வார் என்று உறுதியளித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டைத் துண்டாடுவதற்கு சர்வதேச, உள்நாட்டு சக்திகள் விரும்புகின்றன. இந்த சக்திகளுக்கு நான் சிறிதளவும் இடமளிக்கமாட்டேன்...
இழுபறி நிலையில் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று காலை வெளியிடப்பட்டது. இந்த விஞ்ஞாபனம் இன்று 23.12.2014 முற்பகல் 9 .30 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டது. “மஹிந்த சிந்தனை – உலகத்தை வெல்லும் வழி” என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான...
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டால், வெற்றிபெற்ற தரப்பிடம் தனது அரசாங்கம் அமைதியான முறையில் ஆட்சியைக் கையளிக்கும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். பிரிட்டனிலிருந்து வெளியாகும் ஃபைனான்ஸியல் டைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்கு அளித்த பதிலிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். எனினும், 'நான் தோல்வியடைப் போவதில்லை' என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ள...
மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வரம் கிடத்த போதிலும் அவர் தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம், நாடாளுமன்றத்தில் இருந்த மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நேற்று திங்கட்கிழமையுடன் இழந்தது. நாடாளுமன்றத்தில் 163 உறுப்பினர்களை அரசாங்கம் கொண்டிருந்தது. எனினும், அந்த எண்ணிக்கை நேற்றுடன் 148ஆக குறைந்துள்ளது. இதேவேளை, ஆளும் கட்சியிலிருந்து...
"ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இராணுவத்தினர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுகின்றனர் என்றும், அவர்கள் கடமைகளைச் சரிவரச் செய்வதில்லை என்றும், யுத்தத்தை வெற்றி கொண்ட சிப்பாய்கள் கீழ் மட்ட வேலைகளில் அமர்த்தப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்படும் கருத்துகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை." - இவ்வாறு பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய...
Loading posts...
All posts loaded
No more posts