தெளிவாக இருப்போம்: இந்த சிறிசேன அல்ல அந்த சிறிசேன!

எங்கள் பொது எதிரணியின் சின்னம், அன்னப்பறவை சின்னம். எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடும் சின்னம், அன்னப்பறவை சின்னம். இதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும். ஆர். ஏ. சிறிசேன என்ற ஒரு வேட்பாளரை தேடிப்பிடித்து, அவரை போட்டியிட வைத்து, அவருக்கு மைத்திரிபாலவை போல் ஆடை உடுத்தி,...

பொது எதிரணி தேர்தல் பிரசார மேடை மீது துப்பாக்கிச் சூடு: மூவர் காயம்!

இரத்தினபுரி, நிவித்திகலவில் எதிர்கட்சியினரின் தேர்தல் பிரசாரமேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த மூவரும் இரத்தினபுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும்,பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ad Widget

மைத்திரி- ரணில் ஒப்பந்தம் போலியானது | இரசாயனப் பகுப்பாய்வாளர் அதிரடி

மைத்திரி-ரணில் ஒப்பந்தம் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க முன்வைத்த ஆவணம் போலியானது என்று அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அதிரடியாக நிராகரித்துள்ளார். தனி ஈழம் வழங்குவது உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பாக பொது வேட்பாளர் மைத்திரி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இருப்பதாக அரசாங்கம் குற்றம் சாட்டியது. ஐக்கிய தேசியக் கட்சியின்...

மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து ஒருவர் தீக்குளிப்பு

மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் விதத்தில் ஒருவர் தீக்குளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான குறித்த நபரே இன்று காலை கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவுக்கு அருகில் தீக்குளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இவர் எரிகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எங்களை பிணங்களாக்குவதற்கு முயற்சி !! – மைத்திரிபால

எதிர்வரும் நாட்களின் தனக்கும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் கடுமையான மரண அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படவுள்ளது என எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பக்கமூன பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய வேட்பாளர், 'எங்களை பிணங்களாக்குவதன் மூலம்,...

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் பொலிஸார் திடீர் தேடுதல்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை அவதூறு செய்யும் பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பொலிஸார் தற்போது ஐக்கியதேசிய கட்சி தலைமையகமான சிறிகோத்தாவில் தேடுதலை மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தினரை அவமதிக்கும் பிரசுமொன்று தொடர்பாக தேடுதலை மேற்கொள்வதற்கு கங்கொடவில நீதிவான் நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை அவ்வாறான பிரசுரம்...

கையொப்பங்களை பரிசீலிக்கவும் நிபுணர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான இரகசிய ஒப்பந்தம் என கூறப்படுவதில் கள்ள கையொப்பம் இடப்பட்டுள்ளதாக கூறப்பட்டதையடுத்து, அது தொடர்பில் நிபுணர்களில் அபிப்பிராயத்தை பெறுமாறு குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கேட்டுக்கொண்டதையடுத்து, இந்த கட்டளை...

வடக்கு மக்களின் வாக்குகளை வேட்டையாட 2,000 இராணுவத்தினர் களத்திலாம்!

இரண்டாயிரம் இராணுவத்தினரைப் பயன்படுத்தி வடக்கு மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிக்க அரசு தீவிரமாக முயற்சித்து வருகின்றது என பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன. கொழும்பு 7 இல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை அவர் சுமத்தினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட...

ஹக்கீமும், சம்பந்தனும் கேட்பதை கொடுக்கலாமா? மக்கள் தீர்மானிக்கட்டும் – ஜனாதிபதி

யுத்தம், ஆயுதம்தான் நல்ல வியாபாரம். அந்த வியாபாரத்தை நாம் நிறுத்திவிட்டோம். 30 வருட யுத்த்ததை 4 வருடங்களில் முடித்து மரண பயத்தை இல்லாதொழித்தோம். நாட்டை ஒன்றிணைத்தோம். சம்பந்தனுக்கும், ரவூப் ஹக்கீமும் கேட்பதைக் கொடுக்க முடியுமா? மக்களாகிய நீங்களே தீர்மானியுங்கள். - இவ்வாறு தெரிவித்தார் ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌ஷ. மஹிந்த ராஜபக்‌ஷ என்றதும்...

ஜனாதிபதித் தேர்தல்: விதிமீறல்கள் இருமடங்காக உயர்வு

தற்போதைய இலங்கை ஜனாதிபதித் தேர்தலில், கடந்த தேர்தலைவிட இரண்டு மடங்காக தேர்தல் விதிமீறல் புகார்கள் அதிகரித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரை தேர்தல் வன்முறைகள் காரணமாக காயமடைந்த 46 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார் அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி....

வெற்றிலை போட்டால் உடம்புக்கு கேடு! வெற்றிலைக்கு போட்டால் நாட்டுக்கு கேடு!

கிராமங்களில் வாழ்பவர்கள் தங்களுடன் இருப்பதாகவும், நகரங்களிலேயே எதிரணிக்கு செல்வாக்கு இருப்பதாகவும் அரசாங்கம் ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விட்டுள்ளது. இது அப்பட்டமான பொய். கிராமங்களையும், நகரங்களையும் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒருசேர ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தயாராகி விட்டார்கள். மலரும் புதிய ஆண்டில் எனது இந்த கூற்று உண்மை என சந்தேகமற நிரூபிக்கப்படும். இந்த...

நான் இன்னுமொரு தமிழ் மாணவன் – ஜனாதிபதி ( விடியோ இணைப்பு)

இலங்கையில் உள்ளவர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கற்கவேண்டும். நான் தமிழ்மொழியை கற்க விருமபுகிறேன் நான் இன்னுமொரு தமிழ் மாணவன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் தந்தி தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அளித்த பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கேள்வி: நீங்கள் தேர்தல் பிரசார கூட்டங்கள் மற்றும் பொது...

முப்படையினரும் களத்தில், அவசர இலக்கங்களும் அறிவிப்பு

கடந்த சில நாட்களாக தொடர்ந்த சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகளில் மூப்படையினரும் ஈடுபட்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள 409 நிவாரண முகாம்களில் படையினர் தமது உதவிகளை வழங்கி வருவதாக இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன்...

கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்த மைத்திரி

பொது எதிரணியுடன் இணைந்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு ஒன்றுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுப்பதாக மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதான வீதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...

எதிர்க்கட்சி தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் மீது தாக்குதல்

இலங்கையில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவின் மூன்று தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் திங்களன்று அதிகாலை தாக்கப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். மஹியங்கனைய, தெனியாய மற்றும் வெலிகம ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார் காரியாலயங்கள் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக போலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்தார். அதிகாலை வாகனங்களில் வந்த சிலர் மஹியங்கனையவில் அமைந்துள்ள எதிர்க்கட்சிகளின் பொது...

நடிகர் சல்மான், ஜனாதிபதி மஹிந்தவுடன் பிரசார கூட்டத்தில் இணைந்தார்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொலிவூட் நடிகர் சல்மான் கான், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். பொரளையில் நடைபெறும் கூட்டத்திலேயே சல்மான் கான் இணைந்துகொண்டுள்ளார். இதேவேளை, இலங்கையுடன் தொடர்பை வைத்திருக்கின்ற பொலிவூட் நடிகையான ஜெகலின் பெர்னாண்டஸூம் அவர்களுடன் இணைந்து கொண்டுள்ளார். பொலிவூட் நடிகர் சல்மான் கானுடன் ஆறுபேர் அடங்கிய குழுவினர் இலங்கையை...

ஜனாதிபதி மீது வழக்கு தாக்கல் செய்யும் அரசியல் யாப்பு திருத்தம் செய்யப்படும் – மைத்திரி

நாட்டின் ஜனாதிபதி மீது வழக்கு தாக்கல் செய்யக்கூடிய அளவிற்கு அரசியல் யாப்புத் திருத்தம் கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதித் தேர்தல் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மொனராகலையில் நேற்று (28) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 2010ம் ஆண்டுக்குப் பின் ஜனாதிபதி மோசடியான ஆட்சி ஒன்றை...

சல்மான கான் தலைமையிலான குழு வந்தடைந்தது

பொலிவூட் நடிகர் சல்மான் கான் மற்றும் இலங்கையுடன் தொடர்பை வைத்திருக்கின்ற பொலிவூட் நடிகையான ஜெகலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட ஆறுபேர் அடங்கிய குழுவினர் இலங்கையை வந்தடைந்தனர். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகவே அக்குழுவினர் இன்று அதிகாலை நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெட் விமான சேவைக்கு சொந்தமான 9W256 என்ற இலக்கத்தைகொண்ட விமானத்திலேயே...

ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படும் சாத்தியம்?

இயற்கை அனர்த்தங்களால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. இதுதொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் மாவட்ட தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கிடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம்...

கிழக்கு மாகாணசபை எதிரணிகள் வசம்!அரசு பெரும்பான்மையினை இழந்தது!

முஸ்லிம்காங்கிரஸ் அரசில் இருந்து விலகி எதிரணி சனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவுதெரிவித்துள்ள நிலையில் கிழக்குமாகாணசபை யில் இருந்த அவர்களது 7 இடங்களும் எதிரணிக்கு ஆதரவாகி உள்ளது. இந்நிலையில் 37 இடங்களை கொண்ட கிழக்கு மாகாணசபை எதிரணிகள் வசம் வந்திருக்கிறது. அரசு சார்பில் 12 உறுப்பினர்களும் கூட்டமைப்பு சார்பில் 11 இடங்களும் ஐதேக சார்பில் 4 இடங்களும் உள்ளன. ரிசாத்...
Loading posts...

All posts loaded

No more posts