- Wednesday
- January 15th, 2025
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கியமைக்கு எதிராக முல்லேரியா பிரதேச சபை தலைவர் பிரசன்ன சோலங்காரச்சி தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம், திங்கட்கிழமை (12) அழைப்பாணை விடுத்தது. சோலங்காரச்சியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் பிரதிவாதிகளாக முன்னாள்...
மகிந்த ராஜபக்ச அரசால் குடியுரிமை பறிக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் குடியுரிமை வழங்கி புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். யுத்தம் நடைபெற்ற காலத்தில் 20 வருடங்களாக ஆட்சியில் இருந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடமே பாதுகாப்பு அமைச்சு இருந்து. கட்சிக்குள்ளும் வெளியிலும் தமக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்து...
யாழ்ப்பாணம் மற்றும் வடக்கில் எந்தவொரு அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என, தான் மகாநாயக்க தேரரிடம் தெரியப்படுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நேற்று கண்டியில் ஊடகவியலாளர்களிடம் பேசியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தற்போது அந்தப் பகுதியில் அமைதி நிலவுவதாகவும் இதுகுறித்து காலை யாழ்ப்பாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்....
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்விலும் மகிந்த தரப்பில் இருந்து பலர் மைத்திரிபாலவுக்கு ஆதரவாக கலந்துகொண்டனர் என்று தெரியவருகிறது.
வடக்கு வாழ் மக்கள் யாழ்தேவி ரயிலையும் ரயில் பாதையையும் அமைத்துத் தருமாறு கோரவில்லை எனவும், அவர்கள் அரசியல் அதிகாரத்தை கோரி நின்றதாகவும் முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரவித்துள்ளார். கடந்த 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தோல்வியைத் தழுவியமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மக்களுக்கு...
பிடியாணை பிடிக்கப்பட்டிருந்த ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் பண்டாரவளை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தரான செந்தில் தொண்டமான், தபால்காரர் பெரியசாமி ஞானசேகரனை கடந்த 3ஆம் திகதி தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே பண்டாரவளை நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சுப் பதவி எதுவும் தேவையில்லை, வெளியிலிருந்தே தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்கிறோம். - இப்படித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார் என அறிய வருகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்துப் பேசியபோதே சம்பந்தன் அவருக்கு இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிய வருபவை வருமாறு:- தமிழ்த்...
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று முதன்முதலாக சந்திக்கவுள்ளார். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ள இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும்...
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை பதவி விலகக்கோரி புதுக்கடை உயர் நீதிமன்ற வளாகத்தின் முன்னால் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவும் (வயது 70) சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் (வயது 70) தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் இன்று திங்கட்கிழமை உரையாற்றவிருக்கின்றார். அவர், தலைமையில் சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் கொழும்பில்...
முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க, பிரதம நீதியரசராக இன்று திங்கட்கிழமை மீண்டும் பதவியேற்றுக்கொள்ள இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவை சுற்றியிருந்த எருமை மாட்டுக் கூட்டமே அவரை இல்லாமல் செய்தது என பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சுற்றியிருந்தது போன்று எருமை மாட்டுக் கூட்டமொன்றை அமைச்சர்களாக, அதிகாரிகளாக நியமித்துக் கொள்ள வேண்டாம் என புதிய ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் கோருகின்றோம். தேர்தலில் அடைந்த வெற்றிக்காக அவருக்கு எமது...
இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கட்சியின் தலைவர் பதவியில் இரு வேறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. கட்சியின் புதிய தலைவராக மைத்திரிபால சிறிசேனவை நியமித்துள்ளதாக கட்சியின் ஒரு தெர்குதி உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.எனினும், கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றமில்லை என கட்சியின் பொதுச் செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட...
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமிப்பதற்கு கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுவரை இறுதி முடிவுகள் வெளியாகவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியக்குழு கூட்டம், முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கூடியுள்ள நிலையில் இந்த பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.மைத்திரிபால சிறிசேன...
தேசிய அரசு ஒன்றை அமைப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கண்டி எண்கோண மண்டபத்திலிருந்து அவர் நாட்டுமக்களுக்கு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டின் ஜனாதிபதியாக என்னை தெரிவு செய்த அனைத்து மக்களுக்கும் முதலில் எனது...
அரச ஊழியராக இருந்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தேர்தல் சட்ட விதிகளை மீறும் விதத்தில் நேரடியாக அரசியலில் ஈடுபட்டார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுக் குறித்து விசாரணைகள் நடத்தப்படும். அரச ஊழியர்கள் எதிர்காலத்தில் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமையைத் தடுக்கும் நோக்கத்துடனேயே இது முன்னெடுக்கப்படுகிறது. - இவ்வாறு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பேச்சாளரும் எம்.பியுமான ராஜித...
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னராக காலப்பகுதி மிகவும் அமைதியானதாக இருக்கின்றது. வடக்கிலும் அவ்வாறானதொரு நிலைமையே காணப்படுகின்றது என்று தெரிவித்துள்ள இராணுவப்பேச்சாளர் ருவன் வணிகசூரிய, வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் மீது கல்வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை, வடக்கில் எந்தவொரு இடத்திலேயேயும் விடுதலை புலிகளின் கொடி ஏற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். வடக்கில்...
பாதுகாப்பு அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக பி.எம்.யு.டி பஸ்நாயக்க நேற்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பஸ் புதிய செயலராக நியமனம் பெற்ற பஸ்நாயக்க சுற்றுச்சூழல் விவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவத்தளபதி...
மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அர்ச்சுண மகேந்திரன் அல்லது இந்திரஜித் குமாரசுவாமி இருவரில் ஒருவர் இப்பதவிக்கு நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.அருச்சுணா மகேந்திரன், ரணில் விக்கிரமசிங்கவின் முன்னைய ஆட்சிக்காலத்தில் முதலீட்டு அதிகார சபையின் தலைவராக கடைமையாற்றி இருந்தவர் என்பது...
புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன இலங்கையின் உயர் பாதுகாப்புக் கட்டமைப்பில் பல மாற்றங்களைச் செய்யவுள்ளார் என அவருடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன. விமானப் படைத்தளபதி ஏயார் மார்ஷல் கே.ஏ.குணதிலக எதிர்வரும் 19 ஆம் திகதி - இன்னும் 9 நாள்களில் - ஓய்வுபெறவிருக்கின்றார். அதுவரை அவரை அப்பதவியில் தொடர அனுமதித்து, அதன்பின்னர் தமது நம்பிக்கையான...
Loading posts...
All posts loaded
No more posts