ஜனாதிபதி மைத்திரியின் கட்அவுட், பேனர்களை அகற்ற உத்தரவு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கடஅவுட்கள் மற்றும் பேனர்களை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கையின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்ட பின் நாடு முழுவதிலும் அவரது கட்அவுட்கள் மற்றும் பேனர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை உடனடியாக அகாற்றுமாறு ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் தமது உருவப்படம் உள்ள கட்அவுட்கள் மற்றும் பேனர்களை காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி...

பொன்சேகாவுக்கு உயர் பதவி: இன்று தீர்மானிக்கப்படும்

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு தரப்பில் உயர் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் பீ.எம்.யூ.டீ.பஸ்நாயக்கவிடம் கேட்டபோது, 'அவ்வாறானதொரு தீர்மானம் இருப்பின், அந்த தீர்மானம் ஜனாதிபதியால் எடுக்கப்பட்டு ஜனாதிபதி செயலாளர் ஊடாக தனக்கு அறிவிக்கப்படும் என்றும் இதுவரையில் அவ்வாறானதொரு அறிவிப்பு தனக்கு கிடைக்கவில்லை'...
Ad Widget

ரணில் தலைமையில் கன்னி அமைச்சரவைக் கூட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவைக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலேயே அமைச்சரவைக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது. அமைச்சரவைக்கூட்டத்துக்கு முன்னதாக இன்னும் சிலர் அமைச்சர்களாக அல்லது பிரதியமைச்சர்களாக பதவியேற்றுக்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாப்பரசர் முதல் தடவையாக தமிழில் ஆசிச்செய்தி

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் முதல் தடவையாக தனது உத்தியோக பூர்வ ருவிட்டர் தளத்தில் இலங்கை மக்களுக்கு தமிழ் மொழியில் ஆசிச்செய்தி வெளியிட்டுள்ளார். பாப்பரசர் இலங்கைக்கான பயணத்தை நிறைவு செய்து கொண்டு நேற்றுக் காலை கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாகப் பிலிப்பைன்ஸ் நோக்கிப் பயணமானார். அதற்கு முன்னதாக அவர் தனது உத்தியோக பூர்வ ருவிட்டர் தளத்தில் இறைவன்...

தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து செயற்பட விருப்பம் – சுவாமிநாதன்

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்துவைப்பதுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை அடங்கலாக சகல தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து வேலை செய்ய விரும்புவதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து விவகார அமைச்சராக பதவியேற்றுள்ள டி.எம். சுவாமிநாதன், தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு...

தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை

விசாரணைக் கைதிகளாக நீண்டகாலமாக இருக்கும் அனைவரது விடுதலை பற்றியும் ஜனாதிபதி செயலாளர் மற்றும் உயரதிகாரிகளிடம் எடுத்துரைப்பதோடு அவர்களது விடுதலையை மிகவிரைவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரானந்த பல்லேகம கூறினார். தைப்பொங்கல் நிகழ்வு, கொழும்பு வெலிக்கடை மற்றும் புதிய மகசின் விளக்கமறியல் சிறைச்சாலைகளில் வியாழக்கிழமை (15) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டபோதே சிறைச்சாலைகள்...

ஜனாதிபதியின் ஆலோசகர்களாக மூவர் நியமனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகர்களாக ஒஸ்டின் பெர்ணான்டோ, திலக் ரணவிராஜா, டபிள்யூ.ஜே.எஸ்.கருணாரட்ண ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நியமனக்கடிதங்களை ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன வழங்கி வைத்தார். அரச சேவையில் பல அனுபவகங்களை கொண்ட ஒஸ்டின் பெர்ணான்டோ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளராவார். பல தசாப்தங்களாக அரச உயர்பதவிகளை வகித்த சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான திலக் ரணவிராஜா,...

பசில் இராஜினாமா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

பாப்பரசரை மஹிந்த, கோட்டா சந்தித்தனர்

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அயோமா ராஜபக்ஷ ஆகியோரை கொழும்பிலுள்ள வத்திக்கான் தூதரகத்தில் நேற்று மாலை சந்தித்ததாக, பாப்பரசரின் பேச்சாளர் அருட்தந்தை பெட்ரிக்கோ லம்பேட் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன், பாப்பரசர் சுருக்கமான கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும் அவர்...

தலைவர் பதவியை ஒப்படைக்கத் தயார் – மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சித்தலைவர்களுக்கிடையில் நேற்று புதன்கிழமை (14) இரவு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி விலகிவிடக்கூடாது என்று, தேசிய சுதந்திர...

நாமலுக்கு மரண அச்சுறுத்தல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு தொலைபேசி மூலம் நேற்று செவ்வாய்க்கிழமை (13) மாலை மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தங்காலை பொலிஸ் நிலையத்தில் அவர் முறைபாடொன்றைச் செய்துள்ளார்.

இடைக்கால வரவு – செலவுத் திட்டம் ஜனவரி 29 இல்! – நிதி அமைச்சர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசின் இடைக்கால வரவு - செலவுத் திட்டம் ஜனவரி 29 இல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அவர் நிதி அமைச்சக வளாகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போது, புதிய அரசாங்கத்தின் பிரதான நோக்கம் நாட்டு மக்களின் நலனில் அக்கறையுடன்...

திவிநெகும வங்கிக் கணக்கில் கோடி ரூபா கொள்ளை?

´திவிநெகும´ வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் வங்கிக் கணக்கில் இருந்து 2015.01.06ம் திகதி 1,456,980,000 ரூபா பணம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை மீளப் பெறுவது குறித்து உரிய விசாரணை நடத்துமாறு கணக்காய்வாளர் நாயகத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் சாமர மத்துமகலுகே வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இத்தகவல் வௌியிடப்பட்டுள்ளது. திவிநெகும...

மீட்கப்பட்ட சிறிய ரக விமானம் திரைப்பட இயக்குநர் ஒருவருடையதாம்!

நாராஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மிட்கப்பட்ட இருவர் மாத்திரம் பயணிக்கக் கூடிய சிறிய ரக விமானம் ஒரு திரைப்பட இயக்குநர் ஒருவருக்குச் சொந்தமானதென தெரியவந்துள்ளது. விமானம் மீட்கப்பட்ட பின், குறித்த திரைப்பட இயக்குநர் மீட்கப்பட்டது தன்னுடைய விமானம் என ஒப்புக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். மேலும்...

ஜனாதிபதி செயலகத்துக்குரிய வாகனங்களை மீளப்பெறப் பணிப்பு!

ஜனாதிபதி செயலகத்துக்குரிய வாகனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து விரிவான விசாரணையை நடத்துமாறு குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்துக்குரிய வாகனங்கள் சிலவற்றை வெளியாட்கள் பயன்படுத்திவருகின்றமை குறித்து வெளியான தகவல்களை அடுத்தே ஜனாதிபதி இந்த உத்தரவை வழங்கியுள்ளார். இவ்வாறு பயன்படுத்தப்படும் வாகனங்கள் அனைத்தையும் உடனடியாக மீளப்பெறுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மஹிந்த மற்றும் சகோதரர்களுக்கு எதிராக ஜே.வி.பி. முறைப்பாடு!

பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தினர் என்று குறிப்பிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அவரது சகோதரர்கள் மற்றும் அதிகாரிகள் சிலருக்கு எதிராக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் மக்கள் விடுதலை முன்னணி முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவிக்கையில், முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்...

மகிந்தவின் தோல்விக்கு அவரது சோதிடர் கூறும் காரணம்!!

காமன்வெல்த் அமைப்பின் தலைவர் பதவியை ஏற்றதாலேயே இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைய நேரிட்டது என்று அவரது ஆஸ்தான சோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சேவிடம் 2 ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தலை நடத்துங்கள் என்று கூறியதுடன் தேர்தல் நாளை குறித்து கொடுத்தும் மகிந்த ராஜபக்சவின் வேட்புமனுவுக்கான நேரத்தை தேர்ந்தெடுத்தது,...

ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்க சூழ்ச்சி எதுவும் செய்யவில்லை – மஹிந்த

ஜனாதிபதித் தேர்தலின் போது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள சூழ்ச்சி முயற்சிகளில் ஈடுபட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அவதானித்த பின் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதியானதை அடுத்து அதிகாரத்தை அவரிடம் ஒப்படைக்க முன்வந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தினத்தன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

அமைச்சர்கள் நாட்டுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும்

'அமைச்சர்கள் நாட்டுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும் மக்கள் சேவையின் போது குற்றச்செயல்கள், ஊழல் மோசடிகளில் ஈடுபடுவர் மீது அவர் அமைச்சராக இருந்தாலும் அவருக்கு எதிராக பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பது தமது அரசாங்கத்தின் உறுதியான கொள்கையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புதிதாக நியமனம் பெற்ற அமைச்சர்கள் மக்கள் நம்பிக்கையை வெல்லக்கூடியவர்களாகவும், மக்களுக்கு முன்மாதிரியாக செயற்படக்கூடியவர்களாகவும்...

பரிசுத்த பாப்பரசர் இலங்கை மண்ணில் காலடி வைத்தார்!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை சற்று நேரத்திற்கு முன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். ஏயார் இத்தாலியா விமானத்தின் மூலம் பரிசுத்த பாப்பரசர் இலங்கை மண்ணை வந்தடைந்தார். பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி பாரியார், கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன்...
Loading posts...

All posts loaded

No more posts