- Wednesday
- January 15th, 2025
சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் அவரது மகன் எக்சத் சேனாரத்ன ஆகியோரை ஏப்ரல் 2ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ராஜித்தவின் இளைய மகன் இளம் பெண் ஒருவரைக் கடத்தி தன்னுடன் வைத்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் ராஜித்த சேனாரத்னவின் இளைய மகனால், தனது மகள் கடத்திச்...
வௌிநாட்டுத் தீவிரவாதிகள் பட்டியலில் இருந்த 16 குழுவினர் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம்சாட்டப்பட்டு சில புலம்பெயர் அமைப்புக்களும் தனிப்பட்ட நபர்களும் தடை செய்யப்பட்டிருந்தனர். இந்தநிலையில் உரிய ஆதாரங்கள் இன்றி...
இலங்கையில் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான ஆறு நிபந்தனைகள் விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட உள்ளது. அதற்கமைய, தொழில் தகைமைகள் அல்லது கல்வித் தகைமைகள் வைத்திருத்தல். இலங்கையில் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான நிலையான சொத்துக்களை வைத்திருத்தல். இலங்கை மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட வங்கியொன்றில் 2.5 மில்லியனுக்கு...
சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்கள் மூவரையும் அதிலிருந்து விடுதலை செய்துகொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகின்றது என்றும், இது விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சு நடத்துவதற்காக ஜனாதிபதியின் விசேட தூதுவராக அங்கு செல்வதற்கு அமைச்சர் ஹக்கீம் தயார் நிலையிலேயே இருக்கின்றார் என்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார்....
பேஸ்புக், அதாவது முகநூலில் இனிமேல் என்னென்னவையெல்லாம் அனுமதிக்கப்படும்; எவையெவையெல்லாம் அனுமதிக்கப்படாது என்பது குறித்த தனது புதிய விதிமுறைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆபாசமானவை, ஆபத்தை விளைவிப்பவை, தற்கொலை, கொலை போன்ற உயிர்ப்பலியை ஊக்குவிப்பவை, குற்றச்செயல் தொடர்புடையவை, துவேஷத்தை தூண்டுபவை, பொதுவாழ்வில் இருப்பவர்கள் மீதான வன்மான தாக்குதல் உள்ளிட்ட பலவிதமானவை இனிமேல் முகநூலில் அனுமதிப்படாது என்று முகநூலின்...
மத்திய வங்கியின் திறைசேரி பிணைப் பத்திரங்கள் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை, மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் விடுப்பில் செல்லவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று ஆற்றும் விஷேட உரையின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை மத்திய வங்கியினால் விற்பனை செய்யப்பட்ட திறைசேரி பிணைப் பத்திரங்கள்...
இலங்கையில் உள்நாட்டுப்போர் உக்கிரமடைந்து காணப்பட்ட காலப்பகுதியில் இராணுவத் தளபதியாகச் செயற்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு 'பீல்ட் மார்ஷல்' பதவி உயர்வு வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 27ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. இலங்கையில் இராணுவ அதிகாரியொருவர் பீல்ட் மார்ஷலாகத் தரமுயர்த்தப்படுவது இதுவே முதல் தடவையாகும். ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி...
பண்டாரவளை - அம்பதன்டேகம - கலஹிட்டியாவ பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவு காரணமாக 17 குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. 25 அடி உயரமுடைய பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய, அப்பகுதியில் வாழ்ந்த 17 குடும்பங்கள் அகற்றப்பட்டுள்ளதுடன் அவர்கள் தங்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். இந்த நிலச்சரிவினால் தெய்வாதீனமாக உயிர்,...
சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் இளைய மகனால், தனது மகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக, குறித்த பெண்ணின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ராஜித்த சேனாரத்னவின் மகனான எக்சத் சேனாரத்ன தனது மகளை வாகனம் ஒன்றில் வந்து கடத்திச் சென்றதாக அவரது தந்தை...
இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் புதிய வழிமுறைகளின் அடிப்படையிலேயே நடைபெற வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் விருப்ப வாக்கு நடைமுறை காரணமாக, தேர்தல்களில் பல்வேறு சீர்கேடுகள் இடம்பெறுகின்றன, கட்சிகளுக்கு உள்ளேயே பிரச்சினைகள் ஏற்படுகின்றன அதன் காரணமாக தேர்தல் நடைமுறை மாற்றி அமைக்கப்பட வேண்டும் எனும் பொதுவான கருத்து...
பொலன்னறுவை மாவட்டத்தின் பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நேற்று (11) இரவு சுமார் 8.20 அளவில் இவ்வாறு நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது
கிராமங்களில் மண்ணையும் மரங்களையும் நேசித்து இயற்கையோடு ஒட்டி வாழ்பவர்கள் விவசாயிகள். விவசாயிகளுக்கும் இறுதி ஆசைகள் உண்டு. ஆனால் அந்த ஆசைகளும் இயற்கையோடு ஒட்டியே பெரும்பாலும் அமைந்துவிடுகின்றன. இலங்கையில் மத்திய மாகாணம், தம்புள்ளை நகருக்கு அருகே இருக்கின்ற சீகிரிய பிரதேசத்திலிருந்து சற்றுத் தொலைவில் இருக்கின்றது உடவலயாகம என்ற விவசாயக் கிராமம். இங்கு மண்ணையும் மழையையும் நம்பி வாழ்க்கை...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விபூசிகாவின் தாயார் ஜெயக்குமாரியை உடன் விடுவிக்குமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தின் முன்பாக இன்று முற்பகல் நடைபெற்றது. மன்னார் மாதர் அமைப்புடன் இணைந்து பெண்கள் அமைப்பு உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. இதில் ஜனநாயக...
இலங்கையின் இறுதிக்கட்ட போரின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஒரு உள்நாட்டு விசாரணை நடப்பதை தான் ஏற்றுக்கொள்வதாக முன்னாள் இராணுவ தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணை ஒன்றுக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த போதே செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை இராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை என்பதே தமது...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும் கடற்படையின் லெப்டினன் பதவிநிலை வகிப்பவருமான யோஷித்த ராஜபக்ஷ, பொலிஸ் குற்றவியல் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக இன்று காலை 8.40க்குச் சென்றார். இதன்போது, யோஷித்தவின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவும் சென்றிருந்தனர். வாக்குமூலத்தை வழங்கிவிட்டு, அவ்விருவரும் இன்று முற்பகல் 10.40க்கு பொலிஸ் குற்றவியல் பிரிவிலிருந்து வெளியே வந்தனர்....
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று விரைவில் இடம்பெறவுள்ளது. என்று அமைச்சரவையின் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். உத்தேச தேர்தல் முறைமையில் மேற்கொள்ளவேண்டிய மாற்றம் தொடர்பிலான பரிந்துரைகளை அமுலாக்கம் செய்வது குறித்து இந்த சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலின் போது அளிக்கப்பட்ட 100...
கொழும்பு, நாரஹன்பிட்டி பகுதியில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற வசீம் தாஜூதீன் என்ற றகர் வீரரின் மரணம் விபத்தால் ஏற்பட்டதல்ல என உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , தங்கத்தினால் செய்யப்பட்ட ஆறு அங்குலம் உயரமான திரிசூலம் ஒன்றில் வெள்ளி காசு ஒன்றை கட்டி காணிக்கையாக செலுத்தியுள்ளார். நேற்று திங்கட்கிழமை காலையில் இருந்த சுபநேரமான 8.12க்கே அவர் இவ்வாறு காணிக்கை செலுத்தி தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கதிர்காமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று,...
பகிடிவதை காரணமாக மன உலைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் 23 வயதான எஸ்.எஸ். அமாலி என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் ஹோமாகம பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது....
தமிழீழ விடுதலைப்டிபுலிகளுக்கு எதிரான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட மே 18 ஆம் திகதியில் நிகழ்வுகளை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான புதிய கூட்டணியரசு தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் மஹிந்த ஆட்சியில் பெரும் எடுப்பில் கொண்டாடப்பட்ட 'போர் வெற்றி விழா'வானது பெயர் மாற்றத்துடன் 'இராணுவ பாராட்டு விழா'வாக புதிய...
Loading posts...
All posts loaded
No more posts