- Thursday
- January 16th, 2025
கடந்த காலங்களில் எதற்கும் அஞ்சாத தோரணையில் கம்பீரமாக தனது பிரதிமையை காண்பித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, ராஜபக்ஷ தேர்தல் மேடையில் மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. பிலியந்தலவில் கூட்டமொன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் கைத்தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. ஐக்கிய மக்கள்...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்த முன்னாள் ஜனாதிபதி உட்பட பல்வேறு விமர்சனங்களுக்குள்ளான பலருக்கு வேட்மனு வழங்கவேண்டியேற்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையொன்றை இன்று ஆற்றவுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்குவது தொடர்பில் தான் தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், இருப்பினும் அது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்குத் தமக்கு அதிகாரமில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என பிரஜைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்ட விடயத்தைக் குறப்பிட்டதாக தொழிற்சங்கத் தலைவர்...
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக நாட்டில் அரசியல் பதற்ற நிலை அதிகரித்துவரும் வேளையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க நேற்றுப் பிரிட்டனுக்குத் திடீர் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முக்கிய சகாவான சந்திரிகா குமாரதுங்க சமீபத்தில் இடம்பெற்ற மஹிந்த தரப்பு விடயங்கள் குறித்து கடும் அதிருப்தியடைந்துள்ளார் எனவும், இந்நிலையிலேயே அவர் பிரிட்டன் பயணமாகியுள்ளார்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தாரின் காலை ஆகாரத்திற்காக 9.4 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாக வௌியான தகவல் வேண்டுமென்றே திரிக்கப்பட்ட ஒன்று என, அவரது ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இது குறித்து மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவினர் வௌியிட்டுள்ள அறிக்கையில், ராஜபக்ஷ குடும்பத்தினர் ஹில்டன் ஹோட்டலில் இருந்து ஒரு வேளை உணவை பெற்றுக் கொள்ள 9.4...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, பொலன்னறுவை மேல்நீதிமன்ற நீதிபதி அமின்டர் செனவிரத்ன முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே நீதிபதி, மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார். 2005/2006 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே இந்த கொலை முயற்சி...
தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருப்பவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரச வாகனங்களை பயன்படுத்தினால் அதற்கான கட்டணங்களை அறவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சுகளின் செயலாளர்களுக்கு பணித்துள்ளார். தேர்தல் நடவடிக்கைகளுக்காக அமைச்சர்கள், அரசாங்கத்தின் வாகனத்தை பயன்படுத்தினால் அதற்கான கட்டணங்களை அறவிடுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே யோசனையை முன்வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, தற்போதைய அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள...
கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட அதிர்வு, நிலநடுக்கமா என்பது தொடர்பில் கண்டறிவதற்கான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. பம்பலப்பிட்டி பகுதியில் நேற்று (01) மாலை நான்கு மணியளவில் மூன்று தடவைகள் அதிர்வுகள் ஏற்பட்டதை தாம் உணர்ந்ததாக அந்தப் பகுதி மக்கள் குறிப்பிட்டனர். அதிர்வுகள் உணரப்பட்டதை அடுத்து பாதுகாப்பான இடத்திற்கு தாம்...
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பிலான அறிக்கை ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவரது சகேதரர்களான கோத்தபாய, பசில் ராஜபக்ச ஆகியோர் உள்ளிட்ட 42 பேருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ...
பாடசாலை முடிந்து தனியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த 18 வயது மாணவியொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற பஸ் சாரதியொருவருக்கு, வாழ்க்கையில் மறக்க முடியாத தண்டனையொன்றை குறித்த மாணவி வழங்கிய சம்பவமொன்று அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மேற்படி மாணவி, பாடசாலை முடிந்து தனிமையில் வந்துகொண்டிருந்த போது, மேற்படி சாரதியும் மோட்டார்...
தமிழ் மொழியை படிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆசைப்படுகின்றார் என்று அலரி மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. கொழும்பில் சில வாரங்களுக்கு முன்னர் கம்பன் விழா இடம்பெற்றது. இதில் சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் நீர்ப் பாசனம், நீர் விநியோக அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கவியரங்கம் இடம்பெற்றது....
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் அறுதிப்பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 215 பேர் வாக்களித்தனர். எதிராக சரத் வீரசேக எம்.பி வாக்களித்தார். ஜனநாயக தேசிய முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார எம்.பி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்த சட்டமூலத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,...
புத்தரிசி பொங்கல் திருவிழா ஜனாதிபதி தலைமையில் சோமாவதி புனித பூமியில்புத்தரிசி பொங்கல் திருவிழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (15) சோமாவதி புனித பூவியில் நடைபெற்றது. அறுவடை செய்யப்பட்ட புது அரிசியின் முதற்பகுதியை புத்தபெருமானுக்கு பூஜை செய்யப்பட்டது. அடுத்த விளைச்சல் செழிப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இப்பூஜை செய்யப்பட்டது. விவசாயிகளுடன் அந்நிகழ்வில் கலந்து...
உக்ரேன் பிரிவினைவாதப் போராளிகளுக்கு, ஆயுதங்களை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் சிக்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மரு மகனும், அவரது ஆட்சிக்காலம் முழுவதும், ரஷ்யாவுக்கான தூதுவராகப் பணியாற்றியவருமான உதயங்க வீரதுங்க, நைஜீரியாவில் இயங்கும் போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கும் ஆயுதம் விற்பனை செய்திருக்கலாம் என இலங்கை அரசு சந்தேகம் வெளியிட்டுள்ளது. [caption id="attachment_42831" align="aligncenter" width="494"]...
இலங்கை, பொருளாதார வளர்ச்சிப் போக்கில் அணிசேராக் கொள்கையைப் பின்பற்றி, உலகில் பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைப்புறவை நிலைநிறுத்தும். எந்த நாட்டுக்கும் எதிராக நாம் முரண்பாட்டை ஏற்படுத்தமாட்டோம்.' - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால, அங்கு வானொலி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...
வீட்டுக்கு வந்து தனது பெற்றோரை கடுமையாகப் ஏசி, அவர்களை தாக்கியதனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் பிரியந்த சிறிசேனவை கோடரியால் தாக்கினேன் என்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் இஷார லக்மால் சபுதந்திரி தெரிவித்துள்ளார். வெலி ராஜு என்றழைக்கப்படும் பிரியந்த சிறிசேனவின் படுகொலைச் சந்தேகநபராக லக்மால் சபுதந்திரி, நீதிமன்ற உத்தரவுக்கிணங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் பொலிஸார்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான பிரியந்த சிறிசேனவின் (வயது 43) இறுதி சடங்கு எதிர்வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு, பொலன்னறுவை பொது மயானத்தில் இடம்பெறும். அவருடைய பூதவுடல், எத்துகல்பிட்டியவில் உள்ள அன்னாரது வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. தனது நண்பரொருவரினால் கடந்த 26ஆம் திகதி, கோடாரி தாக்குதலுக்கு இலக்கான...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் மேற்கொள்ளப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள், பிரதியமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கு மேலதிகமாக மேலும் சில அமைச்சுக்கள், பிரதியமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுப்பதவிகள் வழங்கப்படவிருப்பதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 100 நாட்கள் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல் மற்றும்...
இலங்கையில் நான்கு வருடங்களுக்கு பின்னர் இன்று முதல் இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒழுங்குத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை அறிவித்துள்ளார். இரட்டை குடியுரிமைக்காக இதுவரை சுமார் 300 பொதுமக்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்களும் புதிய விண்ணப்பங்களுடன் பரிசீலிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களின்போது வயது வந்தவர்களுக்கு 250,...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேர் அமைச்சர்களாகவும் 10 பேர் பிரதியமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 16 அமைச்சர்களில் ஐவர் இராஜாங்க அமைச்சர்கள் எனவும், 11 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். 01. ஏ.எச்.எம்.பெளசி - அனர்த்த முகாமைத்துவம் 02. எஸ்.பி.நவீன் - தொழில்...
Loading posts...
All posts loaded
No more posts